புன்னகையிலிருந்து விடுதலை - ஜதி

Photo by Jake Hills on Unsplash

ஒரு புன்னகையின் பாரமென்பது !
அதனைத் துயரத்திலிருக்கையில்!
புரியும்போதே அறியப்படுகிறது!
இக்கணம் நானணிந்துள்ள!
இப்புன்னகைதரும் வலிகள் !
கொஞ்சநஞ்சமல்ல!
எனினும்,!
புன்னகையைக் கழற்றி வைப்பதென்பது !
அவ்வளவு எளிதானதல்ல!
எப்பொழுதுமொரு புன்னகையை!
அணிந்திருக்கவேண்டிய கட்டாயம்!
எப்படியோ உண்டாகிவிட்டது!
ஒரு காக்கும் மருந்தென்று!
அனைவராலும் அது!
ஏற்கப்பட்டுள்ளது!
பீறிட்டெழும் ஓலங்கள்!
நெஞ்சத்துள் கனக்க,!
விக்கியடைக்கும் தொண்டையின் !
வலியையும் மீறிப் !
புன்னகைப்பதென்பது!
எத்தனை கொடூரம்...!
மரணம் கண்டு நகைப்பதென்பது!
மிகவும் அநீட்சையானதே...!
ஏனெனில் மரணம் மகத்தானது...!
இவ்வாழ்வோ மிகக்கொடியது!
அதனினும் கொடியது !
இவ்வாழ்வைக்கண்டு நகைக்கவேண்டுமென்பதே!
இருப்பினும்,!
புன்னகைக்கா திருத்தல்!
முகத்தின் நிர்வாணம்!
என்றே எண்ணப்படுகிறது!
சிறு தனிமையேனும் கிடைக்குமாயின்!
சற்றேனும் புன்னகையினைக் கழற்றிவைத்துவிட்டு!
மனமாற அழுதுமுடித்தபின்!
மறவாமல் மீண்டும் அணிந்துகொள்வேன்!
-ஜதி !
[20080912]
ஜதி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.