01.!
ஏய் குழந்தாய்…!!
--------------------!
பூவில் ஒருபூவாய்!
அழகிற்கோரணியாய்!
அடியோ தாமரையிதழாய்!
அகம்பாவம் அறியாதவளாய்!
குணம் வெள்ளை நிறமாய்!
குறுநகையால் வெல்வாய்…!
மகிழ்ந்தால்!
மங்கலப்புன்னகையாய்…!
மதியால்!
மாநிலம்!
காப்பவளாய்…!
அழுதால்!
ஆற்றிடை ஆம்பல் மலராய்…!
அதிர்ந்தால்!
நாற்றிடை நாதஸ்வரமாய்…!
அயர்ந்தால்!
தென்னங்கீற்றிடைப் பூவாய்!
உறைவாய்.!
சீருடைச் சிப்பிக்குள்!
முத்தாய்…!
தேரிடைப் பூவுக்குள்!
தேனாய்…!
நேர்த்தியாய்!
பாடசாலையில் பயில்வாய்!
சீரிய குழந்தாய்!
சுறுசுறுப்பாய்...!!
!
02.!
முடிவை நோக்கி… !
--------------------------!
முடிவை நோக்கி…!
வாழ்க்கை செல்கிறது!!
வாழ்வை விரும்பினாலென்ன…!
விரும்பாமல் சலித்தாலென்ன!
முடிவை நோக்கி!
ஆயுள் செல்கிறது….!
ஆசைகளை அடைந்த போதும்!
நிராசைப்பட்டு சடைந்த போதும்!
எமது முடிவுப் புள்ளி!
பிறந்ததில் இருந்து!
எமை நோக்கி!
வந்து கொண்டேயிருக்கிறது…..!
இலட்சியம்!
வெளுத்துப் பிரகாசிக்கலாம்…!
கசந்து காய்ந்து போகலாம்…!
“வெற்றி” சுவை கூறலாம்..!
மறுத்து தொலைவாகலாம்.!
பூமி புதிர் போடலாம்..!
காற்று கவி பாடலாம்..!
சோகம் வதை பண்ணலாம்..!
இன்பம் கதை சொல்லலாம்..!
நாம் கடி மலரில் துயிலலாம்..!
காற்றில் பறக்கலாம்..!
கீதம் பாடலாம்!
ஓளிக்கீற்றில் நடக்கலாம்..!
எத்திசையில் போனாலும்!
“முடிவை” நோக்கியே செல்கிறோம்!
அதை முகர்ந்து பார்க்கத்தான்!
இன்னமும்!
இதயங்கள் துடிக்கின்றன
ஜே.ஜுனைட், இலங்கை