மெழுகுவர்த்தியாய் !
உருகி !
வெளிச்சங்கொடு… !
“சோனாமாரி”யிலும் !
அணையாதே!!
மேக கணங்களாய் !
உழை… !
மழைத்துளிகளாக !
சேவை செய்…!
பூமியைப்போல !
பொறுத்திடு… !
அகழ்வாரை !
அன்போடு நோக்கு…!
மின்னலிடம் !
வெளிச்சங் கேள்… !
இடியைத் தாங்கும் !
இதயம் பெறு… !
காற்றிலே !
கீதம் அமை… !
கைப்பிடிக்குள் !
உலகம் எடு…!
கால வெள்ளத்தோடு !
கல்லாக உருளாதே, !
பாறையாய் நில்லு., !
சந்தோஷச் சிறகில் !
பறவையாய்ப் பற…!
பனித்துளியாய் வாழ !
இலையிடம் !
இடங்கேள்… !
சூரியன் சுட்டாலும் !
அழியாமல் வாழ்…!
தேனீயாய் சுற்று… !
எறும்பாய் உழை… !
தென்றலாய் வீசு… !
மழையாய்ப் பொழி…!!
02.!
கனவு !
-----------!
வெகு தூரப் பயணம்.. இது… !
ஆனால்!
ஒரே இடத்தில் இருந்து கொண்டே !
பயணம் செய்யும் வினோதம்!!
இங்கு தான் -!
கண்கள் இரண்டை மூடினாலும்!
பார்வை வரும்…!
ஒளி முதல்கள் இல்லாமலே!
வெளிச்சம் வரும்…!
வாய் கூடத் திறவாமலே!
வார்த்தை வரும்…!
ஓராயிரம் குண்டுகள் வெடிக்கும்!
ஆனால்!
ஒரு சலனமும் இருக்காது…!
ஒரு மொட்டு மலர்ந்து விட்டால்!
எத்தனை கோடி சப்தங்கள் இங்கே!!
தொலை தூரப் பயணம்.. இங்கே!
தொடுவானில்!
தொங்கு பாலம் தொங்கும்… அதிலே…!
“குதி”யிலாமல்!
உடல் மட்டும் நடைபோடும்…!!
ஜே.ஜுனைட், இலங்கை