பாண்டித்துரை!
ஏன் பதட்டமோ!
உனக்கு!
போன்பண்ணவரும்போது மட்டும்!
தலை கால் புரியவில்லை!
தடுமாற்றம்றின்றி!
உன் நம்பர் அடிக்கிறேன்!
ஒரு ரிங்கில் நீ எடுக்க!
ஓராயிரம் முறை!
ஊன்னிடம் வேண்டினேன்!
கேட்டிருக்க வேண்டும்!
எடுத்ததும் பேசவில்லை!
எதிர் முனையில் - நீ!
இருப்பது தெரிந்து விட்டது!
முதலில் பேசியது - நம்!
மூச்சு காற்றுதான்!
முப்பது நிமிடம் ஆகியிருக்கும்!
முடிவாய் நாம் பேசியது!
நேரமாச்சு!
வைக்கட்டுமா போனை

பாண்டித்துரை