எவரும் நேரில் பார்த்ததில்லை
எந்த இன்பதுன்பத்திற்கும்
இதைத் தவிர வேறு பெயரில்லை!
கண்கள் மூடி நினைத்துப்
பார்த்தால்- கடவுள்
தெரியும் பொய்யில்லை!
இதுவரை பாராத (ஏதோ ஓர்)
புது உருவம்-நிமிடத்தில்
நூறு முறை வந்து போகும்
மனக் கண்ணின் அந்த நிழலுக்கு
மறுக்க முடியாத பெயர் கடவுள்!
ஒருமித்த உணர்வுகளின் வடிகாலாய்
உளத்துள் கட்டளையிடும் அருவமது!
திமிறிடும் மனக் குதிரைக்குத்
திசையைக் காட்டும் கடிவாளமது!
ஒவ்வொருவருள்ளும் ஒளிந்திருக்கும்
நம்பிக்கை என்னும் ஒரே சக்தி அது!
விதியின் வழியில் நடவாமல்
நாம் விலகிச் சென்றிட எச்சரிக்கும்!
ஆபத்தின் போது கேட்கின்ற
அபயத்தின் அசரீரி அதுவாகும்!
வேண்டிய எல்லாம் கொடுத்திடும்!
நாம் வேண்டாத போதும் தானாய்
நம் பின் தொடரும்!
ஆயிரம் முறை நாம் மறந்தாலும்-
அயராது நமைக் காத்திடும்!
தாய்மையின் மறு ரூபமது!
தயவென்னும் ஒரு வழிச் சாலையது!
நித்தம் நம்முடன் இருக்கிறது!
நாம் முயன்று உணராத வரை
ஒரு போதும் தெய்வம் தென்படாது
எழிலி