சக்தி சக்திதாசன்!
!
மென்மையான இதழ் கூட்டி!
வண்ண வண்ண நிறமேற்றி!
எண்ணத்தின் அழகையெல்லாம்!
ஒன்றுகூட்டி இயற்கையன்னை!
படைத்துவிட்ட அதிசயமே !!
முள்ளோடு ஒரு மரத்தில்!
முகிழ்த்து நீயும் ஒன்றாக!
தொட்டாலே உதிர்ந்திடும் நின்!
மென்மகளின் காவலுக்காய்!
முள்ளுந்தன் உடன்பிறப்பாய்!
ஆனகதை நாமறிவோம்!
பனியுன்னை குளிப்பாட்ட நல்!
ஆதவனும் உலரவைத்து மென்!
தென்றலது தாலாட்ட அந்த!
நிலவுமகள் தூங்க வைப்பாள்!
ரோஜாமலரே உனக்குரைப்பேன்!
ராஜா வீட்டுத் தொட்டமானாலும்!
ராப்பிச்சைக்காரன் முற்றமானாலும்!
இய்ற்கையன்னை எமக்களித்த ரோஜா!
உன்னழகினிலே குறைவு காண்பதில்லை!
அகலத்தில் மனிதராக பிறந்த நாம்!
ஆயிரம் வேற்றுமை கொண்டதுவை!
எள்ளி நகையாடி கள்ளி நீ செடியினிலே!
ஆடுவதை புரியார் இம் மானிடரே
சத்தி சக்திதாசன்