பெருங்களத்தூர் நிலையத்தில்!
தொடர்வண்டிக்காக காத்திருக்கையில்!
நெடுஞ்சாலையில் 108எண் வண்டி!
அபய சத்தம் எழுப்பியவாறு செல்ல!
சாளரம் வழியாய் பார்வைசெல்ல!
அடிப்பட்டவரின் முகம் தெரியவில்லை!
மனது பதை பதைத்தது!
யாரோ யாவரோ!
பிழைத்து கொள்ள வேண்டுமென !
மனம் வேண்டி கொண்டுதென சொன்னேன்!
எங்கள் கல்லூரி பேரூந்தை!
108 எண் வண்டி கடந்து செல்லுகையில்!
நானும் அப்படி வேண்டி கொள்வேன் !
என என் மகள்!
108ன் அபய சத்தம் !
முன் வழியுடன்!
முன்பின் தெரியாதோரின் !
வேண்டுதல்களையும்!
வாங்கி கொண்டு தான்!
உயிர் காக்கிறது !

வி. பிச்சுமணி