ஹத்தாமா (வீட்டு வேலைக்காரி) - இல்யாஸ் இப்றாலெவ்வை

Photo by Tengyart on Unsplash

ஹத்தாமா ( மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டு வேலைக்காரி )!

இங்கு மின்சாரம் இல்லாமல் !
இயங்கும் இயந்திரம் நான் !
துன்பங்களை குத்தகைக்கு எடுத்து !
இன்பங்களை அவர்களுக்கு கொடுக்கும் !
இக்கட்டுக்கு தள்ளப்பட்டு !
வாழ்வின் முகவரி அற்றவள் !
பெற்றோர் சிந்திக்காத குடும்ப பொருளாதாரம் !
சகோதர சகோதரிகளின் சுயநலம் !
இரவில் மட்டும் ஆணாகும் !
கணவனின் பலவீனம் எல்லாமே !
இந்த பெயருக்குள் தள்ளி விட்டது என்னை !
கடவுச்சீட்டில் கடன் பட்டு !
கடல் கடந்து !
காலங்களை கண்ணீரில் கழுவும் துர்ப்பாக்கியவாதி !
இங்கு புதுவிதம் !
அதிலும் பலவிதம் - இவர்களின் !
சீண்டலுக்கும் முரண்பாடுகளுக்கும் பலி தீர்க்கும் !
பொதுத்தண்டனை வாங்கி ,,,,!
ஊருக்கென்ன தெரியும் ஒரு கணம் மனசு !
தெரிந்தும் என்ன செய்ய ,,,,!
ஒப்பாரி இரவுகளின் சொந்தக்காரி நான் .!
இல்யாஸ் இப்றாலெவ்வை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.