பலநூறயிரமாண்டு நாம் காதலித்தை போல்!
01.!
பலநூறயிரமாண்டு நாம் காதலித்தை போல்!
-------------------------------------------------------------!
நமது பிரிவு பெரும் துன்பம் தருகின்றது!
நமது உயிர்கள் கலந்தே உள்ளதால்!
அவைகள் எப்போதும் இனியும்!
அப்படித்தான் இருக்குமென்பதால் !
இப்பிறப்புக்கு முன் வாழந்த!
ஆயிரம் பிறப்புகள்களிலும்!
நம்இதயங்கள் நம்மை நமக்கு!
அடையாளம் காட்டி கொடுத்தன!
முடியும் பிறப்புக்கு வழியனுப்புகையாகவும்!
வரும் பிறப்புக்கு முகமனாகவும்!
நம்மிடையே பிரிவுகள் அமைகின்றன!
ஒவ்வொரு பிறவியிலும்!
உன் அழகும் வசீகரமும் மேலும் மேலும்!
பெருகுதலை காண்கிறேன்!
இத்தேடுதலுக்கு முன்!
பல பிறவிகளிலும் உன்னை!
தேடி அலைந்த காட்சிகள் !
கண்முன்னால் விரிகின்றன!
உன் உயிரும் நீயும்!
என்னுடைய உயிரி்ல்!
கலந்தே தொடர்ந்து வரும்பொழுது!
வேறு யார் உன்னை விரும்ப முடியும்!
கட்டாயப்படுத்தி ஒருவருக்கொருவர்!
போய்வருகிறேன் என சொல்ல வைப்பதெது!
நம்மிருவருக்கும் தெரியவில்லை!
நம்மை இணைப்பதற்காக!
எல்லாமும் எல்லாம் செய்கின்றன!
எனக்கு உறுதியாக தெரியும்!
அதற்காக எதையும் செய்வேன்!
நாம் மீண்டும் சந்திக்கவே யில்லையென்றால்!
அது உண்மையாக வழியனுப்புகையாக இருக்கும்!
அடுத்த பிறவியிலும் சந்திக்கபோவதை நானறிவேன்!
உன்னை கண்டுபிடிப்பேன்!
அவ்வமயம் வீண்மின்கள் மாறிஇருக்கலாம்!
அப்பொழுதும் உன்னை காதலிப்பேன்!
பலநூறயிரமாண்டு நாம் காதலித்தை போல்!
02.!
மகள்!
------------!
தேர்வு மையத்திருக்கு!
கூட வரவில்லை என்றால்!
அப்பாவுக்கு என் மேல் !
அக்கறை இல்லை!
கூடவே சென்று !
நிழல் பார்த்து உட்கார !
சொன்னால் !
ஏன் அப்பா இப்படி !
படுத்தறீங்க என்று!
சடைத்து கொண்டாள்!
என் மகள்!
மகள் என்றாலும் பெண்தானே!
புரிந்து கொள்ள முடியவில்லை!
03.!
தற்கொலை!
-------------------!
கொடியில் காயப்போட்ட பட்டுச்சேலையாய்!
விட்டத்தில் தொங்கி கொண்டிருந்தாள் பவானி!
குறிப்பெதும் இல்லாததால் கூறுபோட்டது ஊரு!
காதல் தோல்வி!
தீராத தீட்டுவயிற்று வலி!
அம்மா கடுமையான எச்சு!
வயிற்றில் வாங்கி கொண்டாள்!
இன்னம் இஷ்டத்துக்கு!
ஒரு வாரம் கழித்து!
தன் சாவுக்கு காரணமில்லை குறிப்புடன்!
விஷம் குடித்து மரித்தான் மாரி !
அப்போதும் அப்பனையும் ஆத்தாளையும்!
காப்பாற்ற இப்படி எழுதியிருக்கான்!
வேறு ஏதோ தப்பு தண்டாவென!
வாய்கள் மென்றன!
புரளிக்கு பதிலளிக்க ஆளில்லை யென்றால்!
மனசாட்சிகள் அடகுவைக்கப்பட்டு!
வாய்கள் இறந்தவர்களை உடற்கூறு செய்கின்றன

வி. பிச்சுமணி