1. இறைமகிழ்ச்சி!
!
விண்ணைத் தொடும்,!
ஏழை எளியோரின்!
உரிமைப் !
பொருள்களால் ஆன!
புனிதநேயப் பேராலயம்.!
எதிரில் துரும்பாய்,!
கண்களில் !
தேவை ஒளியோடு,!
விண்ணரசின்!
உரிமையாளர் எனப்பட்டும்,!
வறுமைவிரி கோலமாய்,!
செல்லன்புச் சிறுமி.!
தடையில்லை என்பதால்!
தைரியமாய் நுழைந்தாள்.!
மரியன்னை குழந்தை இயேசு,!
புனிதர்கள், மனிதர்கள்.!
மின்னொளிப் பெருவெள்ளத்தில்!
அனைவரையும் கடந்துவிட்டாள்!
இலக்கை நோக்கி.!
நொருங்கியதும்!
நின்றுகொண்டாள்.,!
மெழுகுவர்த்திகள் பீடம்.!
சுற்றும் முற்றும் பார்த்தாள்!
யாருமில்லை. !
மேலே சுவரில்.. !
அன்பே சவமாய் !
இயேசு கிறிஸ்து. !
அணைத்தெடுத்து !
அன்போடு வணங்கி!
நன்றியோடு முத்தமிட்டாள்.!
கையில்!
இரண்டு மெழுகுவர்த்திகள்.!
அன்று இரவு !
அவள் வீட்டில் தேவஒளி...!
வேக வேகமாக !
படித்தாள் !
பள்ளிப் பாடங்களை,!
இறைஒளி !
மறைவதற்குள்.!
இறைவனின் !
வலது பக்கத்தில் !
தன் !
வழி நடப்பவர்களின்!
செயல்களால் !
தலை குனிவோடிருந்து.,!
நீண்ட!
காலத்திற்குப் பிறகு !
மெதுவாகப் !
பிதாவைப் பார்த்து,!
மெலிதாகப் !
புன்னகைத்தார்!
இறைமகன் இயேசு.!
2.கடன்!
!
உண்ண விரும்பாத !
உணவுப்பொருளை !
உதவநினைத்து !
உடன் வைத்துக்கொண்டேன்.!
மனம்சரியற்ற !
மங்கலக்கோலத்தில் !
மாசுடைதரித்த !
மண்ணுரிமை மாது. !
நடைவழிவேகம் !
அனைத்தையும் திருத்தி !
அவளை கடந்தேன் !
அவள்வழிநிற்க. !
காகிதம் மூடிய !
திண்பண்டத்தோடு !
வெறுத்ததை !
கொடுப்பதால் !
நான்கு பணம்!
நட்டஈடு.!
பொருளையும் !
பணத்தையும் !
ஒன்றாய் பார்த்ததில் !
கலங்கிநீட்டி !
விரலால்கேட்டாள், !
என்ன அது!
என்னவென்று. !
பெறபயந்தவளுக்கு !
பிரித்துக்காட்டி !
பெற்றுக்கொள்ளென்றேன் !
பய மனத்தோடு. !
பவ்யமாய் பெற்றவள் !
பற்களை காட்டினாள் !
கறைபடிவம் பின்னால் !
தெய்வீகச் சிரிப்பு. !
நாகரீகமாய் சிரித்தேன் !
பதிலுக்கு நானும்!
வாரிவழங்கும்!
வள்ளளைப்போல. !
திடீரென!
எனக்காய் அவள்தரும் !
சிரிப்பின் விலையுருத்த !
சிக்கனமாய் !
சிரிப்பை நிறுத்தி !
வழிவிலகி !
வேகநடை போட்டேன். !
கடன்காரனாய் !
தலைகுனிவோடு.!
அன்புடன்!
ந.அன்புமொழி!
சென்னை
ந.அன்புமொழி