01.!
எப்படி வரும்...!
------------------!
அணியும் ஆபரணங்களை!
அகற்றிவிடுகிறோம்,!
பகல் முடிந்து இரவில்!
இன்துயில் செல்லுமுன்னே...!
அகங்காரத்தையும்!
அகத்தை அழிக்கும்!
கவலைகளையும்!
கழற்றி வைக்காமல்!
கட்டிலுக்குப் போகிறாயே-!
எப்படி வரும்!
இனிய தூக்கம்...!!
02.!
அது வந்தபோது...!
-------------------!
வானவில் வந்து!
வண்ணக் குடைபிடித்தது!
வையகத்திற்கு-!
வர்ணிக்கிறான் கவிஞன்...!
ஏக்கத்துடன்!
எட்டிப்பார்க்கிறான் விவசாயி-!
வந்த மழையும் போச்சுதே..!
நொந்துகொள்கிறான்
செண்பக ஜெகதீசன்