நம்பிவரும் பெண்ணை!
நடுக்காட்டில் விட்டுவோடும்!
நளன்களுக்குக் குறைவில்லை!
அச்சமொடு நான்கைத்!
துச்சமாக எண்ணியதால் வந்த!
பச்சைப் பிள்ளையை!
எச்சில் தொட்டியில் எறிந்துவிடும்!
குந்திதேவிகளுக்கும் குறைவில்லை!
அண்ணன் தம்பி சொத்தில்!
ஆசைவைத்து அவரைத்துரத்திடும்!
துரியோதனர்களுக்கும் குறைவில்லை!
அடக்க இயலா ஆசைப்பெருக்காலே!
அடுத்தவன் மனையாளை!
அபகரித்து அழிந்துபோகும்!
இராவணர்களுக்கும் குறைவில்லை!
கொடுமையே உருவமாகக்!
கூட இருந்தே குழிபறிக்கும்!
குடிலர்களுக்கும் குறைவில்லை..!!
பெயர்கெட்ட!
பொல்லாரின் மறுபிறப்பாய்ப்!
போகுதடா நாடு,!
சில்லோரேனும்!
நல்லோராய் நாம்வாழ்ந்தால்!
நலம்பெறுமே நாடு..!!
!
இதுவே போதும்..!
விண்ணை விட்டு!
விடுதலை பெற்ற!
மழைத்துளிகள்!
மண்ணை முத்தமிட்டு!
மழலையாய்ச் சொல்கின்றன-!
அன்னைமடி!
இதுவே போதும்
செண்பக ஜெகதீசன்