01. !
மாறிடுமா…!
----------------!
மரணம் ஒரு சம்பவம்தான்!
மனித வாழ்வினில்,!
அது!
மாற்றான் வீட்டிலென்றால்!
சாதாரணம்,!
தன் வீட்டிலென்றால்!
தவிக்கிறானே மனிதன்!
தனியே கிடந்து…!!
மாறிடுமா இந்த வேறுபாடு..,!
மாறினால் அவன்!
ஏறிடுவான் வாழ்வில்!
ஞானியாக…!!
!
02. !
அலையாய்…!
--------------------!
சலிப்படைவதில்லை!
சமுத்திர அலைகள்,!
வந்து வந்து அவை!
செல்கின்றன!
வருடமெல்லாம் …!!
சலிப்படைந்து சலிப்படைந்து!
சாவை!
சமீபத்தில் கொண்டுவருகிறாயே..!
சகோதரனே நீ!
சங்கடப்படாதே,!
வாழ்க்கை வாழ்வதற்கே…!!
!
03. !
ஒத்துக்குமா..!
----------------!
ஒத்தத் தூத்தல்!
ஒடம்புக்கு ஒத்துக்காதுண்ணுதான்!
ஒதுங்கி நிக்கிறேன்,!
ஓடிப் போயிருக்கான்!
ஒடம்ப நனைய வேலைக்காரப்பய!
ஊட்டுக்கு-!
கொட எடுக்கத்தான்…!!
ஒத்துக்குமா- !
ஒடம்புக்கு..!
ஒலகத்துக்கு…

செண்பக ஜெகதீசன்