நாகரிக உலகத்தில்!
நாங்கள் பிறக்கும் வரை...!
எங்கள் பசிக்கு !
உன் பழங்களை தந்தாய்.!
எங்கள் நிர்வாணத்துக்கு !
உன் இழை,தழைகளையும்!
மரப்பட்டைகளையும்!
உடையாக கொடுத்தாய்.!
நிம்மதியாய் நாங்கள் !
உறங்க உன் அடியிலேயே!
மரப் பொந்துகளை கொடுத்தாய்.!
உன்மையில் அது ஒன்றும்!
கற்காலம் இல்லை.!
உன் கருவறையில்!
நாங்கள் வாழ்ந்த காலம்.!
***!
நாகரிக உலகத்தில்!
நாங்கள் பிறந்தபோதும்!
தொட்டிலாக எமை தொடர்ந்தாய். !
படுக்கை முதல் பாடை வரை!
எங்களுடனே நீ இருந்தாய்.!
எங்கள் சிதை எரியும் போது!
நீயும் சேர்ந்தல்லவா எரிந்தாய்.!
***!
எங்கள் கம்பன்!
கவிதை எழுதும் போது!
பனை ஓலைகளை கொடுத்தாய்.!
அடியேன் கவிதை!
எழுதும் போதோ!
வெள்ளை காகிதத்தை நீட்டுகிறாய்.!
எங்கள் வள்ளுவன்!
காதலிக்கு அனிச்சமலரை!
பரிசளித்தாய்.!
இன்று என்காதலிக்கும்!
வாஞ்சையுடன் நீட்டுகிறாய்!
ஒரு சிவப்பு ரோஜா.!
***!
எங்கள் குழந்தைகள்!
இப்பொழுதெல்லாம்!
ப்ளாஸ்டிக் தொட்டிலில்தான்!
பிறக்கின்றன!
எங்கள் கட்டில்களோ!
உலோகங்களால் செய்யப்பட்டுவிட்டன. !
எங்களில் சிலர் இப்பொழுதே!
கணிப்பொறியில்தான் எழுத!
கற்றுக்கொள்கிறார்கள்.!
ஜீன்ஸ் அணிந்த எங்கள் பெண்கள்!
தலை முடிப்பதே இல்லை.!
பிறகெங்கே பூச்சூடுவது.!
***!
ஏ மரமே!!
என் முன்னோர்கள்!
உன்னை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள்.!
நான் என் சந்ததியினருக்கு!
உன்னை அறிமுகப் படுத்துவேனா?
அருண்மொழி தேவன்