மழையை சுமந்துச் செல்லும்!
மேகங்களே!!
என் மனதையும் கொஞ்சம்!
சுமந்துச் செல்லுங்கள்..!
தென்திசை நோக்கித்தானே!
உம் பயணம்!!
அங்குதான் இருக்கிறது!
என் கிராமமும், இதயமும்..!
--------------------!
சென்ற வாரம்!
கன்று ஈன்றதாம் எங்கள் லட்சுமி.!
அதனிடம் போய் சொல்லுங்கள்!
அந்த சின்ன கன்றுக்காக!
கொஞ்சம் காம்புகளை!
இறுக்கிக்கொள் என்று.!
பாவி பசு!!
என்னை விட!
என் குடும்பத்தின்மீது !
அதிக பாசம் அதற்கு.!
ஒரே நேரத்தில்!
ஒட்டுமொத்த ரத்தத்தையிம்!
பாலாக தரச்சொன்னால் கூட!
தந்துவிடும்.!
-------------------!
என் வீட்டுக்கு அருகில்!
எங்காவது வெள்ளை நிறத்தில்!
ஒரு சேவல் தென்பட்டால்!
தயங்காமல் அதனிடம் சொல்லுங்கள்.!
நான் உறங்கச் சொன்னதாய்..!
பாவம்!ஊரில் இருந்தவரை!
நான் படிக்கவேண்டும் !
என்பதற்காக!
நான்கு மனிக்கே!
எழுந்து கூவும்..!
!
--------------------------!
எங்கள் தெருவுக்கு!
பக்கத்து தெருவில்!
விளையாடி கொன்டிருக்கும்!
என் நண்பன் வீட்டு நாய்.!
அதனிடம் போய்ச் சொல்லுங்கள்!
நான் அடுத்த வாரம் !
ஊருக்கு வருகிறேன் என்று..!
என் நண்பனின் வீட்டுக்கு!
நான் செல்லும்போதெல்லாம்!
என் நண்பனுக்கு முன்னரே!
வாசல் வரை!
வந்து வரவேற்கும்!
அந்த நாய் கண்டிப்பாக!
மகிழ்ச்சியடையிம். !
!
--------------------------!
ஊரை விட்டு வெளியே!
கொஞ்ச தூரம்!
நடந்துச் சென்றால்!
ஒரு மேல்நிலைப் பள்ளி வரும்!
மறக்காமல் அதனிடம்!
நான் சொன்னதாய்!
ஒரு வணக்கம் சொல்லுங்கள்.!
என்னை யாரென்று கேட்கும். !
பரவாயில்லை!!
நீங்கள் வந்துவிடுங்கள்.!
ஏனெனில்!
வாங்கியவன்தான் மறக்ககூடாதே தவிர!
கொடுத்தவன் அல்ல!
-----------------------------!
ஏன் மனிதர்களிடம்!
சொல்ல உன்னிடம் ஏதும்!
சேதி இல்லையா?என்று நீ !
கேட்பது என் காதில் விழுகிறது.!
மனிதர்களுடன் பேச!
அறிவியல் உள்ளது.!
மனதில் உள்ள இந்த ஜீவன்களோடு பேச?
அருண்மொழி தேவன்