ஓட்டப்பந்தயத்தில் முதலில் வந்தேன்!
எல்லோரும் சொன்னார்கள்!
நான் இரண்டுகால் புள்ளிமான் என்று!
கணிதத்தில் நூற்றுக்குநூறு வாங்கினேன்!
எல்லோரும் சொன்னார்கள்!
நான் கணக்கில் புலி என்று!
அலுவலகத்தில் கடுமையாய் உழைத்தேன்!
எல்லோரும் சொன்னார்கள்!
நான் மாடாய் உழைக்கிறேன் என்று!
அடிப்பட்டு கிடந்த ஒருமனிதனை!
அவசர,அவசரமாய் !
மருத்துவமனையில் கொண்டு சேர்த்தேன் !
எல்லோரும் சொன்னார்கள்!
உண்மையிலேயே இவன்தான் மனிதன் என்று
அருண்மொழி தேவன்