மறுபடியும் பூக்கும் எனது தொட்டிச் செடி !
இன்றில்லாவிடில் நாளை !
மறுநாள் அதற்கும் பின்னாளில் !
நிச்சயமாய்ப் பூக்கும் !
மறக்கவியலாது !
தினம் மலர்ந்து சுகந்தம் பரவிய நாட்களை !
என்னாலும் செடியாலும் !
இன்றும் மணக்கிறதெனக்குள் !
நல்லதொரு தோட்டக்காரனாய் நானில்லாததை !
மவுனத்தால் உணர்த்தி !
முட்களால் குத்தும் சிலநேரம் !
வேர் பாவியிருப்பதென்னவோ !
வீர்யமிக்க காதலில் !
காலத்தின் மெல்லிய சுழற்சியில் மாறு மெல்லாம் !
மாற்றங்களோடு பூக்கும் மறுபடியும் !
என் செடி எனக்காக
அன்பாதவன்