வளையல் துண்டுகளின் காட்சி - அன்பாதவன்

Photo by Tengyart on Unsplash

வளையல் துண்டுகளின் காட்சி !
----------------------------------------------------!
அருகருகே த் தொடர்கிறது!
நம் பயணம்!
சுவாரஸ்ய மவுனத்தோடும்!
சுகமான நினைவுகளுடனும்!
தண்டவாளங்களைப் போல!
தகுந்த இடைவெளியோடு.!
உடைந்த வளையல்துண்டுகளாய்!
வீழும் உரையாடல்களைக் குலுக்க!
மனசின் முப்பட்டைக் கண்ணாடியில்!
திரள்கின்றனப் புதுப்புது பொழிப்புரைகள்.!
’பசிக்குதுடா’-என்றக் கெஞ்சலில்!
எட்டிப்பார்க்குமுன்னுள்ளொருக்!
குழந்தை !
பசியறிந்து ஊட்டிய விரல்களிலிருந்து!
வழியுமுன் கடவுளின் மனிதம் !
சொல்லதிகாரம் திரண்ட!
கட்டளைகளில்!
நிமிர்ந்தப் பனையென உன் !
ராட்சசம் !
சொல் செல்லமே!
யார்தான் நீ?
அன்பாதவன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.