ஏமாற்றங்களிலான சரளை நிறைந்த !
என் பூமியில் மாற்றத்தை விதைத்த !
முதல் மழைத்துளி நீ !
பெருமழையாய்ப் பெய்த ப்ரியத்தில் !
பூமி நனைந்தது !
தன்னை இழந்தது கவலை மறந்தது !
இதமான உரையாடலில் !
பதமானது பயிர் வளர்க்க !
ஊடுபயிராய் நுழைந்து !
பெரும்பயிராய் வளர்ந்த கதிரசைவில் !
தீண்டும் மென்தென்றல் !
பரிவு சுமந்த பனித்துளி வார்த்தைகள் !
உள்நுழையும்போதெல்லாம் உளக்குளிர்ச்சி !
என்னுள் பசுமை வளர்த்த !
இயற்கையின் ரூபமே !
வாடத வாழ்வை வரமாய்த் தா! !
ஈர இதழ்கள் !
உறிஞ்சிய சூரியன் !
சிவந்த ரோஜா. !
00000 !
அன்பாதவன்
அன்பாதவன்