உள்முகம் - அன்பாதவன்

Photo by Maria Lupan on Unsplash

என்னுள் என்னைத்தேடி !
தொடங்கினேன் ஒரு பயணம் !
இவ்வளவு இலகுவான முயற்சியாய் !
இல்லையது !
பாதைகள் முழுக்க இடைஞ்சல்களும் !
தடங்கல்களும் !
விலக்கித் தொடர்வது பெரும்பாடாக !
கண்டேன் விசித்திரங்களை !
விபரீதங்களுங்கூட !
அறியா உலகங்களுள் நுழைந்த போதில் !
காத்திருந்தன ஆச்சர்யங்கள்; அருவருப்பில் !
ஆத்திரமூட்டின சில !
ச்சே! இதுவும் நானா !
படிமக் கோப்ரங்கள் இடிந்து சிதைந்து !
கசப்பின் கசகசப்பினூடாக !
எப்போதாவது வீழ்ந்து சந்தோஷத் தேந்துளி !
இருள் சூழ்ந்த புதுத் தடத்தில் !
தொடர்வதென் பெருவழி உள்முகமாய் !
சலிப்பில் !
திரும்பிவர யத்தனிக்கையில் !
என்னைத் தெரிந்த நானின் இருப்பு !
எழுந்ததொரு பெருங்கேள்வியாய் !
என் முன். !
- அன்பாதவன்
அன்பாதவன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.