பணிதேடி அலைவதுவே!
பணியான காலத்தில்!
தருமமென இரந்தொருவன்!
வரும்பொழுது மனம்நினைக்கும்!
நல்லதொரு வேலைகிட்டி!
செல்வமும்கை சேர்ந்தபின்னே!
அல்லலுறும் வறியவர்க்கு!
இல்லையெனா தீந்திடுவோம்!
வருகின்ற முதல்வருவாய்!
இருபங்காய் ஆக்கிஅதில்!
ஒருபங்கு நாமெடுத்து!
மறுபங்கை ஈந்திடுவோம்!
மனதிலொரு உறுதியுடன்!
அனுதினமும் நினைத்திருந்தும்!
அலுவலகம் முதன்முதலில்!
செலும்பொழுது மனம்பதறும்!
வருவாயில் ஒருபாதி!
இருந்தாலும் மிகஅதிகம்!
பத்தில்ஓர் பாகத்தை!
முத்தாக ஈந்திடுவோம்!
பத்திலொரு பகுதியினை!
பத்திரமாய் எடுத்துஅதை!
இல்லார்க்கு கொடுத்திடுமுன்!
பொல்லாத மனம்மாற!
இருக்கின்ற நண்பருக்கு!
விருந்தொன்று தந்துவிட்டு!
இல்லாத எளியவர்க்கு!
சில்லரையைத் தேடுகிறேன்.!
!
-பேதை

பேதை