சிலிர்த்தது பூமி முதல் துளியில்!
தொடரும் தூறலில் தணிந்தது வெக்கை!
எழுந்தது மண்மணம்!
பறவைகள் சிறகுகளுக்குள் ஒடுங்க !
இலைகளின் தளிர் முகத்திலோ !
ப்ரியமானவர்களைச் சந்திக்கும்!
சந்தோஷமினுப்பு!
உரத்த குரலெடுத்து நலம் விசாரிக்கும்!
இடியைப் பார்த்து பளிச்சென்று!
புன்னகைக்கும் மின்னல்!
அதுண்டுகளாய் மழைக்கம்பிகள்!
செங்குத்துப் பாலமாகின்றன!
விண்ணுக்கும் மண்ணுக்கும்.!
எல்லாக் கசடுகளையும் அடித்துச் செல்லத்!
தேவையாயிருக்கிறதொருப் புதுமழை

அன்பாதவன்