01.!
மூதூர் பற்றிய கவிதை!
-------------------------------!
என்னமாய்ப் பாரிக்கிறது காற்று!
எங்களின் யுகம் நிரம்ப இருந்த!
நன்கு பருத்த மலைகளின்,!
பச்சை வயல்களுமான கனவுகளின்!
வீரிட்ட கதறலாகி எழுந்த சத்தம்!
தாங்கவே முடியாதபடிக்கு!
வழியில் பிரிந்த எங்களது சுவாசங்களையும் சேர்த்தே!
அள்ளி வந்திருக்கிறது போலும்..!
அத்தனையிலும் ஆஹிரத்து மணம்!
இப்போதே நீ சொல்லியாக வேண்டும் எனக்கு!
அச்சுப்பிழைத்துப் போன உன் ஈழப் புத்தகத்தில்!
எந்தக்கதையிலேனும் வருகிறதா..?!
என் நெருப்பு எப்போதேனும்!
உன் மண்ணைத் தின்றிருப்பதாக..!
!
02.!
வாப்புச்சி பற்றி வராத கவிதை!
-------------------------------------!
இது வரைக்கும் பேசாத வார்த்தையென்று!
எதுவுமேயில்லை!
பூக்களைப் பற்றின காலத்துக் கவிதைகளிலிருந்தும்!
மரியாதை நிரம்பின சொற்களாகவும்,!
உங்களுக்குமென ஒன்றித்த ஏதும் தென்படுவதாயுமில்லை!
உதிர்ந்து விழும் பூக்களை மரத்தின் வியர்வையாக்கியும்!
வாப்பாக்களுக்கு உவமையாக்கியும்!
எல்லாரும் எழுதிவிட்ட பின்னும்!
வாழ்வே உருகியோடி!
நாங்களே தன் வாழ்வென்றாகி!
அதில் எனக்கென்று வேறாய் இந்திரியமும் தந்து!
அதே வாப்பாத்தனத்தோடு!
எல்லா நாளும் இருக்கும் உங்களுக்கு!
இன்று மட்டும் கவிதையெழுதி என்னத்துக்குக் காணும்!
(15-06-2008 தந்தையர் தினத்துக்காக..)
அசரீரி