நீயா?!
நீயாகத்தான் இருக்குமோ?!
ஒருவேளை!
நீ நீயில்லையோ!!
நீ இல்லையென்றால் அப்போ நீ யார்?!
நெடுந்தொகையாய்!
நெடுநேரம் இல்லை!!
குறுந்தொகையாய்!
கொஞ்சவுமில்லை!!
முல்லைப் பாட்டாய்!
முகம் மலரவுமில்லை!!
குறளாய்.. குறைவில் விளக்கமாய்..!
கோடிட்டுக் காட்டவும் இல்லை!!
'ஆத்திச்சூடியாய்' ஒற்றை வரியில்!
நான்மறுபடி பிறக்க!
நீ ஒரு முறை பூத்தாய்!!
அன்றும் இல்லை!!
அன்றுமுதல் என்றும் இல்லை!!
என் விழிகளுக்கும் மனதிற்குமான உறக்கம்!!
நீயே தானா?!
நீதான் என்றால்..!
நிமிடத்தில் உணர்வாயே!!
நான் நான்தான் என்பதை!!
வருடங்கள் பலவற்றை வாங்கிக்கொண்டது!!
வயிற்றுக்காக நான் வந்ததும்...!
வாழ்க்கைக்காக நீ சென்றதும்....!
இன்றும் கூட என் நினைவில் - என்னைப்!
புரட்டிப்போட்ட உன் முதல் புன்னகை!!
நீதான் என்றால் ...!
நீ நீயாகத்தான் இருக்கிறாயா?!
ஆம்! ஆம்!!
நீ! நீயேதான்!!
தூவானக் குளியல் முடித்த!
பறவையின் சிலிர்ப்பாய்....!
அதே படபடப்பு!
உன் கண்களில்...!!
**********!
ஆ. மணவழகன்

ஆ.மணவழகன்