தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

வாழ்க்கை

முல்லைக்கேசன்
வாழ்தல் என்பது உடலை!
மண்ணுக்கு!
உரித்தெழுதிக் கொடுத்துவிட - அது!
ஒன்றும்!
சரணாகதி யல்ல!
பிரசவிக்கப்பட்ட ஒவ்வொரு ஜீவனும்!
பிறர் சபிக்கச் சபிக்க!
மடிந்து போவதும்!
ரோஜா மலரொன்று மங்கையின்!
குழலுக்கென்று பறிக்கப் பட்டு!
பதாகைகளுக்கு தாரை!
வார்ப்பதும்!
ஒன்று!
மேட்டுக் குடிகளெல்லாம் அதிகாரத்!
தந்திகளை!
அடுத்தவன் தலையிலும்!
அடுத்ததை நெஞ்சிலும் இழுத்து!
இறுகக் கட்டி!
சோம பானத்திற்கு சொகுசான!
இசையொன்றாய்!
கட்டை விரல் கொண்டு கடின அழுத்தொன்றில்!
இசைக்கு கோலமிடும்!
இறுமாப்புக்!
கலைஞர்கள்!
அதிகாரப் பெருவாரி ஒரு நாள்!
இடிந்து விழும்!
அன்றொரு பொழுதில் அதன் அருகில்!
சென்று!
நுகர்ந்து பாருங்கள்!
அடிமைகளையும், அப்பாவிகளையும்!
அடி நெஞ்சில் !
அழுத்தி அழுத்தியே வெடித்துச்!
சிதறிய மனிதக்!
குலத்தின்!
நெஞ்சுக் கூடுகள் காறித் துப்பிய இரத்தச்!
சுவாலைகள் இன்றும்!
அணையாமல் ஆடி அசைகின்ற!
தியின் மணம் உம்!
நாசிகள் வழினுளைந்து துன்பங்களை!
துலக்கிவிடும்!
ஆட்சியாளன் ஒவ்வொருவனும் அத்திபாரம்!
என நினைப்பது!
கல்லுக்காய் சிதைகளையும்!
நீருக்காய் இரத்தக்காறைகளையும்!
தான்!
கால்ம் போயினும்!
கசிகின்ற வலிகள் இன்னமும்!
கறை படியாத!
பளிங்குகளாய்!
காயத்தின் விளிம்புகளுக்கு களிம்பு!
பூசுகின்றன!
அடிமேல் அடி அடித்தும் அசையாத!
உரு ஒன்று!
நிலையாக நிலத்து விடின்!
அடுத்த நாள்!
உதயம் அதற்கு பெயரொன்றை தரும் அடித்தவன்!
யாரென்றும்!
அதிலேயே பொறித்திருக்கும்!
சீறுகின்ற சிறுத்தையும்!
மாறுகின்ற மாற்றமும்!
மாறும் வரையிலும் மனைவிக்கும் தெரியாது!
இவையெல்லாம் கீழேகிடந்து!
கால்களில்!
இடறுப்பட கவிதைப் பொலிவுக்கும் கவர்ச்சி!
உயர் நயப்புக்குமாய்!
சொற்களுக்கும், வரிகளுக்கும் பலவந்த முடிச்சுப்!
போடுபவன் கவிஞன் என்ற பெயரை!
களவாய்!
உறவு கொள்பவன்.!

இன்னுமொருவனும் கற்பழித்தான்

பர்ஸான்.ஏ.ஆர்
எந்த தாட்சன்யமுமின்றி!
நான் மீளவும் வல்லுறவுக்குள்ளானேன்.!
கேவலத்தால் கசிந்து கிடந்தயென்!
கருப்பைக்குச் சொந்தமான குருதியின் சாட்சியாய்!
நான் மீளமீள கற்பழிக்கப்பட்டேன்.!
ஆயிரம் திசைகளாய் என்னையிழுத்து!
அவரவர் விருப்பம் போல்!
அக்குள் தொடக்கம் அனைத்தும் வரை!
வெறிபிடித்த நாயின் வேகத்தில் குதறித்தள்ளினர்.!
நான் பெத்துப் போட்ட பிள்ளைக்கூட்டம்!
வாய்பொத்தி சுத்தி நிற்க!
என்னை சிதிலமாக்குவதில் அவர்கள் குறியாகினர்.!
இடைவேளையின்றி!
காபிர்களே படுத்தெழும்பிய என்னில்!
சுன்னத் செய்யப்பட்ட கயவனும்!
தாரளமாய் விழுந்தெழும்பினான்.!
இறுதியாய் இன்று பகலும்,!
மூடப்படாத நீள ஆடைகளைந்து!
அகிம்சா தர்மத்தின் போர்வையும்!
என்னைக் குதறியெடுக்க மன்றில் நிற்கிறது. !
நான் பெத்துப்போட்ட பிள்ளைக்கூட்டம்!
வாய்பொத்தி சுத்தி நிற்க!
என்னை சிதிலமாக்குவதில் அவர்கள் குறியாகினர்.!
-பர்ஸான்.ஏ.ஆர்

மேல்அதிகாரிகள்

மு. பழனியப்பன்
மு. பழனியப்பன்!
இவர்கள்!
மேல்அதிகாரிகள்!
எல்லாம் தான் தான்!
என்று கொக்கரிக்கும் !
குருடர்கள்!
மற்றவர் உழைப்பில்!
மங்கலம் பாடும்!
மேதாவிகள்!
இவர்கள் !
எவர் எவரிடத்திலோ!
பட்ட இம்சைகள் !
அனைத்தும்!
வெடித்துக் கிளம்பி!
கீழ் இருப்பவனைப்!
பொறுமையின் !
சிகரமாக்கும்!
கூடிக் குதூகலிக்க!
நான்கு பேர்கள் எப்போதும் தேவை!
அதுவும் அந்த நாலும்!
பெண்கள் என்று அமைந்துவிட்டால்!
அவை மற்றவன் தலையில் பேன் பார்க்கும்!
அடுத்தவன்!
காசில் டீ குடித்து!
அடுத்தவனை விழுங்கப் பார்க்கும்!
முதலை!
தவறே காண்பது!
இவர்களின் பணி!
அதன்மூலம்!
பயமுறுத்தல் என்று ஆரம்பிக்கும்!
இவர்கள் பணி!
அலுவலகத்தையே வீடாக்கும்!
வீட்டையே அலுவலகமாக்கும்!
அதிகாரப் பிறவி!
சற்றேனும் விட்டுக் கொடுக்கா!
மாபாவிகள்!
இவர்களால்!
உலகம் !
சகிப்பைக் கற்றுக் கொள்கிறது

காலையின் அவசரத்தில்!

பாண்டித்துரை
காலையின் அவசரத்தில்!
யார் யாரோ!
பயணப்படுகிறார்கள்!
அவர்களுக்கான!
இடத்தை அறிந்திருந்தும்!

சொல்ல 'மர'ந்த கவிதை

அருண்மொழி தேவன்
நாகரிக உலகத்தில்!
நாங்கள் பிறக்கும் வரை...!
எங்கள் பசிக்கு !
உன் பழங்களை தந்தாய்.!
எங்கள் நிர்வாணத்துக்கு !
உன் இழை,தழைகளையும்!
மரப்பட்டைகளையும்!
உடையாக கொடுத்தாய்.!
நிம்மதியாய் நாங்கள் !
உறங்க உன் அடியிலேயே!
மரப் பொந்துகளை கொடுத்தாய்.!
உன்மையில் அது ஒன்றும்!
கற்காலம் இல்லை.!
உன் கருவறையில்!
நாங்கள் வாழ்ந்த காலம்.!
***!
நாகரிக உலகத்தில்!
நாங்கள் பிறந்தபோதும்!
தொட்டிலாக எமை தொடர்ந்தாய். !
படுக்கை முதல் பாடை வரை!
எங்களுடனே நீ இருந்தாய்.!
எங்கள் சிதை எரியும் போது!
நீயும் சேர்ந்தல்லவா எரிந்தாய்.!
***!
எங்க‌ள் கம்பன்!
க‌விதை எழுதும் போது!
ப‌னை ஓலைகளை கொடுத்தாய்.!
அடியேன் க‌விதை!
எழுதும் போதோ!
வெள்ளை காகிதத்தை நீட்டுகிறாய்.!
எங்க‌ள் வ‌ள்ளுவ‌ன்!
காத‌லிக்கு அனிச்ச‌ம‌ல‌ரை!
ப‌ரிச‌ளித்தாய்.!
இன்று என்காத‌லிக்கும்!
வாஞ்சையுட‌ன் நீட்டுகிறாய்!
ஒரு சிவ‌ப்பு ரோஜா.!
***!
எங்க‌ள் குழ‌ந்தைக‌ள்!
இப்பொழுதெல்லாம்!
ப்ளாஸ்டிக் தொட்டிலில்தான்!
பிற‌க்கின்றன!
எங்க‌ள் க‌ட்டில்க‌ளோ!
உலோக‌ங்க‌ளால் செய்ய‌ப்ப‌ட்டுவிட்ட‌ன‌. !
எங்க‌ளில் சில‌ர் இப்பொழுதே!
க‌ணிப்பொறியில்தான் எழுத‌!
க‌ற்றுக்கொள்கிறார்க‌ள்.!
ஜீன்ஸ் அணிந்த எங்கள் பெண்கள்!
தலை முடிப்பதே இல்லை.!
பிற‌கெங்கே பூச்சூடுவ‌து.!
***!
ஏ மரமே!!
என் முன்னோர்க‌ள்!
உன்னை என‌க்கு அறிமுக‌ப்ப‌டுத்தினார்க‌ள்.!
நான் என் சந்த‌தியின‌ருக்கு!
உன்னை அறிமுக‌ப் ப‌டுத்துவேனா?

அந்த ஒருவன்

மன்னார் அமுதன்
உன்னைப் போலவே தான்!
நானும் பிரமிக்கின்றேன்!
எதிர்பாரா தருணத்தில்!
எப்படியோ என்னுள்!
நுழைந்திருந்தாய்!
இனிதாய் நகர்ந்தவென்!
பொழுதுகளில் -உன்!
ஒற்றைத் தலைவலியையும்!
இணைத்துக் கொண்டாய்!
பழகியதைப் போலவே!
ஏதோ ஒரு நொடியில் !
பிரிந்தும் சென்றாய்!
ஏன் பழகினாய்!
ஏன் பிரிந்தாய்!
எதுவுமறியாமல் !
அலைந்த நாட்களில் தான்!
மீண்டும் வருகிறாய்!
மற்றொரு காதல் மடலோடு!
எப்படி ஏற்றுக் கொள்ள!
நானலைந்த தெருக்களில்!
காரணமறியாமல் அலையவிட்டிருக்கிறாய்!
மற்றொருவனையும்!

பொறுத்தது போதும் மலையக

இரா சனத், கம்பளை
தோழா!!
------------------------------------------------------------!
பள்ளிக்குச் செல்லாமல் சிறு பிள்ளைகள்!
துள்ளிச் செல்லுதடா வேலைக்கு!
பேனையை தொட்டதில்லை இரு கைகள்!
பானையை விலக்குதடா சிறு கைகள்!
பொறுப்புடன் வேலை செய்தாலும் !
வெறுபபுடன் நடக்குதடா முகாமை!
பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்தும்!
பொருளேதும் எம்மிடம் இல்லை!
எழுத்தறிவு வீதம் வீழ்ச்சி !
மரண வீதம் அதிகம் !
அடுப்புடன் பெண்கள் யுத்தம்!
போதையுடன் ஆண்கள் உறவு!
இதுவா நம் வாழ்க்கை?!
முன்னேறிச் செல்லுதடா உலகம்!
பின்னோக்கிச் செல்லுதடா நம்வாழ்க்கை!
பொறுத்தது போதும் மலையக தோழா!
இனியாவது நிமிர்ந்து நில்லடா

அன்புநிறை நெஞ்சங்களே

சத்தி சக்திதாசன்
தீபத் திருவொளியில் அகிலத்தில்!
தீமைகள் கருகிப் போய்விடவும்!
தீயவைகளின் தேவைகள் இங்கே!
தேவையற்று அருகிப் போய்விடவும்!
நேற்றைகளில் கடந்தவைகள் யாவும்!
இன்றைகளின் நிகழ்வுகள் யாவும்!
நாளைகளின் அனுபவமாய்க் கொண்டு!
நிச்சயம் புத்தொளி கண்டு வாழ்ந்திட!
நேசத்தில் விளைந்த ஞானத்தில்!
தேசத்தின் எல்லைகளைக் கடந்து!
வாசமிக்க தமிழ் மலர்களாக நாம்!
பாசமிக்க வாழ்வில் இணைந்து கொண்டு!
தீபத்தின் திருநாளாம் புவியில் காணும்!
தீபாவளித் திருநாளில் அனைத்து!
வேற்ருமைகளையும் கடந்து நாமிங்கு!
வேண்டுவோம் ஓரினமாய் ஓர் மதமாய்!
வெற்றிகொள் மொழியெங்கள் தமிழ்மொழி!
வாஞ்சையுடன் தமிழன்னை பாதம் பணிந்து!
அன்பு உள்ளங்கள் அனைத்துக்கும்!
அன்புடன் கூடிய வாழ்த்துக்கள்!
வாழிய ! வாழிய ! அனைவரும்!
அகிலம் சிறக்க பல்லாண்டு வாழ்க!
அன்புடன்!
சக்தி சக்திதாசன் குடும்பம்

விலையேற்றமும் தடுமாற்றமும்

நிந்தவூர் ஷிப்லி
குரல்வளை நெரிக்கும் விலையேற்றம்-எம்!
குடும்பத்து வாழ்வில் தடுமாற்றம்-இனி!
மனிதர்கள் முகங்களில் பெரும் வாட்டம்-இது!
தினம் தினம் நிகழ்ந்திடும் போராட்டம்!
கொஞ்சூண்டென்றால் சமாளிப்போம்-இது!
கிடு கிடுவென்றால் என் செய்வோம்-நாம்!
நமக்கள் மட்டும் விவாதிப்போம்-இதை!
நாடெங்கும் உரைத்திட யோசிப்போம்!
சொகுசாய் வாழும் சீமானே-இன்று!
சிக்கலில் சிக்கிச்சீரழிய-அட!
ஏழைகள் நாங்கள் என் செய்வொம்-இனி!
ஒரு வேளைதான் சோறுண்போம்!
சிரித்தால் கூட செலவாகும்-என்று!
சிரிப்பை மறந்தே வாழ்கின்றோம்-பிறர்!
வாழ்க்கை பற்றிக்கவலையில்லை-இது!
விதியா?சதியா?தெரியவில்லை!
ஐந்துக்கும் பத்துக்கும் அலைந்தோமே-இனி!
ஐம்பது நூறைத்தேடணுமே-இன்னும்!
இரண்டு மாதங்கள் போனாலே-நாம்!
ஆயிரம் என்றே ஓடணுமே...!
ஏன்தான் மண்ணில் பிறந்தோமோ..?-இந்த!
கேள்விக்கு மட்டும் விடையில்லை-நம்!
வாழ்க்கைச்செலவின் வளர்ச்சி மட்டும்-என்றும்!
வளர்ந்தே செல்லத்தடையில்லை!
தண்ணீர் குடிக்கவும் காசாச்சு-இனி!
கண்ணீர் குடிக்கும் நாளாச்சு-இது!
எதுவரை என்பது தெரியவில்லை-அது!
தெரிந்தவர் யாரும் இங்கில்லை

முன்னுக்குப் பின் முரண்

ஆல்பர்ட
ஆரம்பப்பள்ளியில்..... !
சாதிகள் இல்லையடி பாப்பா... !
முதல்வகுப்பில் !
ஆசிரியர் !
உரக்கச் சொல்லி !
பாடம் நடத்துகிறார். !
முதல் வகுப்பில் !
சேர வந்த !
மாணவனிடம் !
உன் ஜாதி என்ன? !
தலைமை ஆசிரியர் !
கேட்டுக்கொண்டிருக்கிறார். !
பொதுக்கூட்டத்தில்..... !
ஜாதியை !
ஒழிப்பதுதான் !
எங்கள் இலட்சியம் !
-அமைச்சர் ஆவேசம்! !
நான்கு சுவர்களுக்குள்..... !
என்னை !
அரும்பாடுபட்டு !
வெற்றி பெறவைத்த !
நம் ஜாதி !
சங்கத்தினருக்கு !
நன்றி! !
நம் ஜாதிக்காரர்கள் !
முன்னேற்றத்துக்கு !
பாடுபடுவேன். !
- அமைச்சர் வாக்குறுதி. !
- ஆல்பர்ட்