தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

எங்கள்வீட்டு லட்சுமி

ரவிஉதயன்
கத்தும் கன்றுகளைக்கடந்து!
பசியபுல்வெளியைக் கடந்து!
குன்றெனக் குவிந்துகிடக்கும்!
வைக்கோல் போர்களைக்கடந்து!
அருந்தி குளித்துமகிழ்ந்த!
குளத்தைக்கடந்து!
வீழ்ந்தமரத்தில்!
தான்வாழந்த இடத்தை!
வெறித்து நோக்குகிற!
ஒரு பறவயையப்போல்!
விழி பிதுங்கி நுரைசிதற!
அசை போட்ட வண்ணம்!
அண்டை மாநிலத்திற்கு!
லாரியில் அடிமாடாய்போகிறது!
நாங்கள் விற்று காசாக்கிவந்த!
எங்கள்வீட்டு லட்சுமி

ஒத்துக்கொள்ளா உன் காதலோடு

ரா. சொர்ண குமார்
ரா. சொர்ண குமார்.!
இன்னும் இன்னும் இன்னும்!
இதயம் வலிக்கிறது...!
உன் பொய்யான வார்த்தைகள்!
புண்ணாக்கிப் போனதால்,!
இன்னும் இன்னும் இன்னும்!
இதயம் வலிக்கிறது!!
உள்ளத்தை உறங்கவிட்டு!
உதடுகளை உயிர்பிப்பாய் !!
நீ சொன்ன வார்த்தைகளில்!
நீந்த முயன்று மூச்சிரைப்பேன்!!
தெளிவாக குழப்புகிறாய்.!
தெளியாமல் குழம்புகிறேன்.!
உனக்கான என் காதலினை!
நான் சொன்ன நாளன்று...!
எனக்கான உன் காதலை,!
உறவுகளின் மேடையிலே...!
சுற்றத்தின் தூக்கினிலே...!
கவலையின்றி கொன்றுவிட்டாய்!!
இன்று...!
ஒத்துக்கொள்ளா உன் காதலோடு!
ஒத்துப்போய்விட்டாய் நீ !!
உன்னால் செத்துப்போன காதலை!
கட்டி அழுகின்றேன் நான்

வினோதம்

ரா.கிரிஷ்
* தெருவுக்கு ஒரு கோயில் !
மரத்துக்கு ஒரு சாமியார் !
* கற்சிலைக்கு தங்க கீரிடம், !
தினந்தோறும் பலாபிஷேகம், நெய்அபிஷேகம் !
* ஊழல் செய்தவர்கள் !
உல்லாச காரில் உலா !
* கோடிகள் செலவில் !
ஒரு நாள் திருமணம் !
* ஏழ்மை பசியால் அழுகிறது !
என் பக்கத்து வீட்டு பாப்பாவும் .... ... !
ரா.கிரிஷ்

கூண்டுக்குள்

முத்துவேல்.ச
நாளை என்!
மனைவியாகப் போகிறவளிடம்!
முதன்முதலாய்!
பேசப்போகும் பதட்டத்தோடு!
நுழைந்தேன்!
ஒரு எஸ். ட்டி. டி. கூண்டுக்குள்.!
உடன் வந்திருந்த நண்பன்!
கடை வாசலிலேயே!
காத்திருந்தான் ஆர்வத்தோடு.!
சற்று தளர்ந்து திரும்பிய என்னிடம் கேட்க!
அவனுக்கு சில கேள்விகள் இருந்தன.!
இவளக் கல்யாணம் பண்ணிக்கிட்டு!
எப்படி சமாளிக்கப்போறேனோ தெரியல!
சரியான பட்டிக்காடு.!
நீ வா போ ன்னு பேசறா மச்சி என்றேன்.!
அப்போதுதான் எங்களைக் கடந்துபோக நேர்ந்த ஒரு பட்டினத்துப் பெண்!
அழகாய் ரசித்து வெட்கி சிரித்துச் சென்றாள்.!
பாலு மகேந்திராவின் படம்!
தெரிந்த ஒரு டீக்கடை மாஸ்டர்!
துணைக்கிருந்ததால்!
பாலு மகேந்திராவின் படத்திற்கு!
பின்னிரவுக் காட்சிக்கு அனுப்பிவைத்தார்கள்.!
விடிந்ததும் தன் இளம் மனைவியிடம்!
சொல்லிக்கொண்டிருந்தார்!
பையன் ஒரு மாதிரி சூப்பரான ஆளு!
இன்றும் நினைக்கும்போது வெட்கமாயிருக்கிறது!
அன்றைக்கு நிறையப் பேசிவிட்டேன் போல

சிறகு முளைத்த பலப்பம்

இப்னு ஹம்துன்
நாலா பக்கமும்!
சட்டங்களால் சூழப்பட்ட!
ஒரு சிலேட்டுத்தீவில்!
எழுதி அழித்து......!
அழித்து எழுதி......!
பழகி வந்தது!
பலப்பமொன்று!
புழுவென்று கருதியதொரு பறவை!
பற்றிக்கொள்ள!
அது!
அலைகடலை, மலைமுகடுகளை!
வனாந்திரத்தை, வனத்தை!
நதியின் தென்றலை, நெருப்பின் அனலை!
சொற்களின் சமவெளியை!
கடந்து பறந்தது!
பின்னொரு பொழுதில்...!
தளைகளற்ற பெருவெளியில்!
தவறவிடப்பட்ட போது!
அது!
சிறகு முளைத்தொரு!
வண்ணத்துப் பூச்சியாகியிருந்தது.!
- இப்னு ஹம்துன். !
----------------------------!
H.FAKHRUDEEN!
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)!
+966 050 7891953

பூவும் வாழ்வும்.. காலையில்.. நட்பு

கிரிகாசன்
பூவும் வாழ்வும்.. காலையில் காணும் கவிதைகள்.. நட்பு! -பிரிந்தபின் கூடல்!
01.!
பூவும் வாழ்வும் !
---------------------!
தேன்விழுந்த இலையொன்று தித்திப்பைக்கண்டது!
தேடியே பூவைக் கண்டு!
வான் பார்த்தகண்களும் வடிவோடு கர்வமும்!
வைத்தாயே அன்புமலரே!
ஏன் கொண்டுவாசமும் இனிக்கின்ற தேனையும்!
இதழ்மீது சுமந்து நின்றாய்!
தான்கொண்ட செய்கையால் தாவுமவ் வண்டோடு!
தரைவீழும் வாழ்வுகொண்டாய்!
நானிங்கு நிற்பதோ நாள்வாரம் மாதமாம்!
நலங்கொண்டு வாழும்போது!
தேனிங்கு கொண்டதால் தென்றலுந் திறங்கூற!
திகழ்கின்ற மேனியழகால்!
தானிங்கு நாளொன்றில் தன்மையைஇழந்தாடி!
தவித்துநீ வீழ்தலேனோ!
வீணிங்கு வாழ்வினை விதிகையில் தந்ததேன்!
விடு உந்தன் முறைமை என்றாள்!
”ஒர்நாளென் றாயினும் ஒங்கு புகழென்பது!
ஒருகோடி இன்பமாகும்!
வேர்போலும் மறைந்திங்கே வெளிகாணா வாழ்வது!
வியப்பென்று நகைத்துநின்றாள்!
பேர்கொண்டு திசையெங்கும் பிறர்பேச வாழ்வது!
பெரிதான போதையாகும்!
ஊர்கொண்ட கோவிலில் உள்ளதோர் இறையடி!
தோள் சேர்த்தல் நாமேயென்றாள்!
இலையாக இருந்தென்ன, இல்லையென வாழ்வது!
எவருக்கு வாழ்வுவேண்டும்!
கலைகூறு நற்கவி கவிஞரும் போற்றுவர்!
காணின்ப மலர்களாகும்!
விலைகூறி விற்பவர் இலைதன்னைக் கொள்வரோ!
இவர் வேண்டல் பூவையாகும்!
இருந்தென்ன வேர்போலும் இருள்கண்டு வாழுதல்!
எவருக்கு இன்னும்வேண்டும்”!
”ஆனாலும் அழகிகேள், அருந்திடத் தேனையும்!
எழில் கொஞ்சு மிதழும் வைத்தாய்!
போனாலும் திசையெங்கும் புகழ்மாலை சூடுவாய்!
பெயர்தந்து எமையேற்றினாய்!
தேனாலும் வாசமும் தேகமென் பாங்கிலும்!
திகழ்ந்தாலும் ஒன்று தெரிவாய்!
நானாலு இலைகளும் நல்வேருமில்லையேல்!
நீவாழ என்ன செய்வாய்!
ஆதார மென்றுநம் அகம்மீது பொறுமையென்!
றணிகொண்டு வாழுகின்றோம்!
நீதாங்கும் தேனையும் நிமிர்ந்ததோர் வாழ்வுக்கு!
நீர்கொண்டு ஊட்டுகின்றோம்!
வேர்தாங்க வில்லையேல் விழிக்காண அழகினை!
விரிகின்ற மலர் கொள்ளுமோ?!
தீதாங்கு மாதவன் ஒளிவாங்கி உயிர்காத்தல்!
தேவைநம் கடமையன்றோ?”!
02.!
காலையில் காணும் கவிதைகள்!
-----------------------------------------!
தெளிந்தது மனமும் துலங்கிடுவானும்!
தென்றல் தொடுஞ் சுனையும்!
கழிந்தது இரவும் கரைந்தவை இருளும்!
கனவுகளெழுந் துயிலும்!
நெளிந்தது ஆறும் நிமிர்ந்தன மரங்கள்!
நின்றிடும் நிரையழகும்!
அழிந்தது பனிநீர் அதுவென்ன பசும்புல்!
அணைசுகங் கசந்ததுவோ!
வழிந்தது மதுவும் வாசனை மலர்கள்!
விரிந்திடும் இதழ்எழிலும்!
பொழிந்ததும் தூறல் போயின முகில்கள்!
புரண்டிடும் மலையிடையும்!
செழித்தன பெண்கள் சிகையிடை மலர்கள்!
செவ்விழி மலர்தாவிப்!
பழித்தன இரவின் பலமழி தோள்கள்!
பாங்குடை ஆடவரை!
செழித்திடும் வாழ்வும் சிரித்திடும் இதயம்!
சிவந்திடுங் காலைதனில்!
குளித்தன இறைவன் கோவில் மணித்திரு!
கொள்மறை சுகராகம்!
வழித்தெரு நீளம் வண்ணமென் சிறுவரின்!
வளமெடு குறுநடையும்!
விழித்திட, அறிவென் விதையிட நடைகொள்!
வீறெடு சந்தங்களே!
பழுத்திடும் கனிகள் ருசித்திடும் குருவி!
பாய்ந்திடு மணிலதுவும்!
கழுத்திடு மணிகள் கலகல ஒலியிடும்!
கடுநடை ஏறுகளும்!
இழுத்திடும் வண்டி இரைந்தன மூச்செழ!
ஏய்எனும் குரலொலியும்!
எழுந்திடுங் காலை இசையொலி தாளம்!
இவைதரும் சுகம்பெரிதே!
எழில்தரும் வாழ்வில் எழுபவை யாவும்!
இயற்கையின் ஒலிநாதம்!
களிகொளும் மனதில் கவிதைகள் தோன்றும்!
கருவென உருவாகும்!
வெளிதனில் நின்றால் விளைந்திடு தென்றல்!
வருடிடும் சுகம்காணும்!
ஒழிந்தது துயரம் உயர்ந்திட மனமென,!
உளமங்கு புதிதாகும்!
***!
கவிதையில் காணும் காலை!!
குழிந்திடும் கண்கள் குறைந்திடும் பார்வை!
கூனிடும் முதுமைதனும்!
அழுந்திடு பிணியும் உழன்றிட வலியும்!
அதனுடன் சிலராகும்!
விழுந்திடும் குரலும் வீம்பத னழிவும்!
வெறுமையின் நினைவோடும்!
கழிந்திடும் வாழ்வில் கவிதைகள்தானே!
காற்றினை உள்நிறுத்தும்!
03.!
நட்பு! -பிரிந்தபின் கூடல்!
--------------------------------!
இந்தமனம் செந்தணலில் வெந்ததுமில்லை துயர்!
தந்தஎதைக் கண்டுவிழி சிந்தவுமில்லை!
வந்தஒரு துன்பம்பெரி தென்பதுமில்லை -அதைத்!
தந்தவிதி வந்துநிலை கொண்டதுமில்லை!
சிந்தையிலே அன்புஒளி தந்ததினாலே உடன்!
விந்தைமனம் முந்திமகிழ் வெய்திடவாழ்வே!
சந்தணமும் வாசமதைத் கொண்டதுபோலே ஒரு!
நந்தவன மாய்மலர்ந்தேன் சிந்தையினாலே!
மந்தமென வந்துமுகில் நின்றதனாலே இருள்!
தந்தநிலை வந்திடுமோ என்பதனாலே!
பொந்தில்எரி பந்தமதை வைத்ததினாலே தீ!
வெந்ததென காடெரிந்து கொண்டதுமாமோ!
கந்தகமும் செந்தணலைக் கண்டதுபோலே மனம்!
முந்திஎழ வண்ணவெடி சிந்தியவாறே!
சுந்தரமாய் சந்திரவான் கண்டதினாலே அது!
தந்ததென்ன சந்தமிடும் செந்தமிழ் பாவே!
எந்தநிலை வந்துந்துயர் எந்தனின்மேலே ஒரு!
குந்தகமும்செய்வதில்லை இந்தொருநாளே!
மந்திரமோ தந்திரமோ சென்றது தானே இனித்!
தந்தனனே பாடிடுவோம் மங்கலந்தானே!
கந்தனவன் கைபிடித்த சுந்தரவேலே அது!
வந்துவிழும் துன்பதை, வென்றிடும்தானே ஒரு!
மந்திரமும் தந்தைசெவி சொன்னவனாமே அச்!
செந்தமிழின் காவலனை வந்தனம்செய்வேன்!
எந்தநினை வின்றிஇனி சொந்தமென்றாகி- சுக!
பந்தமெனப் பாசமுடன் அன்புகொண்டாலே!
உந்தி மனம் முந்திநிலை ஒன்றுபட்டாலே - துயர்!
வந்தவழி சென்றுவிடும் நன்றதுதானே!
சிந்தைகொளும் தொந்தரவும் செந்தமிழாலே - ஒரு!
பந்து சுவர் பட்டதென சென்றிடுமாமே!
எந்தநிலை கொண்டிடினும் சுந்தரவீணை - மன!
மென்னுமிசை தந்தியினை மீட்டிடுவோமே

புள்ளிகளும் கோடுகளும்

நாச்சியாதீவு பர்வீன், இலங்கை
இல்லாமையிலிருந்து!
புள்ளி தோன்றியது....!
புள்ளிகளின் நெருக்கமும்!
உடன்பாடும்!
நேர்கோட்டையும்!
இன்னும் பல கோடுகளையும்!
பிரசவித்தன!
கோடுகளினால்!
கோணங்களும் வட்டங்களும்!
உருவாகின!
உருளைகளும் இன்னும்!
பல பல உருக்களும்!
தோற்றம் பெற்றன!
கோவணம் கட்டிய!
கோடுகள் சில!
புள்ளிகளை புறந்தள்ளின.!
நாகப்பாம்பை!
ஒத்த உருவத்தில்!
ஒரு சில நாட்பக்கல்கள்!
வெற்று உருளையின்!
வேதாந்தப் பேச்சுகள்!
மட்டம் தட்டும்!
மடத்தன மாங்காய்கள்!
புள்ளிக்கு ஒன்றும்!
புரியவில்ல!
இந்தப் புதினங்களைப் பற்றி

புயலதிகாரம்

ரவி (சுவிஸ்)
அது ஒரு மாலைப்பொழுது !
வானொலியின் புயல் எச்சரிக்கையின்மீது !
நான் !
தூக்கி வைத்திருந்தேன் அந்த !
மாலைப்பொழுதை. !
கருமுகில்களின் பேயசைவில் !
மனசு அறுத்துக் கொண்டு !
அலைந்தது. !
பூட்டிய அறைக்குள் நான் !
நின்றேன் - அதுவே !
பாதுகாப்பானதாகப் பட்டதால். !
உருவாகப்போகும் பயங்கரத்தை விழுங்கி !
முன்னவஸ்தைப்பட்டேன். !
இரைச்சல் எங்குமாய் வியாபித்தது. !
பேய்க் காற்று, !
மழையைத் துரத்தியது !
மரக் கிளைகளை து£க்கி !
வீசியது. !
மாலைப் பொழுதின் ரம்மியத்தை !
கருமையாடி !
கொன்று போட்டது. !
வீட்டின் யன்னல்களை !
மூடிவைத்திருந்தேன் !
அதில் மீண்டும் மீண்டும் !
நிர்க்கதியாய் மழைத்துளிகள் மோதி !
வழிந்தன. !
கண்வெளி மரங்களை !
நிலத்தில் சாய்க்கும் வெறியிலும் மேலாய் !
சிறகுகட்டிப் பறந்துவிடு என்பதுபோல் !
இலைவரி உதைத்தது !
அதன் கழுத்தைப் பிடித்துத் தள்ளுவதுபோல் !
அலங்கோலப் படுத்தியது அந்த !
வெறிக் காற்று. !
மழைத்துளிகள் !
மரத்தின் இலைக்காட்டுக்குள் வீழ்ந்து !
அழிந்ததை நான் !
பார்க்கவில்லை !
மரம் அழுததை !
அன்றுதான் பார்த்தேன். !
என் வீட்டு முற்றத்து மரத்தின் !
வீழ்கையை என் !
கண்முன்னால் பார்க்கப் போகிறேனா? !
மனசு இசைய மறுத்தது. !
ஆனாலும் அது நடந்தது. !
ஒரு சல்லி வேரைக்கூட விடமாட்டேன் !
என்று ஏன்தான் !
மதம்கொண்டு எனது பார்வைப் பரப்பைத் !
தாக்கியது இந்தப் புயல். !
எல்லாம் ஓய்ந்த பின்னும் !
சின்னாபின்னப்பட்ட இந்த மாலையை நான் !
ஒழுங்குபடுத்த முடியவில்லை. !
சிதைக்கப்பட்ட மழைத்துளிகள் !
உருவி எறியப்பட்ட இலைக் கூட்டங்கள் !
அடித்து நொருக்கப்பட்ட கொப்புகள் !
இதனூடு !
ஒரு மாலைப்பொழுதை கசக்கியெறிந்த அந்தப் !
புயலின் இன்னொரு பிரதியை !
கற்பனையிலிருந்தும்கூட தூக்கியெறியவே விரும்புகிறேன். !
- ரவி (சுவிஸ்180903)

1+1=(2)ரிமை

புதியவன்
பறவையைப் பார்த்து!
அதிகாரமாய் சொன்னது!
அடைமழை!
சிறகுடைய பறவையே!
பறப்பது நம் உரிமை!
பறக்காமலிருக்காதே!
பற! புற! என்றது!
அடைமழை அலற!
பதிலுரைத்தது பறவை!
அடேய் மழையே!!
சிறகு கொண்டு பறப்பதா!
காலைப் பரப்பி நடப்பதா!
முடிவெடுப்பது நாங்கள்டா!!
உரிமை என்றால் இரண்டுந்தான்!
பறப்பதும் பறக்காதிருப்பதும்!
இந்தப் பராளுமன்ற வவ்வாள்!
பல்லை மறைத்து!
பறவைப்போல் நடிக்கும்!
பிறகு பல்லைக் காட்டி!
மிருகம்போல் நடக்கும்!
வவ்வாள்களின் அகராதியில்!
நிற்றல் என்பதற்கு!
தலைகீழாய் தொங்குவதே அர்;த்தம்!
பாராளுமன்ற வவ்வாள்களை!
நேர்படுத்தல் என்பது!
பிப்ரவரி முப்பத்தொன்றிலும் நிகழாது!
மான்களின் தேசத்தில்; மலைப்பாம்பின் செல்வாக்கில்!
ஓநாய் தலைமையில் ஒரு கூட்டணி!
நரியின் தலைமையில் ஒரு கூட்டணி!
தண்ணீர் முதலைகள் தனியணி!
மான்கள் தம் வாழ்வை!
யாருக்கு பலியிடும்?!
இதுக்கொரு தேர்தலா!!
உன் பற்களின் பிடியில்!
கூர்மையான அழுத்தத்தில்!
மூச்சு உடைந்து!
நாக்கு தள்ளுவதே!
எங்கள் வாழ்க்கையா!!
மடையன்தான் நான் என!
நம்மையே பறைச்சாற்றும்!
ஓட்டு நாம் போடல் நன்றா!!
மனம் வெந்து போனாலும்!
போர்வீரர் ஆனாலும்!
உயிர்தியாகம் செய்தல் மேலா!!
வலிமையின் முகமே மாற்றம்!
எமது தேக்கம் விரைவில் நீங்கும்

இரண்டு தடவைகள் வாழ்கிறாய்

பர்ஸான்.ஏ.ஆர்
அனைத்து சலனங்களினையும் அடக்கி!
என் மூச்சைத் திருடி!
நீ அதிர்வுகளோடு எழுந்து போனாய்.!
இப்படியிருக்காது என்ற என் ஆசைகள் மீது!
உன் ஆளுமையும் அதிரவைக்கும் விம்பல்களும்!
உருக்குலைய வைத்து!
என்னை சாகடித்துக் கொண்டே இருக்கிறது.!
உன்னை முதலினைப்படுத்தி!
என்னை விட உன் மகிழ்விற்கே இவையெல்லாமென!
பல கோடி தடவை கெஞ்சினேன்.!
உன் அசட்டுக் காதுகளும்!
உன்னிலைகளே அனைத்தும் என்ற கனவுகள்!
என் உடலின் இரு அந்தங்களிலும்!
மீசான் கட்டைகளை செருகி விட்டது.!
எனக்கேயான எனது அனைத்தினையும் மறுத்தாய்.!
உன் பிடிவாதங்கள் நிறைந்த உலகில்!
நீ இட்டுள்ள உறுதியான உனது நிலைகளில்!
என்னையும் ஓடவிட்டு!
நீ வாழ்வதை பார்த்துக் கொண்டிருக்கிறாய்.!
நீ உலகில்!
இரண்டு தடவைகள் வாழ்கிறாய்.!
!
-பர்ஸான்.ஏ.ஆர் !
09.06.2008