தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

வீடுபோகும் கனவுகள்

புஸ்பா கிறிஸ்ரி
அவசரமான காலையின் நேரம் !
அதிகமான வாகன ஓட்டம் !
சதிகாரப் பனியின் கொட்டம் !
சகதியாய் மாறிடும் ரோட்டும் !
கனதியாய் உடைகள் வாட்டும் !
கடுகதியாய் வந்திடும் பஸ்ஸீம் !
நெரிசலாய் நகர்ந்திடும் நீள்வாகனம் !
வரிசையின் நேரத்தைக் கூட்டிடும் !
வண்டியைப் பிடித்திட ஓடிடும் !
சண்டைக் கோழியாய் கூட்டமும் !
முண்டியிட்டு மோதியே ஏறிடும் !
மண்டையைப் பிய்த்திட நேரிடும் !
கூட்டத்தில் இருக்கையைத் தேடிடும் !
கூட்டத்தோடு நானுமங்கு நின்றிடும் !
நேரத்தில் இடமும் வந்திடும் !
நீண்டதொரு பெருமூச்சு வெளியேறும் !
கடைசியில் வேலையைத் தொடங்கிடும் !
போதினில் கண்களை நிறைத்திடும் !
போதாத மாலைநேரம் வந்திடும் !
மறக்க முடியாத சனக்கூட்டம் !
நெரிசலுடன் ஏறிடத் துடித்திடும் !
கரிசனைக் கனவுகளாய் கண்டிடும் !
விருப்பமுடன் வீடுபோகும் கனவுகள் !
!
புஷ்பா கிறிஸ்ரி

கி.பி

பாண்டித்துரை
பாண்டித்துரை!
உலகத்தின் கணக்கினை வகுத்தவன்!
நீ வந்ததன் வழித்தடம் பிறழ்கிறதோ?!
உலகமயமாதலாய்!
உன் படம் ஏந்தி எங்கும்!
விளிம்புநிலை மக்களை வாங்க!
அங்கும் அதன் விகிதாச்சாரமே!
அதிகரிக்கும் இப்போக்கிலே!
அடிபட்டுபோகிறது!
உன் மனிதநேயம்!
இனியாவது நீ பிறப்பாய்!
விளிம்பு நிலை விழி திறப்பாய்!
பரிசுத்த ஆவியாய் !
நீ மீண்டும் பிறந்திட!
ஏ கர்த்தரே என்னை ரட்சிப்பாயாக!
- பாண்டித்துரை

சடங்கு

அ. முகம்மது மீரான்
எவரேனும் ஒருவர்!
தோள் கொடுத்திருந்தால் போதும்..!
அவர்!
சாய்ந்திருக்க மாட்டார்!
இதோ!
இப்பொழுது நான்கு தோள்கள்!
அவரைச் சுமக்கின்றன.!!
ஏதேனும் ஒரு விழி!
இரக்கப் பார்வை!
வீசியிருந்தால் கூடப்போதும்!
அவர்!
வாழ்ந்திருக்கக் கூடும்!
இதோ!
இப்பொழுது எத்தனையோ விழிகள்!
கண்ணீர் வடிக்கின்றன!!
யாரேனும் ஒருவர்!
வழி காட்டியிருந்தால்!
அவர் பயணம்!
முடிந்து போயிருக்காது!
இதோ!
இப்பொழுது எத்தனையோ பேர்!
வழியனுப்ப வந்திருக்கிறார்கள்!!
வயிற்றுக்கு கஞ்சி கிடைக்காதவர்!
வாய்க்கு மட்டும்!
இன்று அரியும் பாலும்!!
வறுமையில் வாடி!
உதிர்ந்தவர்!
இதோ இங்கே!
பூத்துக் கிடக்கிறார்!
மாலைகளால்!!
நடந்த காலங்களில்!
அவருக்கு!
வழி தராதவர்கள்!
இதோ!
இப்பொழுது வீதியெங்கும்!
மலர் தூவுகிறார்கள்..!
பாவம் அவர் பாதங்களோ!
பாடையில்

வலி உணர்தல்

கலாவண்ணன்
பிரிவு வலியில் தவித்தல் !
பற்றி !
நீ என்ன அறிந்திருக்கிறாய்? !
புலரும் பொழுதில் !
ஒரு மல்லிகையின் வாசம் !
சுமந்து வரும் !
இளந்தென்றலையும் !
விழுங்கமுடியாதபடி !
தொண்டையில் சிக்கும் !
விரகதாபம் பற்றி !
உனக்கு என்ன தெரியும்? !
நீ அவ்வப்போது !
சிந்திச் சென்ற !
புன்னகைப் பூக்களின் !
நிறங்களுடனும் வாசனைகளுடனும் !
எப்படித்தான் !
நான் காலவெளி கடத்துவது? !
கடற்கரையோர மணற் பரப்பில் !
அந்திப் பொழுதொன்றில் !
பிணைக்கப்பட்டிருந்த !
நம்கைகளை !
மேலும் இறுக்கியபடி !
உன் உதட்டோரம் நீ பரப்பிய !
சென்நிறப் பூக்களில் !
ஆயிரம் வண்டுகளாய் மூழ்கிய !
என் விழிச்சிறகுகளை !
நான் எங்குலர்த்துவது? !
அந்தப் பொழுதில் !
நீ விட்டுச் சென்ற நினைவுகளின் சிதறல்களை !
ஒவ்வொன்றாய் சேகரித்து !
எப்படி நான் அசைபோடுவது? !
உன் விழிகள் பேசிய !
சத்தமற்ற ஒலிக்குவிப்புக்களால் !
உருவாக்கப்பட்ட !
உருவமற்ற கவிதைகளை !
எப்படி நான் வாசிப்புக்குள்ளாக்கலாம்? !
உன் உதடுபேசாத மொழிகளுக்கு !
கற்பனையில் உருக்கொடுத்து !
பல வண்ணங்கள் தடவி !
வானவெளியில் பறக்கவிட்டுள்ளேன் !
என் பற்றிய !
அந்த நாள் ஞாபகங்களில் ஒன்றெனும் !
எப்போதாவது உனக்கு நினைவில் வந்தால் !
சற்றே தலைநிமிர்த்திப்பார் !
மறைதலுக்கும் ஒளிர்தலுக்குமிடையே !
என்னைப்போலவே !
அலமந்து கொண்டிருக்கும் வானவில். !
-கலாவண்ணன்

நாளைய இந்தியா

s.உமா
அன்று!
சிப்பாய்கள்!
கலகத்தில்!
சிதைக்கத்தான்!
பட்டார்கள்... !
எங்கள்!
'ஜான்சி ராணி'களும்!
'கட்டபொம்மன்'களும்!
வீழ்த்தத்தான்!
பட்டார்கள்!
கொடி காத்த!
'குமரன்'களும்!
கொல்லத்தான்!
பட்டார்கள்!
ஆனால்!
இன்று!
இவர்களின்!
முயற்சிகள்!
எங்களின்!
வெற்றிகளாயின..!
வழி காட்டும்!
வெளிச்சங்களாயின!
இலட்சியப் பாதையில்!
சுதந்திரம் சுவாசித்து!
வெற்றி நடை !
போடுகின்றோம்!
நாம்!
முடிந்துவிடப்போவதில்லை!
எங்கள் முயற்சிகள்!
நாளை!
புதிய இலக்குகள்!
நிர்ணயிக்கப்படும்!
இலட்சியங்கள்!
எட்டப்படும்!
சிகரங்கள்!
தொடப்படும்..!
சிதைந்து போன!
சிப்பாய்களின்!
தோள்களில்!
கனவுகளைச்!
சுமந்து நிற்கும்!
எங்களின்!
தலைமுறைகள்!
நாளைய உலகில்!
வெளிச்சம் காட்டும்!
வெள்ளியாய்!
நிற்கும்!
வேற்றுமை!
வீண்சண்டை!
வெறி கொண்ட அதிகாரம்!
வீணர் வாய் பேச்சு !
பொய்மை!
'களை'!
பொசுக்கி!
நன்மை வளர்க்கும்!
வளம் பெறும்!
வல்லரசாகும்...!
-- s.உமா

கருப்பு விலைமகளொருத்தி

குமாரி பெர்னாந்து
வளையல்களைத் தேர்ந்தெடுத்த இடத்தில்!
நான் சந்தித்த விலைமகள்!
மிகவும் அகங்காரத்துடனும்!
அழகுடனும்!
கருப்பாகவுமிருந்தாள்!
!
காலையில் நாம் உணவுக்காகச் செல்லும்!
உணவகத்தின் இன்னுமொரு மூலையில்!
பீங்கான் நிறையச் சோறெடுத்து உண்பாள்!
அவளது வயிறு மேடிட்டிருப்பதை!
கதிரைகளுக்கிடையேயிருந்து கண்டேன்!
கருவுற்றிருந்தாள்!
பசியகன்றதும்!
மரத்தடிக்குச் சென்றாள்!
!
நாள்தோறும் சந்திக்க நேரும்!
அவ் வதனத்தை!
எவ்வாறு தாங்கிக்கொள்ள இயலும்!
வங்கி முன்னாலிருக்கும்!
ஒரேயொரு சிறு நிழல் மரம்!
அவளது இருப்பிடம்!
ஒருவர் மாத்திரமே இருக்க முடியுமான!
அவ்விடத்திலமர்ந்து வயிற்றைத் தடவிக் கொண்டிருப்பாள்!
இன்னும் சிறு குழந்தைகள் இருக்கக் கூடும்!
!
இறுதி நாளில்!
நான் விசாரித்தேன்!
உணவக முகாமையாளரிடமிருந்து!
சில தகவல்கள் கிடைத்தன!
'ஆம். அவள் கருவை அழித்துக் கொண்டாள்!
இப் பக்கத்து ஆட்களல்ல.'!
!
கவலையோடு சேர்த்து கோபமும் எழுந்ததன்!
காரணம் எனக்குத் தெரியும்!
என்னால் அப் பெண்ணின் உள்ளத்தை!
புரிந்துகொள்ள இயலாது!
வயிறு நிறையச் சாப்பிட்டு!
செய்வதறியாது!
எழுந்து நடந்தேன்

சமர்ப்பணம்

விஷ்ணு
உன் நிழல்களில்!
நிஜத்தை தேடிய!
என் நினைவுகள்!
சிதையிலே தீ கனலாய் ...!
ஓசைகள்!
ஒடுங்கிவிட்ட!
கள்ளிமுள் காட்டின்!
காரிருள்!
மௌனங்கள்!
கண்களுக்கு!
காட்சிகளாய் ....!
கண்ணீர் ஆற்றின்!
கரையோரம்!
கருநாகம் ஊர்கின்ற!
மண் கோபுரத்தின்!
விஷ வாடையும்!
பலி மந்திரமும்!
பகல் கனவுகளாய் ....!
உயிர் பெறும்!
ஒவ்வொரு கணங்களும்!
நீ எனக்கு!
சமர்ப்பணமாய்!
சார்த்திய!
வாடா மலர்களே

வீதியைக் கடக்கும் தம்பளப்பூச்சிகள்

துவாரகன்
வானத்துக் கதவுடைத்துக் கொட்டிய!
பெருமழையில்!
வீதிகள் கழுவப்பட்டன.!
சேறு வெள்ளம் !
நாய் மாடு இறைத்த எச்சங்கள்!
எல்லாமே அள்ளுண்டன.!
சருகுகள் தடிகள் பெருமழையால்!
இழுபட்டன.!
மழை பெய்த பின்நாளில்!
மண்ணில் மூடுண்ட வித்துக்கள் வெடித்தன.!
இளம்பச்சைக் குருத்துக்கள் வெளித்தெரிந்தன!
சாணக வண்டுகள் உருண்டு புரண்டன!
தம்பளப் பூச்சிகள் ஊர்ந்தன!
சரக்கட்டைகள் வீதியைக் கடந்தன!
வாரடித்த மண்ணை!
மண்வெட்டியால் வழித்தெடுத்தனர் சிலர்!
மழை சுத்தப்படுத்திய வெளியில்!
கிளித்தட்டு விளையாடினர் சிறுவர்!
வீதி அருகில் இருந்து!
வெற்றிலை போட்டுத் துப்பினர் பெரியவர்!
இது நல்ல மழை என்றனர்!
மழையால் வழித்தெடுக்கப்பட்ட எல்லாம்!
வீதியால் வழிந்தோடி!
பாலங்களுக்கடியில் தேங்கின!
குளங்களை நிறைத்தன!
எல்லைகள் இழந்த புதிய வீதியை!
தம்பளப் பூச்சிகளும்!
சரக்கட்டைகளும்!
கடந்து செல்கின்றன

முடிப்பேன்.. தவிப்பு

தமிழ்ப்பொடியன்
முடிப்பேன்.. தவிப்பு !
01.!
முடிப்பேன்!
-------------!
துன்பங்கள் எனும் தூண்டிலில் மாட்டி தவிக்கிறது - வாழ்வு!
அடி மேல் அடியாக இடி மேல் இடியாக தினம் தினம் - சோதனைகள்!
வேதனையின் விளிம்புகளை, விரக்தியின் சிகரங்களை தொட்டுப்பார்த்தாச்சு!
வாழ்தலின் சவால்களை எல்லாம் சந்திச்சு கன நாள் ஆச்சு....!
புழுவாய் பார்த்தவர்கள் என்னை பார்த்து புன்னகை புரியவும்!
என் விலாசம் கேட்டு விசாரிக்கவும் நிமிர்ந்து நிற்கிறேன் - ஆனாலும்!
இன்னும் ஓடும் நதியாய் தான் என் வாழ்தல்.!
இலட்சியங்களை அகலமாக்கியதால் - இன்றும்!
ஓடிக்கொண்டிருகிறது எனது கால்கள்!
வாழ்தலின் மொத்த சந்தோசங்களையும் முழுதாய் உணர்ந்தவன் - இன்று!
சின்ன சின்ன சந்தோசங்களையும் தொலைத்துவிட்டவன்.!
விழுவதும் பின் எழுவதும் எனக்கு வேடிக்கை விளையாட்டு!
கண்ணீர் என் வாழ்வில் கானல் நீர்!
அழுது ஆண்டுகள் ஆச்சு.!
விரக்தியின் விளிம்பில் நிண்டு விண்ணை தொடும்!
கனவுகள் கண்டவன்!
பல முடிவுரைகளின் பிறகுதான் அறிமுகவுரையே எழுதியவன்.!
தோல்விகள் என்னை காதலித்ததால்!
வெற்றிகள் எனக்கு வில்லன்கள் ஆனது.!
விடியும் திசையில் தான் என் பயணம் - விரைவில்!
முடிக்கும் வரைக்கும் இல்லை உறக்கம்.!
வெடிக்கும் கனலாய் கருகுது மனது!
உயிர் துடிப்பு இருக்கும் வரைக்கும் ஓயாது- எனக்குள்!
இருக்கும் முடிப்பேன் எனும் நெருப்பு.!
!
02.!
தவிப்பு!
-----------!
வணக்கம்!!!!
மனிதாபிமானம் மரித்த மண்ணில்!
மறுக்கப்பட்ட வழ்வை தொலைத்து!
தொட்டழைந்த மண்ணையும் விட்டு!
உடன் இருந்த உறவுகளையும் தொலைத்து!
முளையோடு பிடுங்கி எறியப்பட்ட விதையாய்!
ஊன்ற நிலம் கேட்டு வந்திருக்கும்!
தமிழ் பொடியனின் தவிப்பு இது!!
தலை நிமிர்ந்து வாழ்ந்த தாய்மண்ணை!
உயிர் காக்கும் உறங்காத விழிகளை!
தலை சாய்ந்துறங்கும் தாய்மடியை!
என் உயிராய் நேசித்த நண்பர்களை!
இவற்றையெல்லாம் தொலைத்து விட்டு வலியோடு!
வந்திருக்கிறேனே!-நான்!
வாழ்வதற்கா? இல்லை வாழ வைப்பதற்கா???!
ஆழக்கடல் கடந்து வாழ்வு தேடி!
வந்தவனை அகதி எண்டு அடையாளம் இட!
ஆயிரம் கேள்விகள்!!
அழகான பூந்தோட்டத்திலிருந்து!
பிடுங்கி எறியப்பட்ட சின்னஞ்சிறு செடி நான்!
என் வேர்களில் இப்போதும் ஒட்டி இருப்பது-என்!
தாய்மண்ணின் புளுதி மண் வாசம்தான்!!
இங்கே நிரந்தரமாய் வேரூண்டி விழுதுகள் விட!
ஆசையில்லை எனக்கு!!
ஆணிவேரும் அடிக்கட்டைகளும் அங்கே இருக்க-இங்கே!
ஆழ வேரூண்ட எவனுக்கும் ஆசை இல்லை.!
என் ஒவ்வொரு கிளைகளும் கொடுக்கின்ற நிழலில்!
இளைப்பாற வேண்டும் என் இனம்! என் சனம்!!
தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு!
தங்கத்தட்டில் தரமான உணவாம்!!
என்ன கொடுத்தாலும் என் தாய் கொடுக்கும்!
புட்டுக்கும் நண்டுக்கறிக்கும் ஈடாகுமா?!
ஓலைப்பயில் ஒழுகும் மழைத்துளியில்!
நனைந்து உறங்கியவனுக்கு-இங்கே!
ஓசியாய் கிடைக்கிறது ஏசி!
என்ன வேன்டும்?எண்டு கேட்டபின் கொடுக்கும் இவர்களுக்கு தெரியாது!
கொடுத்தபின், இன்னும் வேண்டுமா? எண்டு கேட்கும் இனம் நான் எண்டு.!
வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் எல்லாம்-அங்கே!
வீடு கட்டி வாழ்வதில்லை!!
காலநிலை மாற்றம் அவற்றை கடல் கடக்க வைக்கிறது.!
இப்போது எங்கள் மண்ணில் இலையுதிர்காலம்-நாளை!
வசந்தகாலம் வரும்போது மீண்டும் வானமேறுவோம்!
எங்கள் மண்ணில் நிரந்தரமான வாழ்வை தேடி

உழவர் மகன்

அருண்மொழி தேவன்
தாத்தா!
யானை கொண்டு!
போரடித்த இடத்தில்!
அப்பா!
காளை கொண்டு!
போரடித்த இடத்தில்!
மகன்!
தன் நண்பர்களுடன்!
பேசிக்கொண்டிருக்கிறான்!
போரடிக்கிறதென... !
-- அருண்மொழி தேவன்