தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

துயரங்களின் பின்னான நாட்களில்

ரவி (சுவிஸ்)
உலகின் அதிஅழகு !
சமாதானம் என !
படுகிறது எனக்கு. !
அதனால்தானோ என்னவோ !
அவ்வளவு இலகுவாய் அது !
கிட்டுவதில்லை. !
எனவே நான் !
சமாதானத்தை சந்தேகிக்கிறேன் !
வாழ்வின் ஒவ்வொரு இழைகளும் !
சிலந்திவலையாய்ப் பின்னப்பட்டபின் !
இன்னொரு புயலை நினைக்க !
உடல் நடுங்குகிறது. !
மண்ணைப் பெயர்த்துத் !
திரிந்த துயரங்களின் பின்னான !
ஓய்ச்சலின் நடுவே !
எதிரியுடனான கைகுலுக்கலில் !
ஆழம்கொள்கிறது சந்தோசம். !
ஆனாலும் !
இந்த விரல்களினு£டு பகிரப்படுவது !
அதிகாரம் மட்டும்தான் என்றால் !
சந்தேகம் கொள்வதிலிருந்து என்னால் !
தப்பிக்க முடியவில்லை. !
நடுநிசியில் விளக்குவைத்த !
வெளிச்சத்தில் ஓர் உருவத்தைச் !
சுற்றிச் சுற்றி குரைக்கிறது எனது !
வீட்டு நாய் !
இன்னும் நெருங்குவதாயில்லை !
புயல்பூத்த மையங்களைத் !
தொடும் அதிர்வுகளின் பின்னால் !
வெடிக்கப்போவது போரா !
தலைநிமிரும் சமாதானமா என்பதாய்க் !
காத்திருப்பதைத் தவிர நான் !
கொள்ள எதுவுமில்லை - !
இப்போதைக்கு! !
- ரவி (சுவிஸ்,நவம்பர்2002)

ஒன்று சொல்வேன்

சத்தி சக்திதாசன்
சக்தி சக்திதாசன் !
!
நெஞ்சினில் உனக்கு !
கனப்பது என்ன ? !
அன்புச்சுமையோ ? !
நேசத்தைக் கொடுத்து !
பாசத்தில் திளைத்து !
பாவம் ! !
பாவி என பெயர் கேட்டு !
பரிதவிக்கும் தோழனே ! !
ஒன்று சொல்வேன் கேளாய் ! !
ரணமான உள்ளத்தில் இன்றும் பாச !
ரதம் ஓட்டும் உன்னெஞ்சம் !
நானறிவேன் கலங்காதே ! !
உண்மையைத் தான் சொன்னாய் !
உறவைத்தான் மதித்தாய் ! !
கேட்பவன் மனதை !
சந்தேகத் திரை கொண்டு !
மூடி விட்டான் ! !
தவறு உன்னதல்ல !
குருட்டுக் கண்களால் !
ரசிக்கப்படாத ஓவியம் நீ ! !
தோழா ! !
ஒன்று சொல்வேன் கேளாய் ! !
ஓசையற்ற உன் இதய !
ஓலத்தை நானறிவேன் !
சிலநேரம் உன் காலம் முடிந்து விடும் !
சந்தேகம் அந்நேரம் விலகி விடும் !
சதிகாரன் நீயல்ல என !
சத்தியமாய் யாபேர்க்கும் புரிந்துவிடும் !
அப்போது வீசும் தென்றலிலே !
அன்புள்ளம் கொண்டவன் உன் !
அழியாத நினைவுகள் கலந்திருக்கும் !
அது வரை நண்பா ! !
ஒன்று சொல்வேன் கேளாய் ! !
உனை அறிந்த !
ஒருவனாய் நானுண்டு கலங்காதே

எனது முற்றமும் ... கஜல்

ஜாவேத் அக்தர்
எனது முற்றமும், எனது மரமும்!
!
விரிந்து பரந்திருந்தது!
முற்றம்!
அதில்தான் அத்தனை !
விளையாட்டுகளும்!
முற்றத்தின் முன்னேயிருந்தது!
அந்த மரம்!
என்னைவிட உயரமாயிருந்தது!
நான் பெரியவனானதும் !
அதன் உச்சியை தொடுவேன்!
என்ற நம்பிக்கையிருந்தது!
வருடங்கள் கழிந்து!
வீடு திரும்பினேன்!
முற்றம் சின்னதாயிருந்தது!
மரம் முன்னைவிட உயரமாயிருந்தது!
கஜல்!
நம் விருப்பத்தின் சோதனை தானிது!
அடி எடுத்தோம் இலக்கு பாதையானது!
பிரிவின் அச்சில் சர-சரவென சுழல்ன்றவன்!
மானுக்கு அதன் கஸ்தூரியே தண்டனையானது!
ஆசையாயிருந்தது கை கூடியது-ஆனால்!
தொலைந்து போனதே அது என்னவாயிருந்தது!
மழலையில் பொம்மைகளை உடைத்திருக்கிறேன்!
துயர முடிவுகளுக்கு அது ஆரம்பமாயிருந்தது!
காதல் செத்துவிட்டதால் கவலைதான் எனக்கும்!
அதுவே நல்ல காலத்திற்கான மாற்றமாயிருந்தது !
தொடுவதெல்லாம் பொன்னாக வேண்டுமென்றிருந்தேன்!
உன்னைப் பார்த்தப்பின்னதை சாபமாக உணர்ந்தேன்!
கனவெனும் நோய்க்கினி விடுதலை தான்!
உலகமொரு கசப்பான மருந்தாய் இருந்தது.!
-- ஜாவேத் அக்தர்!
'தர்க்கஷ்' கவிதைத் தொகுதியிலிருந்து !
தமிழில்!
மதியழகன் சுப்பையா

வீறு கொள் தமிழா

சிவகுமார்
வெடிக்குதங்கே தமிழ் ஈழம்..!
துடிக்கவில்லையா உன்!
நெஞ்சம்..!
தமிழை இகழ்ந்தவனை தாய் தடுத்தாலும் விடேன்!
இது பாவேந்தன் கூற்று..!
தமிழை எதிர்தவனை தரணியே தடுத்தாலும் விடேன்.. இதை!
ராஜபக்சேவிற்கு காட்டு..!
கொதித்தெழுடா மறத் தமிழா..!
வெறி உறைந்த விரி!
மார்பு..!
அனல் தெறிக்கும் கனல் கண்கள்..!
கூர் கொண்ட வாளேந்தி புறப்படடா கொழும்பு!
நோக்கி..!
முழங்கட்டும் வெடிச் சத்தம்..!
தொடங்கட்டும் ஒரு தர்ம யுத்தம்..!
சிங்களனின் சிரம் தீர்த்து..!
உதிரத்தால் சமுத்திரம் நிறைப்போம்

மத நல்லிணக்கம்

கிளியனூர் இஸ்மத் துபாய்
மனுஷனாக!
வாழ்வதற்கே சமயங்கள்!
மனிதனின்!
விருப்பத்திற்கும்!
அறிவுக்கும் தக்கவாறு!
கொள்கைகளில் நேசங்கள்!
நேசக்கரங்களில்!
நேர்த்தியாய் செய்யப்பட்ட!
அரிவாள் எதற்க்கு…?!
அறுக்கப்படுவது பயிர்களா!
மனித உயிர்களா…!!
அறிவாள் தீர்கப்படவேண்டிய!
பிரச்சனைகளை!
அரிவாளால்!
தீர்த்துக்கட்டப்படுதேன்…!!
கருவறையின்!
இரகசியத்தை!
நம் காதுகள் கேட்பது!
எப்போது…?!
மழைப் பொழிந்து!
அணையில் தேங்கி!
நதிகளில் கலந்து!
ஆறுகளில் பாய்ந்து!
சங்கமிக்கின்றன சமுத்திரத்தில்!
அதில்!
அணை எங்கே!
ஆறு எங்கே!
நதி எங்கே…?!
இவைகள்!
நீரை சமுத்திரத்தில்!
சேர்க்கும் வழிகள்!
எந்த அணையிலிருந்து!
வந்தோம்!
எந்த நதியில் இணைந்தோம்!
எந்த ஆற்றில் பிரிந்தோம்!
என்பதெல்லாம்!
சமுத்திரத்தில் கலந்த!
நீருக்கு தெரியுமா…?!
மமதையர்களின் ஆசைக்கு!
மனிதர்கள் பலிஆடா…?!
கோவிலும்!
பள்ளிவாசலும்!
மாதாகோவிலும்!
புனிதமாக வழிபாடு செய்யும் போது!
ஆறுமுகமும்!
அப்துல்லாஹ்வும்!
ஆல்பர்ட்டும்!
மனிதத்தை மறந்தவர்களா…?!
ஆறுமுகம் அறுவடைசெய்வது!
அப்துல்லாஹ்வின் வயல்!
ஆல்பர்ட் நிறுவனத்தில்!
அப்துல்லாஹ் மேலாளர்!
மதங்களை மறந்த!
இவர்களுக்குள் வளர்வது!
மதநல்லிணக்கமல்ல!
மனிதநல்லினம்!
தூய்மையான!
இவர்களுக்கு மத்தியில்!
துவைதத்தை தூவியது!
யார்…?!
அரசியல் என்ற!
வியாபாரச் சந்தையில்!
மதங்களும் மார்க்கங்களும்!
விற்;பனைப் பொருள்கள்!
சந்தை பரபரக்க விந்தைசெய்து!
பரபக்கத்தை (பிறர்மதத்தை)!
சூடுபடுத்தி குளிர்காயும்!
சூத்திரக்காரர்கள்!
அரசியல்வாதிகள்!
பிள்ளையைக் கிள்ளிவிட்டு!
தொட்டிலை ஆட்டுவதுப் போல்!
கட்டும் மேம்பாலங்களிலும்!
கடக்கும் சாலைகளிலும்!
நடக்கும் பாதைகளிலும்!
மதநல்லிணக்கம் என்றபெயரில்!
பெயர்தாங்கி நிற்க்கின்றார்கள்!
மறைந்த பல சமுதாய மனிதர்கள்!
சாலைகளில் மதநல்லிணக்கத்தை!
காண்பதை விட்டு!
அரசியலில்!
மதமற்ற மனிதர்களை!
தேடுவோம்….!
மனிதநேய உணர்வில்!
அரசியல் வாழ்ந்தால்!
ஆறுமுகத்தின் மகள்!
அப்துல்லாஹ்வின்!
மருமகள்!
ஆல்பர்ட்டின் மகன்!
ஆறுமுகத்திற்கு!
மருமகன்…!!
-கிளியனூர் இஸ்மத்

பிள்ளைத்தமிழ்

ஜெ.நம்பிராஜன்
அழைக்கும் வேலைக்காரியிடம்!
தாவும் குழந்தை!
பார்ப்பதில்லை!
சாதியும் பணமும்!
தண்ணீரில் விளையாட சம்மதம்!
குளிக்கச் சம்மதமில்லை!
எங்கள் வீட்டு பாப்பாவுக்கு!
ஒழுங்கற்றே இருந்தாலும்!
அழகாய்த் தெரிகிறது!
குழந்தை இருக்கும் வீடு!
-ஜெ.நம்பிராஜன்

நான்

பாண்டித்துரை
ஓவ்வொரு!
காலகட்டத்திலும் - என்!
ஏதிர்பார்ப்புகள்!
மறுதலிக்கப்படுகின்றன!
எதிர்பார்ப்பு இல்லாமல்!
நான் நானாக!
இருக்க முயல்கிறேன்!
உள்ளுணர்வு!
அவற்றையெல்லாம் உதாசினப்படுத்திவிடுகிறது!
நான் நிஜமென!
நம்பியதெல்லாம்!
என்னை விட்டு!
விலகும் போது!
மாய உலகத்தில்!
உலவும் பிம்பமாய்!
நான்...!

உனக்காக

சு.முருகேசன்
எழுதா எண்ணத்தில்!
எழுந்த எண்ணம்!
வண்ணம் தீட்டிய அழகின்!
மெருகு பதிந்த பருவம்!
பலரும் உன் விழியில் சிக்கியது!
என்னுள் உருகிய பார்வை!
மழையின் துளியாய் பதிந்தது!
ஒளியின் அலைகளாய் அன்பே!
விடியலின் சாரலில்!
தவமாக!
கடல் தாண்டி!
உனக்காக காத்திருக்கிறேன்!
!
எழுத்து: சு.முருகேசன்

போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்

தீபச்செல்வன்
போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த!
உடல்களும்!
--------------------------------------------------------------!
01!
வன்னேரிக்குளத்தில் குளித்துவிட்டு!
திரும்பிக்கொண்டிருந்த!
அம்மாவை அக்கராயனில்!
நான் தேடிக்கொண்டிருந்தேன்!
ஷெல்களுக்குள்!
அம்மா ஐயனார் கோயிலை!
விழுந்து கும்பிட்டாள்!
ஷெல் ஆனைவிழுந்தானை கடக்கிறது.!
நேற்று நடந்த கடும் சண்டையில்!
சிதைந்த கிராமத்தில்!
கிடந்தன படைகளின் உடல்கள்!
கைப்பற்றப்பட்ட!
படைகளின் உடல்களை!
கணக்கிட்டு பார்த்தபடி!
சிதைந்த உடல்கள்!
கிடக்கும் மைதானத்தில்!
பதுங்குகுழியிலிருந்து!
வெளியில் வந்த!
சனங்கள் நிறைகின்றனர்.!
பக்கத்து வீட்டில்!
போராளியின் மரணத்தில்!
எழுகிற அழுகையுடன்!
இன்றைக்கு நாலாவது தடவையாக!
திடுக்கிட்டு எழும்பிய அம்மா!
முறிகண்டி பிள்ளையாரை!
கும்பபிட்டபடி ஓடுகிறாள்!
பூக்களும் மண்ணும்!
கைகளில் பெருகுகிறது.!
02!
போன கிழமை விட்டு வந்த!
கிராமம் முழுவதுமாய் சிதைந்து போனது!
குசினிக்குப் பக்கத்தில்!
கிடந்த பதுங்குகுழியில்!
படைகளின் ஏழு சடலங்கள்!
மூடுண்டு கிடந்தன.!
போராளிகள் கைப்பற்றிய!
ஆயுதங்களில் மீட்கப்பட்டிருந்த!
கிளைமோர்களைக் கண்டும்!
எறிகனைகளைக்கண்டும்!
சனங்கள் பெருமூச்செறிந்தனர்.!
போர் வாழ்வை அழித்தபொழுது!
கிராமங்கள் போர்க்களமாகின!
அக்கராயன்குளம் காடுகளில்!
ஒளிந்திருக்கும் படைகளிடம்!
நாச்சிக்குடா வீதியே அகப்பட்டிருந்தது!
03!
அகதிகள் வீடாயிருந்த!
ஸ்கந்தபுரம் இத்திமரம்மீது எறிகனைகள் வீழ்ந்தன!
அகதிக்குடியிருப்புகள் நிறைந்த!
மணியங்குளம் கிராமம்!
எரிந்து சாம்பலாய்க் கிடந்தது.!
நிலத்தில் பதுங்கமுடியாதபொழுது!
வெளியில் வந்து விடுகிறேன்!
தலைகளில் விழும் எறிகனைகளை!
ஏந்தும் பிள்ளைகளை!
நினைத்து துடிக்கிற!
தாய்மார்கள் வெளியில் நின்றனர்.!
செஞ்சிலுவைச்சங்கம்!
கொண்டு வந்த போராளியின் உடல்!
மேலும் குத்தி கிழிக்கப்பட்டிருந்தது.!
இலங்கையில் ஒரு சிங்களத்தாய்!
துடித்தழுகிறாள்!
ஈழத்தில் ஒரு தமிழ்த்தாய்!
துடித்தழுகிறாள்!
சிதைந்த கிராமங்களில்!
பரவிக்கிடந்தன!
படைகளின் உடல்கள்!
மதவாச்சியை கடந்து!
படைகள் வரத்தொடங்கியபொழுது!
வவுனியாவைக்கடந்து!
போராளிகள் போகத்தொடங்கினர்.!
தெருமுறிகண்டி மடங்களில்!
கிடந்தன ஆள் இல்லாதவர்களின் பயணப்பொதிகள்.!
புதுமுறிப்பில் வீழ்ந்த!
ஏறிகனைகளில் இறந்த!
குழந்தைகள்!
வரிச்சீருடைகளை அணிந்த!
காட்சிகளை!
ரூபவாஹினி தொலைக்காட்சி ஒளிபரப்பியது.!
படைகளை நோக்கி சுடுகிற!
போராளிகளின் மனங்களில் இருந்தன!
பசுமையான கிராமங்களும்!
அங்கு நடமாடித்திரிகிற சனங்களும்.!
-தீபச்செல்வன்!
04.09.2008

எதையும் இதயம்

சத்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன் !
!
சுற்றிப் பார்த்தேன் முட்புதர்கள் !
எட்டிப் பார்த்தேன் ஏணிப்படிகள் !
தாவிப் பார்த்தேன் நீண்ட சுவர்கள் !
எதையும் இதயம் ? !
விழிகளை மூடினேன் கனவும் மறந்தது !
பேனவை மூடினேன் இதயம் கனத்தது !
கைகளை மூடினேன் வெறுமை நிறைந்தது !
எதையும் இதயம் ? !
மாலை வந்தது மலர்கள் துவண்டன !
காலை வந்தது கனவுகள் கலைந்தன !
நேரம் வந்தது நாடியன ஓடின !
எதையும் இதயம் ? !
காலம் மறைத்தது கற்பனைத் தேரை !
கண்கள் மறைத்தன கனவின் சுகத்தை !
நெஞ்சம் மறைத்தது நேற்றைய வளங்களை !
எதையும் இதயம் ? !
இனிமேல் வேண்டாம் பொருந்தாத வாழ்க்கை !
இனாமாயும் வேண்டாம் எட்டா ஆசைகள் !
கைகளில் வேண்டாம் கனத்த விலங்குகள் !
எதையும் இதயம் ?