தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

மரணம்

றஞ்சினி
இரவை நித்திரையால் இழக்க!
விரும்பாமல்!
பகலை சூரியனால் ஆகாசித்து!
கவலைகளை தவிர்த்து மகிழ்வில் மிதந்து!
வேலை வீடு உறவுகள் நண்பர்கள்!
எல்லாமே அடைந்தும் இன்னமும் இன்னமும்!
எதையோதேடி!
மற்றவர்களுக்கும் தீங்கு செய்து!
முந்தியடித்து தம் பெயரைப் பொறித்து!
இருக்கும் நாட்களையும் இழந்து!
மலிந்துபோகிறோம்!
எப்பவும் எமக்காக வெட்டப்படும் குழியை!
மூட்ட இருக்கும் தீயை மறந்து

வள்ளுவனின் எழுத்தாணி..பணிதல்

கொ.மா.கோ.இளங்கோ
01.!
வள்ளுவனின் எழுத்தாணி !
------------------------------------ !
உள்ளங்கை வருத்தி !
உருவானது !
வள்ளுவர் சிலை !
மயில், கணபதி, நந்தி, துர்க்கை !
முடித்த கைக்கு பரிசு !
இப்பணி !
உளியும் சுத்தியலும் !
ஓயாது உழைத்திருக்கும் !
திருப்தியில் பாறாங்கல் !
சிறந்த மொழியாக்கம் !
வெயிலின் உக்கிரம் ஓங்க !
சில வேளை !
வியர்வை உறிஞ்சிய சிலை !
முடிவுக்குவரும் மொழியாக்கம் !
பொருட்பவின் வள்ளுவன் தயார் !
எழுத்தாணியின்றி !
வெடித்தது யோசனை !
உளிஎடுத்த சபதி !
சிலையின் உள்ளங்கை திணித்தார் !
வீதி நடுவே மேடை நின்று !
ஈரடி செய்யுள் எழுதும் !
இனி இச்சிலை !
சுத்தியலின் இயற்பால் தொடங்கி. !
02.!
பணிதல் !
-------------- !
அகல் விளக்கின் !
சுடர் மொட்டுகள் !
கசிந்த வெப்பத்தில் !
காற்று வெளியின் !
கன்னம் !
சூடேறி போகிறது. !
கோபத்தில் வளி !
தீபத்தை !
அணைக்க முயல்கையில் !
உள்ளங்கை கூப்பி !
மன்னிப்பு கேட்டு !
தாழ்பணியும் !
இளஞ் சுடர் !
பணிதலின் வியாக்ஞானம் !
பளிச்சென !
சொல்லி போகிறது

ஒரு மைதானக்காட்சி

கருணாகரன்
ஆட்டம் முடிந்தபிறகு வெளித்திருக்கிறது மைதானம்!
வீரர்கள் போய்விட்டார்கள்!
ஆரவாரங்களும் போய்விட்டன!
ஆட்டம்பற்றிய கதைகளோடும் விமர்சனங்களோடும்!
ரசிகர்களும் போய்விட்டார்கள்.!
மைதானத்தில் ஆடியபந்து!
யாருடைய கவனமுமின்றி ஓய்ந்திருக்கிறது!
தனியே!
!
இப்போது !
யாருக்காவது நினைவிருக்குமா அந்தப்பந்தை?!
!
மைதானத்துக்கும் பந்துக்குமிடையில் !
ரகசியமாகப்படர்ந்திருந்த மௌனவெளியில்!
ஒப்பற்ற காயங்களோடு!
வெற்றிபெற முடியாத வீரர்கள் !
நடந்துசென்ற காட்சி !
உலுக்குகிறது அரங்கத்திலும் அரங்கத்துக்கப்பாலும்

முந்தைய இரவு

ரசிகவ் ஞானியார்
ஓட்டை வீடான..!
ஓட்டு வீடு,!
மாடி வீடாக..!
மாறிப்போனது!!
நகைக்கடை விளம்பர!
நகைகள்..!
வீட்டுப்பெண்களின்!
கைகளிலும், கழுத்திலும்..!
ஏறத்துவங்கின!!
கடன்காரர்களின் வருகை..!
குறைய ஆரம்பித்தது!!
கனவாகப்போய்விடுமோ? என்ற!
தங்கையின் திருமணம்!
நான் இல்லாவிடினும்!
லட்சம் இருந்ததால்..!
லட்சணமாய் முடிந்தது!!
அயல்நாட்டிலிருந்து!
காசோலை மூலமாய்!
வாழ்க்கை நடத்தியவன்..!
இப்பொழுது!
காசோடு வந்திருக்கின்றேன்!!
இழந்துபோன காலத்திற்கும்!
சேர்த்து வாழ..!
!
தந்தையின் நினைவைச்சுமந்து!
தனியாய் ஆடிக்கொண்டிருந்த..!
சாய்வு நாற்காலிச்சப்தம் வந்து!
காதுகளில் ..!
கிறீச்சிடுகிறது!!
தந்தையின் இறுதிநாட்களுக்கு கூட!
வரமுடியாமல்..!
விசாவினால் விலங்கிடப்பட்ட!
எனக்கு,!
யாரேனும் திருப்பித்தரக்கூடுமா?!
தந்தையின் இறுதிச்சடங்குக்கு!
முந்தைய நாளை?!
நிம்மதி இல்லாமல் போகின்ற!
இந்த பகலின்..!
முந்தைய இரவுக்காக!
காத்திருக்கின்றேன்!!
யாரேனும் திருப்பித்தாங்களேன்?!
- ரசிகவ் ஞானியார்
-- !
K.Gnaniyar!
Dubai

காயப்பட்ட அகதியின் கண்ணீர்க் கசிவு

நாவாந்துறைடானியல் ஜீவன்
நாவாந்துறைடானியல் ஜீவா- !
என் உள்ளம் !
தூங்குகின்றது... !
உடல் அசைகின்றது. !
நிசப்தம் கலைய !
நிற்கிறேன். !
இயத்திரத்தின் !
முன்னால் !
பஞ்சுக்கட்டை இரண்டால் !
காதைஅடைத்து விட்டு !
என்ன சத்தமடா !
யாழ்ப்பாணத்தில் !
கெலிவருவது போல்.... !
என்று நினைத்தபடி !
சின்னஞ் சிறுவயது !
அண்ணன்மார் !
அதிகரித்ததால் !
அவ்வப்போது !
பொறுப்பற்று !
பொழுதுபோன வாழ்வு....... !
பிறப்பென் று சொல்லிக்கொள்ள !
என்னைப் போல் !
இடிந்து போன !
எனது ஊர்........ !
காலைக்கதிரவன் !
கண்விழித்தானோ என்னவோ !
பிறப்போடு எனக்கு !
இருளானது. !
பருவங்கள் !
மாறிவிலகிச்செல்ல !
ஒவ்வொரு தேசமாய் !
என் இருப்பு.... !
எனக்கேது முகவா¤..? !
இயக்கமின்றி !
இயங்கும் !
என் வாழ்வின் துயா¤ல் !
ஒவ்வொரு கணமும் !
போரிடும் மனவிறுக்கம் !
என் மனவீதியில் !
பால்நிலாவொன்று !
பரவசமாய் விரிகின்றது !
அந்தக்கணமே !
வண்ணத்திப்பூச்சி போல் !
திசை தெரியாமல் மனம் !
மிதிபடுகின்றது !
என் கனவுகள்.... !
அழுகையோடு !
அம்மாவின் நினைவுகள். !
என்னுள் வேரோடி !
என் மனதை !
அழுத்திக்கொண்டிக்கின்றது !
ஒருவார்த்தை !
மனித நேசிப்பு !
இப்பூமியில் !
எப்படி சாத்தியப்படும் !
என்ற வினாவெழுப்பியபடி !
அச்சம் ஊடறுத்து !
உயிர்த்தெழுதல் !
சாத்தியப்படதா போதும் !
பிலாத்துவைப் போல் !
கைகழுவ !
ஈரமான இதயம் !
இடங்கொடுக்க மறுக்கிறது !
என் ஜீவனத்திற்குரிய !
உயீர்...... !
எத்தனை !
நெருக்குதலுக்குள் !
என்னால் !
தனித்து வாழமுடியாது !
என்பதை !
இந்தக்கணப்பொழுதில் !
உணர்கிறேன்.... !
பகல் முழுவதும் !
து£ங்குவதே !
கடமையாயின !
இரவு வேலையே !
என் இருப்பை !
அடையாளப்படுத்துகின்றது. !
இயத்திரத்தின் !
மேலே !
வலப்பக்கமாக..... !
நிலாபோன்ற !
வெள்ளை நிற !
மின் விளக்கு !
அந்த வெளிச்சத்தை தேடி !
தும்பி போன்ற பறவை !
பறந்து கொண்டிருந்தது !
என் பார்வையை !
விலக்காமல் !
பார்த்துக் கொண்டிருந்தேன் !
ஒரு நொடிப் பொழுதுதான் !
சுருண்டு சுருண்டு !
கீழ் நோக் கி வந்து !
என் காலடியில் !
விழுந்தது.... !
சூட்டு காயங்களுடன் !
வீதியில் வீசப்பட்ட !
என் தோழனின் !
உடல் போல்

இதயத்துடிப்பு.. காதல்.. மொழி

பிரதீபா,புதுச்சேரி
01.!
இதயத்துடிப்பு !
-----------------!
உன் பார்வை வீசிய!
காந்த அலைகளில் நனைந்த!
என் மனம்!
என்னுடன் வீடு திரும்ப!
மறுத்து துள்ளி குதிக்கிறது!
என் இதயத்துடிப்பாய்........!
02.!
காதல்!
-----------!
கதிரவன்!
ஒளிக்க‌திர்க‌ளில்!
மலர்ந்த மலரும்!
நானும் ஒன்றென்றாய்.!
உண்மை என்றுணர்ந்தேன்.!
உன் பார்வையில்!
மொட்டாயிருந்த!
நான் மலராய்!
மலர்ந்த மறுகணமே.......!
!
03.!
மொழி!
-----------!
நாம் உரையாட!
பல மொழிகள்!
இருந்தும்!
நீயும் நானும்!
தனித்து நிற்கிறோம் !
மௌனமாய்!
நம் இதயத் துடிப்புகள்!
பேசுகின்ற மொழியை !
ரசித்தபடியே

சொறி நாய்களின் கட்சி

எம்.எல்.எம். அன்ஸார் -இலங்கை
இலாபகரமான முதலீடு!
அரசியல் கட்சி தொடங்குவது.!
எனதூர் சொறி நாய்கள் கூட!
உழைக்கத் தயாராகிவிட்டன!
புதிய கட்சிகள் திறந்து!
நாய்களுக்குப் பேரானந்தம் நக்குவது.!
சமூகத்தின் மார்க்கத்தின் பெயர்களை அடுக்கி !
ஊருக்கொரு கட்சி!
கட்டி முடித்துக்கொள்ளுமிச் சொறி நாய்கள்.!
பேராசை, “தேசியத் தலைவர்” கொம்பு!
முளைக்க வேண்டுமென்ற.!
மூன்று நான்கு அமைச்சு, வர்சையாய் வாகனங்கள் !
அரசாங்க அரண்மனைச் சுகங்களாகியவற்றை !
துப்பனி வழிய நக்குவதற்கென்றே!
நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டலைகின்றன. !
பெரும் பாதுகாப்பு கையிலொரு கட்சி.!
வேசையோடு நடுத்தெருவில் படுத்தாலும் !
தலைவராயிருந்தால் “பத்வா” வழங்கிப் பாதுகாப்பார்கள் !
சமூகத்தைச் சிங்களக் கட்சிகளிடம் !
பெரும் விலைக்கு ஏலமிட்டு !
மொத்தத் தொகையையும் சுருட்டலாம்.!
வாய் பேசவே மாட்டார்கள்!
தேசியப் பட்டியலுக்கு காசு கட்டிக் காத்திருப்போர்!
கள்ளன், காவாலி, பொண்பிடியன்களை !
அதியுயர்; பீடத்திற்கு நியமித்தாலும் !
ஆதரவுக் குரல் தர !
முண்டியடித்து வருவார்கள் அடிவருடிகள் !
கழுதை பன்றிகளை காசுகொடுத்து வாங்கி!
சில சொறி நாய்கள் !
கூட்டமைப்பு சேர்த்து கொண்டாடிக் குதிக்கின்றன!
முஸ்லிம் !
முதலமைச்சர்!
சுயாட்சி!
தனித்தரப்பு இவ்வவசியங்களை !
மாங்காய் தேங்காய் மண்ணாங்கட்டிபோல் பரப்பி வைத்து!
வீதியோர வியாபாரம் செய்வதற்கு !
பொருத்தமான கட்சி கூட்டமைப்புத்தான்!
மாகாணத்தின் பெயரில் சுயேட்சை கட்சி தொடங்கினால்!
கூட்டு வியாபாரம் புரிந்து சம்பாதிக்க இலகு!
படித்த எருமை மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள !
எம்பி ஆசை.!
அரசியல் கட்சி ஆரம்பிப்பது உண்மையில் !
ஆதாயமான பங்குச் சந்தை வியாபாரம்!
உம்மா பெயரில் இன்றைக்கு! !
முஸ்லிம் அரசியல் கட்சிகள் !
நாளை முளைக்கும்!
கள்ளப் பொண்டாட்டிகளின் பெயர்களில்

நாங்கள் பேசுவது? நாட்டின் முட்டைகள்

புதியவன்
நாங்கள் பேசுவது கேட்கிறதா?.. நாட்டின் முட்டைகள்!
01.!
நாங்கள் பேசுவது கேட்கிறதா?!
-------------------------------------------!
விசயங்கள் பூக்களாக இருந்தால்!
பட்டாம்பூச்சிகளாக நாம்!
சிறகடித்துப் பேசுவோம்…!
பட்டாம்பூச்சிகளாக அவர்கள் பேசினால்!
நாம் பூக்களாக கேட்டிருப்போம் !
கடல் அளவில் விசயமென்றால்!
வீசப்படும் வலையுள் மீன்களாக பேசுவோம்…!
மீன்களாக அவர்கள் பேசினால்!
நாம் ஆழ்கடலாக கேட்டிருப்போம் !
விசயங்கள் பெருங்கல்லாக கடினமாக இருந்தால்!
சிலை செதுக்கும் உளிகளாக பேசுவோம்…!
உளிகளாக அவர்கள் பேசினால்!
வடிவெடுக்கும் பாறைகளாக கேட்டிருப்போம் !
ஊதா நெருப்பாக விசயங்கள் இருந்தால்!
சிவந்த கங்காக வெடித்துப் பேசுவோம்…!
கங்குகளாக அவர்கள் பேசினால்!
காத்திருக்கும் எரிமலையாக!
எழுச்சியுறக் கேட்டிருப்போம்!
நம்மோடு அவர்களும்!
அவர்களோடு நாமும்!
பேசி முடிவெடுக்க!
ஆயிரமாயிரம் இருக்கின்றன!
கழுத்தை இறுக்கும் பிரச்சனைகள் !
இந்த சமூகம் மாறிவிட வேண்டும்!
இது மக்களின் விருப்பம்…!
இந்த சமூகத்தை மாற்றிவிட வேண்டும்!
இது போராளிகளின் முழக்கம்! !
எடுக்கப்படும் முடிவுகள்!
செயல்களாக முடிச்சவிழ்கின்ற!
ஒவ்வொறு பொழுதிலும்…!
நாம் சமூகமாற்றத்தை!
கண்டெடுக்க முடியும் !
சிமெண்ட்டும் மண்ணும்!
நீரில் குழைந்து இறுகுதல் போல்!
மக்களாக போராளிகளும்!
போராளிகளாக மக்களும்!
சமூக விஞ்ஞான உணர்வில்!
கலந்து இறுகிவிட்டால்…!
பூ போன்ற அடக்குமுறைக்கும்!
புயல் போன்ற ஒடுக்குமுறைக்கும்!
கண்முன் அரங்கேறும் அநீதிகளுக்கும்!
கண்களில் நடனமிடும் துயரங்களுக்கும்!
சமாதி கட்டும் சரித்திரத்தை!
நாமும் படைக்கலாம்! !
!
02.!
நாட்டின் முட்டைகள்!
-------------------------------!
நாட்டை கவ்வி இருக்கின்றன பாம்புகள்!!
ஒவ்வொரு குடும்பத்தையும் அடுப்பாக்கி!
நம்மை அவித்துத் திண்கின்றன…!
சூடேறும் நீரில்!
நூறு டிகிரி வெப்பத்தில்!
வெடித்து சாவோமென!
தவளைக்கு தெரிவதில்லை!!
நாம் தவளைகளாக இருக்கின்றோம்…!
தவளைகள் தாவுவதால்!
பாம்பு பயப்படப்போவதில்லை!!
நாம் வாழ வேண்டும் !
நாட்டுப்பற்றை அடக்கியிருக்கும்!
அத்தனைக் குடும்பங்களையும்!
அடைகாப்போம்!!
அதிகார ஓட்டை உடைத்துக்கொண்டு!
கழுகு குஞ்சுகளாய் வீர அழகுடன்!
நாட்டுப்பற்று வெளிவரட்டும்!
பாம்பிற்கு பலியாக!
இன்னும் நாம்!
கோழிகளல்ல தவளைகளல்ல!
நம் கழுகு கரங்களில்!
பாம்புகளின் கதை!
நிச்சயம் முடியும்

பூமியை மிஞ்சிய பொறுமைக்கு

மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
ஓட்ட பந்தயத்தில் !
ஆமையோடு போட்டியிட்டு!
தோற்றுப்போ. !
நத்தையோடு கைகோர்த்து!
நகைச்சுவையாய்!
பேசிக்கொண்டு !
நடைபயிற்சி சென்று வா. !
நுளம்புகளின் நூலகத்தில்!
முகம்சுழிக்காமல் !
சத்திய சோதனை !
புத்தகம் படி. !
அட்டைகளுக்கும்!
மூட்டை பூச்சிகளுக்கும் !
இரத்த தானம் வழங்கி!
ஆனந்த படு . !
பிரதான சாலையோரங்களில்!
வாகனங்களில்!
மோதிவிடாதவாறு!
எருமை மாடுகளை!
மேய்த்துப்பார். !
முதியோர் இல்லங்களில் !
ஆதரவற்றோர் படும்!
அவஸ்தைகளுக்குள்!
ஐக்கியப்படு !
மதுபான சாலைகளில் !
தேநீர் குடித்துவிட்டு!
புகை பிடிக்காமல் !
வெளியே வா !
உண்மை பேசு !
அறுநூறு அங்கங்கள் !
கடந்து விட்டாலும்!
இப்போதுதான் தொடங்கியுள்ளது!
என்ற உற்சாகாத்தோடு!
அறுவையானபோதும்!
அமைதியோடு!
ஒன்று விடாமல் !
தொலைக்காட்சித் தொடர்களை!
தொடர்ந்து பார் !
கிராமத்து ஒற்றையடி!
பாதைகளில் மாட்டு வண்டி !
ஒட்டு !
வாகன நெரிசல்களில்!
உன்னை தாண்ட !
எத்தனிக்கும் !
எவருக்கும் வழி கொடுத்து!
சமிக்ஞை ஒலி!
எழுப்பாமல் வாகனம் ஒட்டு !
ஒலிவாங்கி மன்னர்களின் !
அண்ட புளுகுகளை !
சலிக்காமல் செவிமடு !
இது போன்று!
உன்னால் முடியாதது !
எதுவானாலும் உனக்கது !
சாத்தியப்படுமானால் !
உண்மையில் நீ!
பொறுமையில் இந்த!
பூமியை மிஞ்சலாம்

எனக்கேன் தாய்ப்பால்

சு.சிவா
ஈழத்தில்!
எத்தனையோ கவலைகள்!
உனக்கு மட்டும் ஏனம்மா!
என்!
உயிர்பற்றிக் கவலை!
கண்ணீரின் பலத்தால்!
மனதைக்கரைத்து!
சுதந்திரக் குளியலில்!
நீராட நினைத்தவனை!
அகதிப் புழுதியில்!
அழுக்காக்கி விட்டாயே!
கண்ணீருக்குப் பயந்து!
என்னைக்!
குருடாக்கி விட்டாயே!
சுதந்திர வெளிச்சத்திற்காக!
வீணைகளே விறகுகளாக!
எரியும் தேசத்தில்!
இந்த மூங்கில் கம்புக்கேன்!
முக்கியத்துவம் கொடுத்தாய்!
உன்!
புல்லாங்குழல் மட்டும்!
புண்கள் காணாமல்!
இசைபாட வேண்டுமா!
தாய்ப்பாலோடு நீ ஊட்டிய!
தமிழுணர்வும்!
இரத்தத்தோடு கலந்துவிட்ட!
இனவுணர்வும்!
அகதி வாழ்க்கையால்!
அழிந்துவிடுமா!
ஈழத்தில் நடக்கும்!
கொடுமைகள் கேட்கும்போது!
என்குருதி!
கொதிக்கின்றது தாயே!
உணர்ச்சிகள் இல்லாமல்!
உறங்கிக் கிடப்பதற்கு!
பிணமாகவா என்னைப் பெற்றாய்!
இன்னும்!
எத்தனை நாட்களுக்கு!
என் உணர்வுகளை!
கொன்று புதைப்பது!
தாயே எனக்கேன்!
தாய்ப்பால் தந்தாய்!
!
-சு.சிவா