தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

விரைந்து வா

பிரான்சிஸ் சைமன்
அன்று….நள்ளிரவு !
உலகின் கவனம் முழுவதும்!
உன் மேல்…2008 –ன் மாமனிதன் நீதானே!
இருக்காத பின்னே!!
என்னக் கூறப்போகிறாய்!
என்னச் செய்யப் போகிறாய்,!
உன் வாக்குறுதிதான் என்ன என்று!
இவ்வுலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது!
அன்று !
“பிராவுன்” கொடுமையில் பாடுப்பட்ட யூதர்களை!
விடுவிக்க வந்த “மோயீசனை” போல்!
இன்று!
இராவணணின் “இன அழிப்பு” வேட்டையை!
தட்டிக் கேட்க வந்தவன் “நீ” என்று!
…………என் ஆழ்மனம் பறைச்சாற்றிக்கொண்டிருந்தது!
உன் உதட்டினிலிருந்து வெடித்த ஒவ்வொரு வார்த்தையும்!
அரசியல் நரிகளின் இரத்த வெறிக்கு பலியாகிக்கொண்டிருக்கும்!
எம் மக்களுக்கு புத்துயிர் கிடைக்க வித்திட்டது!
ஆனந்தத்தில் இலயத்துப்போயிருந்தேன்!!!!
இரு விரல்கள் கொண்டு!
கண்ணத்தை லேசாக கிள்ளி பார்க்கிறேன்!
“வலி” நான் நிஜ வாழ்க்கையில்தான் இருக்கிறேன்!
உறுதிப்படுத்தியது!
உன் வார்த்தைகள் நிஜமானவை!
உன் வாக்குறுதி உறுதியானவை!
என் எண்ணங்கள் ஞாயமானவை!
என்று இவ்வுலகிற்கு உறுதிப்படுத்த!
நீ விரைந்து வருவாய் என!
என் தமிழினம் காத்துக்கொண்டிருக்கிறது!
!
தூக்கத்தை பறிகொடுத்து !
உன் பேச்சுரையில் மயங்கிக் கிடந்த!
கோடிக்கனக்கான மனித மந்தையில்!
நானும் ஒருவன் என்று !
கூறிப் பெருமைப்படுவதா இல்லை வெட்கப்படுவதா என்று!
எனக்கு தெரியவில்லை…..உன் வருகை பதில் சொல்லட்டும்!
இப்பொழுது நான் தூங்க விரும்புகிறேன்!!!!
!
-பிரான்சிஸ் சைமன்!
பினாங்கு, மலேசியா

மயானத்து மரங்கள்

புஸ்பா கிறிஸ்ரி
எத்தனை மரங்கள் ?!
அமைதியாகக் காத்து நிற்கின்றன!
இன்னும் எவர் வருவார்கள் ?!
எவர் போவார்கள் என்ற எதிர்பார்ப்புகளுடன்!
எத்தனை உடல்கள்!
அந்த மரங்களின் நிழலில்!
நித்தியமாய் நித்திரை கொள்ள!
வந்து கொண்டிருக்கின்றன ?!
ஆண்டாண்டு காலமாக!
வம்சப் பெயர் கூறிடும்!
எத்தனை பெயர்ப்பலகைகள்!
அந்த மரநிழலில்!
மயானத்து மௌனத்தையும்!
மனிதர்களின் மௌனத்தையும்!
ஒன்றாக்கி வைத்துத் தான்!
அந்த இலைகளின் நர்த்தனமோ ?!
மூன்றே மாதங்களில் சலசலத்துவிட்டு!
மௌனப் பாசை பேசயே!
மனிதர்களின் இறுதிப் பயணப்!
பாசை பேச எண்ணிடும் மரங்களே!
எத்தனை காலம் போனாலும்!
எத்தனை மனிதர்கள் வந்தாலும்!
அத்தனை மனிதர்களும் உன்னிடம்!
எத்தனை சொந்தமாய் போவார்களோ ?!
வண்ணக்கலவையால் வசந்தம் பேசி!
கண்ணைக் கவர்ந்துவிட்டு!
எண்ணியபொழுது மூன்றே மாதங்களில்!
விண்ணைப் பார்த்திடும் வெறும் அலக்குகள்!
சலனமற்ற மனித வாழ்வுகள்!
சங்கமித்த இவ்விடத்தில்!
சரித்திரம் படைத்திடும் சாகா மனிதர்களாய்!
மரங்களே நீங்கள் மாளாத மரங்களே

வனச்சிறுவனின்.. தூறல் மழைக் காலம்

எம்.ரிஷான் ஷெரீப்
வனச்சிறுவனின் அந்தகன்.. தூறல் மழைக் காலம்!
01.!
வனச்சிறுவனின் அந்தகன் !
-------------------------------------!
சூழ்ந்த நீருக்குள் மீனென அறியப்பட்டதை!
செவிட்டூமை அந்தகனுக்குணர்த்திடும் படி!
மிகக்கடின பணியொன்று!
வனச்சிறுவனுக்கிடப்பட்டது !
எந்தக் கொம்பிலும்!
ஏறித் தேனெடுப்பவன்!
கொடிய விலங்கினையும் தனியே வேட்டையாடி!
ராசாவுக்குத் தோல்/ள் கொடுப்பவன்!
வனாந்தரத்தின் அத்தனை மூலைகளுக்கும்!
அமாவாசை நிசியிலும்!
அச்சமின்றிப் போய்வருபவன்!
முதன்முதலில் அயர்ந்து நின்றான்!
கட்டளையை மறுக்க வழியற்றும்!
மேற்கொண்டு ஏதும் செய்யும் நிலையற்றும்!
விதிர்த்து நின்றான் !
செய்வதறியாச் சிறுவன்!
நடுங்குமந்தகனின் விரல்கள் பிடித்து!
வனத்தின் மத்திக்கு வழிகூட்டிப் போனான்!
அல்லிப் பெருங்குளத்தினுள்ளவன்!
கரங்களை நுழையச் செய்திவன் 'தண்ணீர்' என்றான்!
காலங்காலமாய்க் கடந்துவந்த வாழ்வின் சோர்வு தீரவெனவோ!
வற்றாத் தேகத்தின் எல்லாத்தாகங்களுந் தீரவெனவோ!
கரங்களைக் குழிவாக்கி உள்ளங்கையில் நீரேந்தி!
அள்ளியள்ளிக் குடித்தான் அந்தகன்!
சிறுவனின் பார்வைக்கு மட்டுமென!
நீரின் எல்லாச் சுழிகளிலும் நழுவி நீந்தின!
வண்ண வண்ண மீன்கள் !
கற்றுக் கொடுக்கவேண்டிய!
கால எல்லை முடிந்ததெனச் சொல்லி!
அரச பரிவாரங்கள் சேதியனுப்பிய நாளில்!
விடியலின் கீற்றுக்கள்!
மலைகளின் கீழால் புதையுண்டு போக!
விருட்ச இலைகள் நீரைச் சிதறிட!
மழை தூவிற்று !
வீற்றிருந்த அரசனை முன்னிருத்தி!
செவிட்டூமைக் குருடனை!
மீன்கள் பற்றிக் கேள்விகள் கேட்டான் மந்திரி!
தாமரைக்குளத்துத் தண்ணீரில் எண்ணங்கள்!
மிதக்குமவனது மொழிபெயர்ப்பாளனாகி!
எல்லாக் கேள்விகளுக்கும்!
மிகச் சரியாய்ப் பதில் சொன்னான் வனச்சிறுவன் !
!
02.!
தூறல் மழைக் காலம் !
------------------------------!
குளிர் காற்றினூடான வானம்!
இளநீலம் !
மெல்லிய நீர்த்துளிகள்!
இசை சேர்த்து வந்து!
மேனி முழுதும் தெளிக்கின்றன!
நீண்ட காலங்களாக!
சேகரித்து வைத்த அன்பை !
அமானுஷ்ய ஈரத்தோடு!
தளிர் விட்டிருக்கும் அகத்தி!
பெண் நெற்றிப் பொட்டு வடிவ!
பச்சை நீளிலை மரத்தில்!
ஊதாப்பூக் காய்கள் கொத்தியுண்ணும்!
ஏழெட்டுக் கிளிகள்!
செந்நிறச் சொண்டுகளுடன்!
மாதுளம்பூக்கள் !
தனிமையை அணைத்தபடி!
அடுத்த பாடலை!
நான் ஆரம்பிக்கலாம்!
அதன் பிண்ணனியில்!
மழையும்!
நதியின் ஈரலிப்பும்!
குளிரின் வாசனையும்!
இதே பசுமையும் என்றுமிருக்கும் !
நீயும்!
என்னுடன் இருந்திருக்கலாம்

சிறப்பு தரிசணம்

ராசை நேத்திரன்
நீ என்னை தீண்டும் போதும்!
நான் உன்னை தீண்டும் போதும்!
சுடப்படுவது நான் மட்டும் தான்!
கோயிலுக்குள் இன்று!
சிறப்பு தரிசணமாம்!
வெளியில் பேசி கொண்டார்கள்!
அப்புறம் தான் தெரிந்தது!
நீ இன்று கோவிலுக்கு!
வரும் நாளாம்!
பூக்கள் இடம் தேன் படைத்தான்!
ஆண்டவன் இல்லை என்றால்!
அனைத்து தேனீக்களும் உன்னையே!
சுற்றி கொண்டு இருக்கும்!
எதிர் வீட்டு ஜன்னலில்!
நீ இருப்பதால்!
சூரியன் மேற்கு!
பக்கம் சுடுவதில்லையாம்!
நீ உறங்கிய பின் உலகம்!
அமைதியாகி விடுகிறது!
தேவதை தூங்கு அழகை!
நட்சத்திரம் அனைத்து!
கண் சிமிட்டாமல்!
காண தொடங்குகிறது.!
என் சட்டை பையின் சில்லறை!
காசுகள் என்னை திட்டுகின்றன!
நீ சில்லறைக்காய் ஏங்கும்!
பேருந்து பயணத்தில்

எனக்காக ஒரு நிமிடம்

சத்தி சக்திதாசன்
சிற்பத்தின் எழில் போல!
சிந்தைதனை மயக்கி எனைச்!
சீர்குலைத்த பெண்மயிலே !!
சிறகெடுத்துப் பறந்துவா!
தென்னகத்துக் குலமகளாம்!
தேனாற்றின் பெருந்துளியாம்!
என்னிதயத் திருவிளக்கே!
என்மண்ணின் ஒளிவடிவே !!
எனக்காக ஒரு நிமிடம்....!
ஏந்திழையே தருவாயா ?!
முத்தமிழ்க் கலவை போல!
முக்கனியின் சுவை போல!
முப்பாலின் தரம் போல!
முத்தெழிலே நீ இருக்க....!
எக்காலம் தனில்!
என் ஏக்கம் தணியுமினி ?!
எப்பொழுதில் என் விழியை!
எட்டிடும் உறக்கமதே ....!
எனக்காக ஒரு நிமிடம் ...!
என்னோடு பேசு கிளியே !!
உன் பார்வை மயக்கத்தில்!
உள்ளம் கிறங்கிப் போனதடி!
உன் மொழியின் இனிமையிலே!
உலகம் ஏனோ மறந்ததடி!
மெல்லிடையை வளைத்து நீயும்!
மெத்தெனவே அடியெடுத்து!
பொத்தெனவே என் நெஞ்சை!
பொசுக்கி விட்டுப் போகின்றாய்!
எனக்காக ஒரு நிமிடம் ....!
என்னவளே தாராயோ !!
தத்தை போல பேசி நீயும்!
தத்தளிப்பில் என்னை ஆழ்த்தி!
தமிழாகிச் சுரந்து என்னுள் ஏனோ!
தவழுகின்றாய் கவிதை உருவில்!
நித்தம் எனக்கு மரணமடி!
நித்திரையில் உந்தன் கனவு!
பொற்கொடியே போதுமடி!
பூங்கொடியே என்னைப் பாராய்!
எனக்காக ஒரு நிமிடம் ....!
கனவில் வந்து விடு நான்!
கண்மூடி நாளாச்சு!
!
-சக்தி சக்திதாசன்

வாழ்த்துக்கள்.. பொங்கு தமிழே

கலாநிதி தனபாலன்
01.!
வாழ்த்துக்கள் !
------------------!
விலாசத்திற்காக விடுதலையையும்!
தற்பெருமைக்காக தாயகஉணர்வையும்!
தாராளமாய்ப் பேசும்!
ஏராளமான எம்மவர் மத்தியில்!
எத்தனையோ உத்தம உறவுகள்!
ஏகாந்தமாய் எவ்வளவோ செய்திருக்கும்!
அத்தனைக்கும் அன்புடனே!
வாய்நிறையச் சொல்லுகிறேன்!
வாழ்த்துக்கள் பலகோடி!
குன்றின் விளக்கொளியாய்!
குவலயம் தன்னில்!
என்றுமும் வாழ்வு ஏற்றமொடு!
எழில் பெற்றோங்க!
நன்றென நல்லன பெற்றே!
நானிலத்தே நீடூழி வாழ்க!
வாழ்க வாழ்கவென!
வாய்நிறையச் சொல்லுகிறேன்!
வாழ்த்துக்கள் பலகோடி!
02.!
பொங்கு தமிழே!
-------------------!
உணர்வின் ஊற்றாய்!
உரிமையின் உணர்வாய்!
பொங்கு தமிழே!
தமிழரின் திரட்சியாய்!
தாய்நில எழுச்சியாய்!
தரணியெங்கும் பொங்கு தமிழே!
புலம்பெயர் தமிழரின் புத்தெழுச்சியாய்!
வெளிநாடுகளில் வெளியரங்கப்பேரெழுச்சியாய்!
விடியலின் விளைநிலமாய்!
மூச்சை வீச்சாக்கி!
முழுமையாய் பொங்கு தமிழே!
ஈழத்தமிழன் இழப்பதற்கு!
இனி எதுவுமில்லையென்ற!
நிலைகண்டும் நீ!
பொங்காதிருப்பது இழிதன்றோ? !
தரணியில் மீண்டும் !
தமிழரின் தாய்நிலம்!
புத்தொழிவிட்டு பொங்கிடப் !
பொங்கு தமிழே பொங்கு தமிழே !
உணர்வின் ஊற்றாய்!
பொங்கு தமிழே பொங்கு தமிழே !
-கலாநிதி தனபாலன்

என்னிலிருந்து வெளியேறும் ஒருவன்

த. அஜந்தகுமார்
ஊழித்தாண்டவனாய்!
எனக்குள் ஒருவன்!
சுற்றிச் சுழற்றி!
என்னை ஆட்டியபடி....!
மனம் அதிர்ந்து!
கண் கனிந்து!
கை பதறி!
கால் நடுங்கி!
நான் சோர்ந்து வீழ!
அவனின் ஆட்டம்!
உக்கிரம் கொள்கிறது!
!
நாயின் வாலாய்!
என்னை நிமிர்த்த முடியாது!
திணறித் திகைத்தபடி இ;!
உக்கிரம் கொள்கிறேன்!
சில கணங்களில் விழித்தபடி! !
!
அவனின் உக்கிரம்-!
எனது உக்கிரம்-!
உக்கிரத்தின் உற்பவிப்பில்!
அவன் வெளியேறுகிறான்!
நிமிடங்கள் எரிந்து வீழ!
அவன் மீன்டும் வந்து!
யாதொன்றும் வாய்வாளாது!
'தீதெண்று ஏதோ என்னித் தேம்பித்திரும்பினான்.!
--த. அஜந்தகுமார்

சிந்தனைத் துளிகள்

வேதா. இலங்காதிலகம்
கற்பனை, அனுபவம் தேடல் அறிவாய்!
உற்பவச் சிந்தனைகள் முக்கூட்டுப் பரிமாணம்.!
மூளையுள் சிக்கலான ஊற்றாகி!
மூளும் திறமையான சுய வெளிப்பாடு,!
மொழியுரு ஏறி இனம் காட்டும்.!
அனுபவித்துச் சொல்லும் சிந்தனை வரிகள்!
மனுக்குல இருளகற்றும் ஒளித் திரிகள்.!
மானுடம் சிந்திப்பதால் பூரணமடைகிறது.!
சிந்தனை மொழியோடு புணர்ந்தால்!
வந்து எழிலாகும் செயலுருவம்,!
இசை, நாடகம், ஓவிய மொழியில்!
சுந்தரக் கலை அனுபவம் சொர்க்கம்.!
அந்தரித்துக் கெந்தும் நொந்த மனதுக்குச்!
சாந்தியளித்துச் சஞ்சலம் அகற்றும்.!
வந்தனைக்குரிய சிந்தனை நந்தவனமாகும்.!
விந்தையாய் உலகை நடத்திச் செல்லும்.!
மலையைப் பிடித்துக் கடலை அகழ்வதே!
தலையில் எழும் சிந்தனையை அளத்தல்.!
தொலை நோக்குச் சிந்தனை வளர்ச்சிகளாய்!
தொழில் நுட்பம், மருத்துவம், விஞ்ஞானம்!
தாவர-விலங்கியல், வானியல், பௌதிகம்.!
தாவிய அறிவுவெளி ஆய்வு!
தூவிய உன்னதமே மின்சாரம், கணனி,!
வந்த வசதிகள் நவீன வாழ்வுகள்.!
நாக சர்ப்ப விசமாய் ஏறும்!
வேக வன்முறைப் புரட்சியும் சிந்தனையே.!
தாகச் சிந்தனைத் துளிகளின் திரண்ட!
யாகமே கதை, கவிதை, கட்டுரை.!
தேகசுகம், ஆரோக்கியம் மகிழ்வு!
வாகுடன் அமைந்தால் சிந்தனை தெளிவாகும்.!
பகுத்தறிவுடன் பசிய நடையிடுமிது!
பங்கமானால் தலைகீழாய் மாறிவிடும்.!
அருவியோட்ட வாழ்வில் அனவரதமும்!
குருவிச் சிறகடிக்கும் சிந்தனைத் துளிகள்!
கருவியாகி வாழ்வுப் பாதையைச் சீராக்க!
உருவிக் கொள்! உணர்ந்து கொள்!!
நல்லவை எங்கிருந்து வந்தாலும்!
மெல்லென அவைகளைப் பற்றலாம்!
சொல்ல இவர் யாரென உன்னுள்!
வில்லெடுக்கும் திமிரினைக் கொல்! வெல்!.!
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.!
ஓகுஸ், டென்மார்க்.!
2-3-08

முட்கம்பிக்குள் மண்மூடிய கிராமம்

தீபச்செல்வன்
எல்லோருக்கும் பகிரமுடியாத!
ஒற்றைக் கிணற்றையும்!
முட்கம்பி சுற்றி எடுத்திருக்கிறது.!
தென்னோலைகள் தலைகீழாக தூங்க!
கண்களுக்கு எட்டிய இடமெல்லாம்!
வெடித்துச் சிதறிய!
குண்டுகளின் வெற்றுக் கோதுகள் கிடக்கிறது.!
வெயில் வந்து!
கூடாரங்களை மேய்ந்துகொண்டிருக்கிறது.!
முடி பறிக்கப்பட்ட தலைகளை!
சூரியன் தின்று கொண்டிருக்க!
முட்கம்பிகளில் தொங்கிக்கொண்டிருக்கிறது!
காலம் பற்றிய சொற்கள்.!
குண்டுகளற்ற பெட்டியை தட்டி விரித்து செய்யப்பட்ட!
இருக்கையில்!
நீயும் நானும் வைக்கப்பட்டிருக்கிறோம்.!
தரப்பட்ட நேரங்களை!
நாமறியாதபடி தின்றுகொண்டிருக்கிறது கடிகாரம்.!
எப்பொழுதும் வெடிக்க தயாராக!
ஒரு குண்டு!
இருக்கையின் கீழிருப்பதைப்போலிருக்கிறது.!
மீளவும் மீளவும்!
மனம் வெடித்து சிதறி எங்கும் கொட்டிக்கொண்டிருக்கிறது.!
எப்பொழுதும் இலங்கங்களை!
அறிவித்துக் கொண்டிருக்கும் ஒலிபெருக்கியில்!
யாரோ சொல்லத் துடிக்கிற!
சொற்கள்!
வாசலில் வந்து பொறுத்து நிற்கின்றன.!
எப்பொழுதும் ஒலிபெருக்கிகளுக்கு கொடுத்துவிட்ட!
காதுகளுக்கு!
யாரோ அழைப்பது போல கேட்கிறது.!
திசை பிரித்து கொண்டு செல்லப்பட்டவர்களாய்!
இன்னும் தேடிக்கிடைக்கப் பெறாதவர்களுக்காய்!
விசாரித்துக்கொண்டிருக்கிற!
தனித்துவிடப்பட்ட சிறுவன் எல்லோரையும் பார்க்கிறான்.!
மீள்வதற்கு எந்த வழிகளுமற்றுப்போக!
முட்கம்பி எங்கும் இழுத்துக் கட்டப்படுகிறது.!
துவக்குகள் வரிசையில் நின்று பார்த்துக்கொண்டிருக்க!
ஒடுங்கிய முகங்களில்!
பயங்கரத்துள் கைவிடப்பட்ட துயரம் ஒழுகுகிறது.!
யாரும் கண்களுக்கு எட்டடிவிடாத முடிவில்!
தலையை முட்கம்பியில்!
தொங்கப்போடுகிறான் அந்தச் சிறுவன்.!
யாரையும் சந்திக்காத வெறுமையில்!
வெயில் நிரம்பியிருக்கிறது.!
ஒலிபெருக்கி களைத்து அடங்கிவிட!
வெயில் இந்தத் தனிக்கிராமத்தை கடந்து சரிகிறது.!
இரவானதும்!
மனம் எப்பொழுதும் சிக்குப்பட்டுக்கிடக்கும்!
அந்தக் கிராமத்தை மண் மூடிக்கொண்டிருக்கிறது.!
05.07.2009

மராமரங்கள்

ருத்ரா
மறைந்து கொள்ளத்தானே வேண்டும்!
உனக்கு.!
இதையே மராமரங்களாக்கிக்கொள்.!
தெய்வம்!
காதல்!
சத்தியம்!
தர்மம்!
அதர்மம்!
ஜனநாயம்!
ஆத்மீகம்!
நாத்திகம்!
சாதி மதங்கள்.!
எப்படி வேண்டுமானாலும்!
பெயர் சூட்டிக்கொள் மனிதனே!!
இவற்றிலிருந்து !
கள்ளிப்பால் சொட்டுவது போல்!
ரத்தம் கொட்டுகிறது!
தினமும் உன் சொற்களில்.!
மன சாட்சியில் வேர் பிடித்துக் கொண்டாதாய்!
கண்ணாடி பார்த்துக்கொள்கிறாய்.!
உன் பிம்பங்களுக்கு!
நீயே மத்தாப்பு கொளுத்திக்கொள்கிறாய்.!
மனிதனுக்கு மனிதன்!
உறவாடுவதாய் நடத்தும்!
உன் நாடகத்தில்!
அன்பு எனும்!
இதயங்கள் உரசிக்கொள்வதில்!
உனக்கு பொறி தட்டுவதல்லையே!
ஏன்?!
உன் வீட்டுக்குப்பையை!
இரவோடு இரவாக‌!
அடுத்த வீட்டு வாசலில் கொட்டுகிறாய்.!
மறுநாள் காலையில்!
உன் வீட்டுவாசலில்!
சூப்பி விட்டு எறிந்த மாங்கொட்டைகளும்!
மீன் எலும்பு மிச்சங்களும்!
மற்றும் மற்றும்!
உன் கால் இடறுகிறது.!
மாம்பழம் நீ சாப்பிடவில்லை.!
மீன் சாப்பிடவில்லை.!
எப்படி இது?!
உன்னைப்போல்!
அடுத்த வீட்டுக்காரன் !
விட்ட அம்புகள் இவை.!
உன் நிழலில் உனக்கே அச்சம் கவிகிறது.!
அதனால்!
உன் வீட்டுத்திண்ணைக்கு!
இந்த கனமான இரும்புக்கிராதிகள்.!
என் நிழலைக்கூட இன்னோருவன்!
எச்சில் படுத்தல் ஆகுமா?!
என்று !
தனிமை வட்டம் ஒன்றை!
உன் கழுத்தை இறுக்கும் !
கயிற்றுச்சுருக்காய் வைத்துக்கொண்டிருக்கிறாய்.!
பார்!
இந்த மரங்களை.!
பட்டாம்பூச்சிகள் கூட !
இங்கே வந்து!
படுக்கை விரிப்பதுண்டு.!
சிறு குருவிகளும்!
தங்கள் சுகமான குகைகளை!
குடைந்து கொள்வதுண்டு.!
அவைகளின்!
அஜந்தா எல்லோரா ஓவியங்கள் எல்லாம்!
அவற்றின் பூக்குஞ்சுகளே.!
பொக்கை வாய் பிளந்து தீனி கேட்கும்!
அவற்றின் பசியாற்ற‌!
இந்த நீலவானம் முழுதும்!
உழுது விட்டு !
இப்போது தான் வந்திருக்கின்றன.!
நல்ல உள்ளமும் தீய உள்ளமும்!
அம்பு போட்டு !
விளயாடும் இடங்களே!
மனங்கள் எனும் மராமரங்கள்.!
மரத்தில் மறைந்த மரமும்!
மரத்தை மறைத்த மரமும்!
இந்த கள்ளிகளுக்கும் தெரியும்.!
அவற்றின் !
முட்களுக்கும் மலர்களுக்கும் கூட தெரியும்.!
இயற்கையின் உள்ளுயிர்!
கூடு விட்டு கூடு பாயும் !
வித்தையில் தான்!
எல்லா விஞ்ஞான‌ங்களும் இங்கே!
கழைக்கூத்தாடித்தனம் செய்கிறது.!
இங்கே!
வரிசையாய் நின்று கொண்டிருப்பது!
திருவள்ளுவரா? திரு மூலரா?!
ஐன்ஸ்டீனா? நீல்ஸ் போரா?!
ஹெய்ஸன்பர்க்கா?பெட்ரண்ட் ரஸ்ஸலா?!
நம் ராமானுஜனா?இல்லை ராமானுஜரா?