தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

மோகினி

பாண்டித்துரை
கவிஆக்கம்: பாண்டித்துரை!
!
மோகிக்கும் உருவத்திடம்!
யாசகனாய் தவமிருந்து!
செய்வதறியாது திகைக்கும் போது!
சரி போ என!
சில்லறையை சிதறவிட்டு!
மேல் எழும்பும் அலைகளால்!
உள் இழுக்கப்பட்டு!
எழ எத்தனிக்கும் போதெல்லாம்!
எழில் சார்ந்த பெருமூச்சின்!
திராவகப் பார்வையில்!
ஏரிக்கப்பட்டு!
எழுகின்ற மென்சோகம்!
சாம்பலாய் கலக்கிறது!
காற்றில்.!!
கவிஆக்கம்: பாண்டித்துரை

நட்புக்காலம்

அறிவுமதி
அறிவுமதி!
என் துணைவியும்!
உன் கணவரும்!
கேட்கும் படி!
நம்!
பழைய மடல்களையெல்லாம்!
படித்துப் பார்க்க!
ஒரு!
மழை தொடங்கும்!
நாள் வேண்டும்.!
“!
தேர்வு முடிந்த!
கடைசி நாளில்!
நினைவேட்டில்!
கையொப்பம் வாங்குகிற!
எவருக்கும்!
தெரிவதில்லை!
அது!
ஒரு நட்பு முறிவிற்கான!
சம்மத உடன்படிக்கை என்று!
“!
வெளியீடு:!
சாரல்,!
189.அபிபுல்லா சாலை,!
தியாகராயர் நகர்!
சென்னை-17

அடியே

முத்துமாறன்
என் ஆழ்கடலே!
உன் முகத்தின் சுழிப்பை !
என் விழிப்பை தாங்காது.....!
“பிழையில்லா !
இலக்கணம் !
நீ!
உன்னை !
உருவாக்கும் !
இலக்கியம் நான்”!
இரவு முழுக்க!
உன் ஞாபகக் கொசுக்கள்!
என்னை உறங்க விடாமல்!
உருக்குலைத்துப் போடுகிறது!
என் காதல் !
இரட்டை கிளவி..........!
ஒன்றிலிருந்து ஒன்றை!
பிரித்தால் பொருள் தராதாமே!!
உன்னிலிருந்து !
என்னைப் பிரித்தாலும் !
அப்படித்தான் !
நான் பொருளற்றுப் போவேன்....!
உரக்கச் சொல்!
என் விழியை!
உறங்கச்சொல்!
உன் !
நினைவுகளோடே!
நித்திரை கொள்கிறேன்

அதிகாலை 4 மணிக்கு நாய் குரைக்கிறது

சம்பு
அதிகாலை 4 மணிக்கு குரைக்கும்!
நாய் குரைக்கிறது!
அடுத்த நொடி வரப்போகும் திருடனுக்காக!
இல்லாவிடிலும்!
குறைந்தபட்சம் குரைக்க வேண்டியிருக்கிறது!
ஒரு நாய் என்பதற்காக!
மேலும் அது அறிவுறுத்தப்பட்டிருக்கிறது!
குரைத்துக்கொண்டே சாப்பிடவும்!
குரைத்துக்கொண்டே ஓய்வு கொள்ளவும் கூட!
குரைப்பதால் வரும் தொண்டை கமறலுக்கு!
ஒரு விக்ஸ் மிட்டாயை!
குரைத்துக்கொண்டே நாசூக்காய்!
சப்புவதையெல்லாம்!
அறியாத அந்நாயிடம்!
எஜமானன்!
இனிமேல் குரைத்துக்கொண்டே குரைக்க வேண்டும்!
என்ற ஓர் நாளில்!
அது!
'ஙே' என்று விழிக்கிறது குரைத்துக்கொண்டே!
முக்காமல் முனகாமல்!
சாகாமல் சீராக!
குரைத்தபடியேயிருக்க வேண்டுமென்ற!
கட்டளைக்குப் பிறகே!
அது கற்றுக்கொள்கிறது!
குரைத்துக்கொண்டே குரைப்பதெப்படியென!
அது முதல்!
அந்நாய்!
அதிகாலை 4 மணிக்கு குரைக்கிறது!
அதிகாலை 4 மணிவரை!
தினமும்

முகமற்றவனின் பேச்சொலி

சு.மு.அகமது
பாவனைகளும் தோரணைகளும்!
எங்கோ கண்டதின் சாயலில்!
வழிகாட்டியோ பின் தொடர்ந்தோ அருகுணர்த்தும்!
நம் நிழல் போல்!
சுவர்களை மீறி வரும் ஒலி!
அறையின் வெக்கையாய்!
அனல் பரத்தும் நெஞ்சக்கூட்டினுள்!
உஷ்ணப்பந்தை விழுங்குதல் போல்!
ஒளிரும் நினைவுகளில் உள்ளக்கிடக்கை!
விழித்திருக்கும் தன் கண்களை உருட்டியபடி!
கனல் நீரில் தத்தளிக்கும்!
துடுப்பற்ற பொத்தல் படகாய்!
என் அன்னியோன்யத்தில் உலவும்!
எனக்கே அல்லாத உறவின் முகம்!
எப்போதுமே கதைத்திருக்கும்!
தான் கரைந்ததும் கனத்ததுமாய்!
கண்கள் காணாத முகமற்றவனின் பேச்சொலி!
செவிகளில் பதியும் போது!
போதுமென்ற மனமே பொன் செய் மனமாய்!
அகழ் குழியில்!
தனியனாய் நானும் என் எண்ணங்களும்

இப்படித்தான்…

பாண்டித்துரை
ஊடுருவும் பார்வை!
எனை பார்ப்பதாக!
சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டு!
ஊர்ஜிதபடுத்துகிறேன்!
புன்னகைகள் இடம் மாறியது!
ஜாடைப் பேச்சின்!
மீண்டுவந்த நாட்களில்!
சரிசமமாய் எங்களின் பயணம்!
எங்கோ ஆரம்பித்து!
எங்கெங்கோ முடியும்!
இரவல்பேசி வழி!
(நல்) இரவுகளை விழுங்கிட!
விழித்துக்கொள்ளும் நாட்களில்!
விகல்பப் பார்வையாய்!
புறம் தள்ளி செல்கிறது!
கேட்டுக்கொண்டிருக்கும்!
புலம்பல் ஒலியை…..!
-- பாண்டித்துரை

பிரிவு.. பூ

ராம்ப்ரசாத், சென்னை
பிரிவு.. பூ!
01.!
பிரிவு!
---------!
திரும்பும் இடமெல்லாம்!
நீயிருக்கிறாய் என்ற‌!
நினைப்பிலென் பொழுதுகள்!
விடிகிறது, இனிமையாய்...!
உன்னை ஒரு நாள்!
பார்க்கவில்லை என்றாலும்!
இந்த ஜென்மமே முடிந்த‌!
ஏக்கம் வருகிறது, தனிமையாய்...!
உன் இதழ்களிலிருந்து!
காற்றுடன் கலந்துவிட்ட!
வார்த்தைகள் தாய்ப்பசுவை!
இழந்த கன்று போல்!
ஒல‌மிடும் என் செவிக‌ளில்...!
க‌ண்க‌ள் விடும் க‌ண்ணீரில்!
ம‌ன‌து க‌ன‌த்துப்போகும்!
உன் நினைவுக‌ளில்...!
பூவிலிருந்து ம‌ண‌த்தை!
பிரிப்ப‌து சாத்திய‌மெனில்!
என்னிட‌மிருந்து உன் நினைவுக‌ளைப்!
பிரிப்ப‌தும் சாத்திய‌மே....!
02.!
பூ!
-----!
தன்னை மட்டுமே!
சுற்றிச்சுற்றி வரும்!
நிலவுக் காதலனின்!
வரவை எதிர் நோக்கி!
நாணத்தில் முகம் சிவக்கும்!
சூரியன் மறைவாக!
மலைகளுக்குப் பின்னால்!
மறைந்து!
காதலனுடனான!
ஊடல் துவங்கும்!
தென்றல் வீசும்!
அந்திமாலை நேரத்து!
புல்வெளியில்,!
பனித்துளிகளையும்!
பூக்களையும் மட்டுமே!
தாங்கிப் பழக்கப்பட்ட‌!
பச்சைப்புல் இலைகளின்று!
வேரில்லா இலையில்லா!
தண்டுமில்லா ஒர்!
அற்புதப் பூ!
அவளைத் தாங்கிப்!
பெருமிதம் கொண்டன,!
மண்ணில் இத்துணை!
அழகான‌!
சரித்திரம் கண்டிராத‌!
அற்புதப் பூவைத்!
தாங்கியவர்கள் நாங்கள்!
என்றே

(கடிகார)முட்கள்

நீதீ
தொட்டுவிடும் தூரம்தான்!
ஆனலும்!
தொடர் ஓட்டமாய்!
கவனிக்க வேண்டும்!
கால்கள் இல்லை!
காற்று கூட தொல்லை!
காதலர்களாய்!
அவனும் ஓட!
அவளும் ஓட!
நடுவில் ஒருவன்!
நடுவராக இருக்ககூடுமோ!
காததூரம் வந்ததும்!
கடக் கடக் சப்தம் வேறூ!
சிறைபட்ட - என்!
சிந்தனையை மீட்க!
சிறைக்குள் இருந்து!
சிரிக்கும் காதலர்காளாய்.!
!
கவிஆக்கம்:!
நீ தீ

எங்கள் எல்லைக்குள் வரும்

வசீகரன்
எதிரிகளுக்கு!
---------------------------------------------------!
ஏணையில் உறங்கும்!
பச்சிளம் குழந்தையைக்கூட!
ஏவுகணை வீசி!
கொல்லும் எதிரிகளே!
உங்கள் உலக சாதனையை!
அம்மணமாய் நின்று கொண்டு!
உலகம் வாழ்த்தட்டும்!
எங்கள் வலிகள்!
உங்களுக்கும் புரியவில்லை!
இன்னும் இந்த!
உலகத்திற்கும் புரியவில்லை!
மனிதம் தொலைத்து!
வெறிபிடித்த மிருகங்களாய்!
கொடிய முகம்!
கிழித்து வாருங்கள்!
எங்கள் எல்லைகள் எங்கும்!
உங்களுக்காய்!
மரணக்குழிகள் காத்திருக்கிறது!
எங்கள் குருதி உறைந்த!
செம்மண் பூமி எழுந்து!
உங்களைத் திண்டு விழங்கும்!
வெறும் எலும்புக் கூடுகளாய்!
உக்கிப்போன எச்சங்களை பொறுக்கி!
உங்கள் வீட்டின் முற்றத்திலே!
கொண்டுபோய் கொட்டுவோம்!
கனரக வண்டிகள்!
சுவர்களை உடைக்க!
பறந்திடும் விமானங்கள்!
பச்சைக்காடுகளை அழிக்க!
குண்டு மழையிலே!
எங்கள் மண் குளிக்கிறது!
எங்கள் எல்லைக்குள்!
எந்த இடத்திலே!
நீஙகள் முன்னேறி வந்தாலும்!
அந்த இடமே!
உங்களின் சுடுகாடாய் மாறும்!
இத்தனை ஆண்டுகளாய்!
உங்களால் நாங்கள்!
இழந்த உயிர்களுக்கும்!
உறவுகளுக்கும்!
எவரிடமும் கணக்குகளில்லை!
அடக்கி ஆழ்வதற்காய்!
ஆயுதம் தூக்கியவர்கள் நீங்கள்!
எங்களை காப்பதற்காய்!
ஆயுதம் தூக்கியவர்கள் நாங்கள்!
நாங்களும் நீங்களும்!
ஒரே காற்றை சுவாசித்தாலும்!
ஓரே நீரைக் குடித்தாலும்!
உங்கள் பூமிக்கும்!
எங்கள் பூமிக்கும்!
எத்தனை வேற்றுமைகள் பாருங்கள்?!
புத்தரின் பெயரைச்!
சொல்லிச் சொல்லியே!
எங்கள் புன்னகைகள்!
பறிக்கப்படுகிறது!
புன்னகைகள் பறிபோனாலும்!
எதிரிகளாக வந்து நீங்கள்!
மரணக்குழியில் விழுகிற போது!
தமிழராகவே நிமிர்கிறோம்!
விடுதலை நெருப்பில்!
வெந்து கொண்டிருந்தாலும்!
எங்கள் வேர்கள் கருக!
நாங்கள் விடமாட்டோம்!!
கண்ணீரைத் துடைப்பதற்கு!
நாங்கள் வைத்திருப்பது!
கைக்குட்டைகள் அல்ல!
கைத்துப்பாக்கிகள்!!
!
-வசீகரன்!
நோர்வே!
14.12.08

கோணல் மனசு

இ.இசாக்
சொமாலிய சோகம்!
கொசோவா கொடுமை!
உகாண்டா பசி!
உலகின்!
பசித்த தேசங்களின் நிலைகளைக்!
கேட்டு!
படித்து!
ஆராய்ந்து...ஆராய்ந்து!
எல்லோரிடமும்!
வாய் கிழிய பேசத்தான் செய்கிறேன்!
வறுமை தீர்க்கும் வழி பற்றி!!
கொஞ்சமும்!
வெட்கப்பட்டதேயில்லை நான்!
பயணப்பாதைகளில்!
வற்றிய வயிறோடு கையேந்தும்!
உயிர்களிடம்!
உதடுப்பிதுக்கி நடக்க