தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பழஞ்சோறு.. மனித மூளை

கல்முனையான்
01.!
பழஞ்சோறு!
---------------!
நேத்து பொரிச்ச சூடை மீனை சோத்துக்குள் புதைத்து!
ஏக்கத்துடன் அண்ணார்ந்தேன் எங்க வீட்டுக் கூரையினை!
வாலறுந்த பல்லி ஒன்று சண்டை போடுகிறது!
தன் உணவினைத் தட்டிப்பறிக்க மற்றைய பல்லியிடம்...!
பல்லியிலுமா!!! இந்தப் பாகப்பிரிவினை!
பக்கத்து வீட்டு கோழியிறைச்சியின் தாழிப்பு வாசம்!
என்தன் நாக்கின் நடுவிலே நயாகரா நீர்வீழ்ச்சியின்!
போட்டோ கொப்பியை ஒட்டியது...!
வாசத்தை மட்டும் சுவாசிக்கும் நாங்கள்!
வேசத்தையிட்டு வாழ்கிறோம் மனிதர்கள் என்று!
கொஞ்சம் புரட்டிப்பார்த்தேன் என்னை ஆவலுடன்!
வெறும் ஏமாற்றத்தின் விளைநிலமாய் நான்!
சுடு சோத்தின் சூட்டினிலே குளிர்காயும் ஏழைகள்!
இடியப்பம் சம்பலும் அவர்களுக்கு சொர்க்கத்து உண்டிகள்!
பழஞ்சோறாய் நாங்கள் வீதியிலே கொட்டிவிடப்பட!
பணக்கார நாய்களெல்லாம் படையெடுத்து வருகின்றன.!
!
02.!
மனித மூளை !
--------------------!
மரணித்துப்போன மனிதாபிமானத்தின்!
மூத்த பிள்ளைதான் மூளை!
இப்போது யாருமற்ற அநாதையாக!
காடடுமிராண்டி கலாச்சாரத்திற்கு !
முடிசூடா மன்னன்.!
வெற்றிலையும் பாக்கும் சேர்ந்தால்தான்!
சிவப்பு நிறம்...!
மூளை சற்று தீவிரமாய் சிந்தித்தாலோ!
உலகெங்கும் சிவப்பு நிறம்...!
இது உறங்குவது நித்திரையில்தானாம்!
வெறும் காய்ச்சி வடித்த பொய்!
நித்திரையில் தானே பல பெண்களின் !
கற்புகளும் உயிர்களும் காவுகொள்ளப்படுகின்றது.!
சற்று சரியாக இது நடந்ததனால்!
ஓரிரு இடங்களில்!
பசுமைப் புரட்சி என்ற நாமத்தில்!
கொஞ்சம் மனிதாபிமானக் குஞ்சுகளின் மறுபிறப்பு

துப்புர‌வுத் தொழிலாளி.. காற்றடைத்த

ராம்ப்ரசாத், சென்னை
தலையணை!
!
01.!
துப்புர‌வுத் தொழிலாளி!
-----------------------------!
வான‌ம் பார்த்து!
வாய் பிள‌ந்து கிட‌ந்த‌து!
நடுத்தெருவில் அந்தச் சாக்க‌டைக்குழி...!
ஊருக்கெல்லாம் வேண்டாத‌வை!
ஒன்றாய்க்கூடி த‌ம‌க்குள்!
க‌ரி நாள் கொண்டாடி!
முடித்திருந்த‌ன‌ கொட்டிக் கொண்டிருந்த!
ம‌ழையில்...!
எச்சிலோடு புசிக்கையில்!
உதட்டோரம் க‌ரை ஒதுங்கும்!
ப‌ருக்கை உண‌வாய்!
ஒதுங்கியிருந்தன சாக்க‌டை!
வாயோர‌ம் சில கழிவுகள்...!
கடைவாய்ப் பற்களில்!
சிக்கி அடைத்துக் கொண்டவைகளை!
சிரத்தையாய் பிடுங்கிச்!
சுத்தம் செய்துகொண்டிருந்தான்!
அந்த துப்புரவுத் தொழிலாளி....!
!
02.!
காற்றடைத்த தலையணை!
--------------------------------!
காற்றடைத்த தலையணையின்!
குறுகிய வாயை!
அடைத்திருந்த பொத்தானை!
மெல்லத் திருகினேன்...!
மடை திறந்த‌!
வெள்ளமாகிக்கொண்டிருந்தது!
காற்று...!
நெருங்கிக் கொண்டிருந்த!
உறக்கம் என் விரல் பிடித்து!
நெகிழ்த்திய பொத்தானை!
மீண்டும் நெருக்க!
அடைபட்ட காற்று!
என் உறக்கத்தின் ஆயுளை!
கணக்கிடத் தொடங்கியிருந்தது

எண்ணிக்கை

மாலியன்
இழப்புகள் யாவும் !
எண்ணிக்கையாகிப் போனதால் -!
செய்திகளுக்குள் எத்தனை இன்று விழுந்தது !
என்பது மட்டுமே தெரிகின்றன.!
முந்தைய பொழுதொன்றில் விழுந்த !
பத்து பெயர் (தெரியாதவர்களுக்காக) களுக்கு !
பதிலாக பதினைந்து எதிரி விழுந்திருந்தால் !
நாங்கள் திருப்தியுற்றவர்களாக -!
காலச் சுழற்சியில் !
இன்று இருபாதாயிரம் விழுந்தும், !
ஏனோ எண்ணிக்கை சற்றே கூடியிருந்தால் !
தேசம் கிடைத்திருக்கும் என்பதாய்....!
ஆயினும் முன்பு ஒரு பொழுதில் !
வயோதிபத்தில் இறந்த என் பாட்டியின் மரணம் !
நெஞ்சை உறுத்தி செல்ல அது மட்டும் !
எண்ணிக்கை யாக்க முடியவில்லை....!
ஜீன் 6 - 2009

சீருடை நாட்கள்

முத்தாசென் கண்ணா
அருணாக்கயிறில் குடித்தனம் நடத்திய !
அந்த அழுக்கு அரைக்கால் டிரவுசரின் !
வாசனையை உணர முடிகிறது...!
என் பழைய பள்ளிக் கட்டடத்தை!
கடந்து போக நேர்கையில்!
பலமுறை என் தத்தா செத்துப்போனதாய்!
அறிவித்த விடுமுறை விண்ணப்பங்களையும்!
ஆரஞ்சு மிட்டைக்கான ஆர்வக் கோளாறில்!
தேசியக் கொடியைத் தலைகீழாக!
குண்டூசியில் ஏற்றிய !
ஆகஸ்டு பதினைந்துகளையும்!
எல்லப்பனின் தகர டப்பாவை !
மறைத்து வைத்ததனால் ஏற்ப்பட்ட மனஸ்தாபத்தில் !
இன்று வரை பேசாமலிருப்பதும்!
கூட்டாஞ்ச்சோத்துக்காக சுள்ளிகள் பொறுக்கிய!
சொப்பு விளையாட்டுகளையும்!
அசைபோடத் தோன்றுகிறது...!
மௌஸ் ஹேங்க் ஆயிடிச்சி டாடி!
என்கிற என் மகனின் குரலால்...!
-முத்தாசென் கண்ணா

இசைக்கலவை

அன்பாதவன்
சிக்கித்தவித்ததொரு வாத்தியம் !
இசையறியாப் பாமரனின் அதிகாரப்பாதுகாப்பில் !
விதியின் விளையாட்டாய் !
உள் லயம் புரியா சிறைமை வெம்பி !
வறண்டு காயத்தொடங்கின இசையின் ஊற்றுக்கண்கள் !
தீண்டியதொரு ரசி கரம் !
நவீனத் திசையொன்றிலிருந்து !
மாந்திரீக வசீகரத்துடன் !
விரல்தொட அதிரும் மிரு தங்கம் !
மீட்டலில் சிலிர்க்கும் வீணையாய் !
மூச்சுக்கார்றில் வேய்ங்குழலின் வெப்பம் !
மத்தள முரசங்களாய் உணர்ந்த தருணங்களுமுண்டு !
நாவுக்குள் நா உரச மோர்சிங் !
உதடு பொருத்தி உருக !
உதட்டார்கனின் ரீங்காரம் !
கொங்களில் சங்கூதும் குறும்பனின் !
வித்தக ஸ்பரிச லாவகம் !
ஒற்றா உடலில் எழும்பிச் சுழல்கிறது !
இசைக்கலவை. !
தீ மூட்டி சென்றுவிட தினந்தோறும் எரிய !
சிதையிலிருந்து பறக்கின்றன !
இசைத்துணுக்குகள் இச்சை சுமந்து

வாழ்க்கை

ஜீவன்
1. !
வாழ்க்கை !
தேவையாயிருக்கிறது !
அவசரமேதுமில்லாதொரு !
மாலைப்பொழுது !
பொன் மஞ்சள் நிறத்தொரு வானம் !
மெத்தென கிடக்க !
ஒரு பச்சைப் புல்வெளி !
மெதுவாய் தாலாட்டிப்போக !
கொஞ்சக் காற்று !
!
வேலையில் !
தொலைந்து போகிறது !
பகல் !
வேலைக்காய் !
தொலைகிறது !
இரவு !
சூரியனைப்பார்த்து !
நெடுநாளாகிறது !
எனக்கு. !
இயந்திரம் சப்பியது !
போக !
எப்போதாகிலும் !
தேவையாயிருக்கிறது !
அவசரமேதுமில்லாதொரு !
மாலைப்பொழுது

முளைகொண்ட ஓவியமும் நாலு வார்த்தைகளும்

ரவி (சுவிஸ்)
காற்றுக்கூட உறங்க!
நினைக்கும் இரவின் அமைதி!
நிச்சயமற்றுப்போன ஓர்!
இரவில் இது நடந்திருக்கலாம்!
அல்லது,!
சூரியனின் ஒவ்வொரு கதிர்களையும்!
முறித்துப்போடும் வெறியோடு!
செல்களும் குண்டுகளும்!
படைநடத்திச் சென்ற ஒரு!
பகல்பொழுதிலும் இது நடந்திருக்கலாம்!
சரியமறுத்து!
முறிந்துபோனது இந்தப் பனைமரம்!
யாழ்மன ஆழத்தின்!
வீணிகள் படியுமிந்தக்!
கிளையறியாப் பனைமரத்துக்காய் அழ!
மறுக்கிறது என் மனம்!
கிளைகொண்டு விரிந்துநில்!
என்பதுபோல்!
முளைவிடுகிறது ஆலமரவிதையொன்று இந்தப்!
பனைத்துண்டின் உச்சியில்.!
கூரலகால் விருட்சத்தின் விதைகொண்டு!
வரைந்துசென்ற இவ் ஓவியத்தின்!
சொந்தக்காரியே - என்!
அருமைக் குருவியே!
கேள்!!
’’பனைவளர்ப்போம் வா’’ என்றால்!
பல்லிழித்த மனிதரும் இந்தப்!
பனையின் முறிவுக்காய்!
அழுவதெனில், அவர்!
உச்சந்தலையிலும் விருட்சத்தை!
எச்சிலிடு என் குருவியே.!
இன்னும் கேள்!!
பனைமரத்தில் நெஞ்சுதேய்த்து, அதன்!
உச்சியினைத் தொடுபவனை!
சாதிக் கோட்டால் அரிந்து!
வீழ்த்தும் மனிதரும் பனைமரத்தை!
கற்பகதரு என்கின்றனர்!
அதற்காய் அழுகின்றனர்.!
அற்புத மரம்தான் பனைமரம்!
யார் மறுத்தார்.!
ஊர்கள் சிதறி!
அகதிப்படையாய் கலந்தனர் மனிதர்கள்.!
கலத்தலிலென்ன சிதறி ஓடுதலிலும், ஒரு!
வேளாளக் கோவணத்தின்!
கொடிக்கம்பமாய் அது!
நிற்கும்வரை - அதன்!
முறிவுக்காய் அழ மறுக்கிறது!
என் மனசு

பறவையின் சிறகசைப்பில்

முனைவென்றி நா சுரேஷ்குமார்
இளைப்பாற இடம்தேடி!
ஓர் மரக்கிளையில் !
வந்தமர்கிறது !
அந்தப் பறவை.!
கூரிய அலகால் !
கோதிவிடுகிறது !
தன் சிறகை...!
அப்பறவை அமர்ந்திருந்த!
அந்த மரக்கிளை !
எப்போது வேண்டுமானாலும் !
முறிந்து விழலாம்.!
அப்பறவையை படிக்க !
வேடனுங்கூட !
குறிவைத்து வலை வீசலாம் !
விஷம் தடவிய அம்பை !
எய்யத் தயாராயிருக்கலாம்!
அம்மரத்தில் !
ஏற்கனவே குடியிருக்கும் !
இன்னபிற பறவைகளால் !
துரத்தியடிக்கவும் படலாம்!
அந்தப்பறவை...!
நச்சுப் பாம்புகளால் !
ஆபத்தும் நேரலாம் !
அப்பறவைக்கு...!
எவ்விதச் சலனமுமின்றி !
தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு !
சுதந்திரக் காற்றை சுவாசித்தவாறே !
சிறகசைக்கத் துவங்குகிறது !
அந்தப் பறவை

நதிகள் இணைப்பு

ராம்ப்ரசாத், சென்னை
வெள்ளைப் புடவை,!
திருநீர் அமர்ந்த!
நடு நெற்றி,!
குலுங்காத வளை,!
கலையாத மெளனம்.!
நீரின்றி இப்படியிருக்கும்!
எந்த நிலமும்!
காய்ந்த பயிறும்!
ஒட்டிய வயிறுமாய்,!
வரண்ட நதியும்!
திரண்ட புழுதியுமாய்,!
வெடித்த பாறைகளும்!
தடித்த வரட்சியுமாய்...!
பாரம்பரியம் பேணி!
கலாசாரம் வளர்த்து!
அமைத்தோம் நம்மைச்சுற்றி!
ஓர் அரண்...!
இடைவேளியின்றி நடப்பட்ட‌!
மரக்கன்றுக‌ள் வ‌ள‌ர்ச்சி போல்,!
வரட்சியின் மறுபக்கம்!
வெள்ளமாய் ஏனிந்த முரண்...!
பூமித்தாயின் குருதி!
ஓடும் நாளங்கள்!
அல்லவோ நதிகள்...!
இயற்கை அன்னையின்!
உயிர் சுமக்கும்!
நரம்புகளல்லவோ நீர்நிலைகள்...!
அவள் பசி தீர்க்கும் ஆகாரம்!
இந்த நீர் ஆதாரம்....!
ஐந்தறிவு காக்கைகள் கூட!
இருக்கும் உணவை!
பகிர்ந்துண்ணும் போது!
இயற்கை அன்னை!
மடிசுரக்கும் அமிர்த‌நீரை!
அவ‌ள் பிள்ளைக‌ள் நாமே!
ப‌கிர்ந்து கொள்ள‌!
ம‌றுப்ப‌து சிறுபிள்ளைத்த‌ன‌ம்...!
கட்டுக்குள் அட‌ங்காத‌!
நீரை எல்லைக‌ளிட்டு!
அட‌க்க‌ முய‌ல்வ‌து!
அறிவீன‌ம்...!
எவ்வித‌ நிற‌முமில்லாத‌!
நீருக்கு அர‌சியல்!
சாயம் பூசுவ‌து ஈன‌ம்...!
நாட்டிற்கு பொதுவான‌!
நீரை ப‌கிர‌ ம‌றுப்பதும்!
ஒரு வகையில் ஊன‌ம்...!
ஊர் கூடுவோம்!
ஒன்றுபடுவோம்!
பெருநிதி திர‌ட்டுவோம்!
ந‌திக‌ளை இணைப்போம்!
நாடெங்கிலும்!
ஏர் பூட்டுவோம்!
உழுது உர‌மிடுவோம்!
ப‌யிர் வ‌ள‌ர்ப்போம்...!
உண்டது போக எஞ்சியதை!
ஏற்றும‌தி செய்வோம்...!
பதிலுக்கு,!
அடிமைப்பட்டிருந்த‌‌ கால‌த்தில்!
பக‌ல் கொள்ளைபோன‌!
ந‌ம் சொத்துக்க‌ளை!
இற‌க்கும‌தி செய்வோம்...!
வளர்ந்த நாடுகளின்!
பட்டியலில் நாமும்!
முதலிடம் பிடிப்போம்

உயிரில் பூத்ததுங்க‌

த.எலிசபெத், இலங்கை
அடியே கருவாச்சி!
நாந்தூங்கி நாளாச்சி!
உன்னநா(ன்)சந்திச்சி!
உள்மனசும் பித்தாச்சி...!
!
வேல செய்யயில‌!
வேள்விழி ஞாபகந்தான்!
நாள கடத்துறேன்டி!
நானுமுன கைப்பிடிக்க...!
!
பக்கத்தில நீயும்வந்தா!
பக்குனுதான் தீப்பிடிக்க‌!
பார்வ ஒன்னவீசுறியே!
பாவலனா நானுமானேன்...!
!
கூலிவேல செஞ்சிடுவேன்!
கூடைகூட தூக்கிடுவேன்!
கூடவே நீயுமிருந்தா!
குட்டி சொர்க்கம் தந்திடுவேன்...!
!
கால நேரங்கூடிடுமா!
காவல் தெய்வமேவிடுமா!
சாதி ரெண்டுமட்டுமின்னு!
சட்டம் இங்கவந்திடுமா...!
!
அப்பனாத்தா சண்டையில‌!
அஞ்சி நிக்குது பிஞ்சுமனம்!
தப்புதான்னு புரிஞ்சாத்தா!
நாம ஒன்னா சேர்ந்திடலாம்...!
!
எட்டிநின்னு சொல்லிடுவோம்!
தட்டி கேட்டு ஜெயிச்சிடுவோம்!
க‌ட்டிவச்சு அடிக்கவந்தா!
முட்டிதள்ளி முளைச்சிடுவோம்...!
!
நிறத்தப்பார்த்து வந்ததில்ல‌!
நிஜமாய் உயிரில் பூத்ததுங்க‌!
மறக்க சொல்லி எந்திரிச்சா!
மலையக்கூட சாச்சிடுவோங்க