தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

மாவீரர் நினைவு சுமந்து

நாவேந்தன்
கார்த்திகைத் திங்கள் - எம் !
கல்லறைத் தெய்வங்களுக்காய் !
நெய்விளக்கேற்றி உம் !
நினைவு சுமந்து நிற்கின்றோம். !
விடுதலைக் கனல் சுமந்து !
வீணர் பகை எரித்து !
வீசும் புயலாய்க களமாடி !
வீழ்ந்து விட்ட வீர மறவர்களே ! !
எட்டாத உயரத்தில் நீங்கள் இருந்தாலும் !
எழுதுகோல் ஒன்றினால் - உம்மை !
எழுத்தில் வடிக்க முடியாது. !
புலம்பெயர்ந்து நாம் வாழ்ந்தாலும் !
பலம் நீங்கள் என்பதை நாமறிவோம் !
நெஞ்சில் உங்கள் நினைவுகளை !
நாம் சுமந்து இத் திருநாளில் - உம் !
கல்லறை முன் நின்று !
கார்த்திகைத் தீபம் ஒன்றினை ஏற்றுகின்றோம் !
எம் தேசத்து நாயகர்களே ! !
விடியலின் முகவரியில் உங்கள் திருநாமம் !
வருங்காலம் வணங்கும் !
உங்கள் பெயர் சொல்லி ! !
எங்களின் விடியலுக்காய் !
உங்கள் கண்களை மூடியவர்களே ! !
உங்களின் கனவு மலர்ந்து வரும் நாளில் !
எங்களின் தலை குனிந்து வணங்குகின்றோம் ! !
!
கனடாவிலிருந்து நாவேந்தன்

ஏன்?

வேதா. இலங்காதிலகம்
சத்தமில்லா யுத்தம் உன்னுடன் அன்பே!!
ரத்தமில்லா யுத்தம் உன்னுடன் அன்பே!!
வித்தனே!...அழகான..... எத்தனே!!
சித்தமின்றி யுத்தம் உன்னுடன் அன்பே!!
தத்திதத்தோம் ஸ்வரஜதியோடு!
சித்தித்து மகிழ்ந்த சிங்காரப் பூங்கா!
எத்திக்கும் எழிலாய் வியந்த வாழ்வு!
அத்திப்பூவாய் இதழ் வாடிட!
தித்திப்புச் சுவை மாறித் திணறுவதேன்!!
பத்திக்கும் பல கண்கள் பட்டிட்டதோ!!
அங்கங்கள் முடங்கிப் போர்வையுள் அடங்கும் உடலாக!
அன்றாட நிகழ்வுகள் முடங்கி மன்றாடும் போர்க்களமேன்!!
இடைவெளிகள் விரிந்து குடை விரித்து இருண்டு!
படை கொண்டு கொல்லும் போர்க்களமேன்!!
சுதந்திர வாழ் இன்பக் காற்றை!
சுருக்குகின்றாயே..காற்றடைக்கும் உறையுள்!....!
பின்னிய கனவைக் குலைத்து!
அன்னிய நினைவை விதைப்பது ஏன்!!
முத்தம் மோகம் மொத்தமாக எதுவுமில்லை.!
புத்தனுமில்லை நீ! சித்தம் தெளிந்திடு!!
பணம் மாளிகையெனும் ஆளுகை வேண்டாம்.!
அமைதிக் காற்றின் சூழுகை போதும் வா!!
மனச் சாந்தியின் தாழிசை போதும் வா

நான் பைத்தியம் ஆன கதை

உஜிலாதேவி
சந்தைக்கு போன!
அண்ணன்!
சாயங்காலம் வரும்போது!
சகதியோடு!
வந்து நின்றான்!
ஏனிந்த கோலமென்று!
இடைமறித்து கேட்கையில்!
இதுதான்!
கட்சி கொள்கை என்றான்!
அறுவடைக்கு!
போன அப்பா!
அரைநாளில்!
திரும்பி வந்து!
திருவோட்டை கையில் தந்தார்!
சோறு போட்ட!
நிலமெல்லாம்!
கூறுபட்டு மனையாச்சி!
ஓடுதான்!
மீதமென்றார்!
அம்மாவின்!
வளையலை!
அடகு வைத்த காசில்!
கல்லூரி போன தம்பி!
கண்ணிரண்டும்!
குருடாகி!
வாசலில் வந்து!
விழுந்தான்!
கவர்ந்த நடிகருக்கு!
கற்பூரம் காட்டும்போது!
கண்களை!
சுட்டதென்றான்!
ஆசைக் கனவுகளை!
அள்ளி சுமந்தப்படி!
பள்ளிக் கூடம்!
போன தங்கை!
கூடாததை!
படித்து விட்டு!
கருகலைக்க காசு கேட்டாள்!
அப்பாவின்!
முதுகில்!
ஆயிரம் சுமையேற!
கணவன்!
வீடு!
போன அக்கா!
குடிகார புருஷனிடம்!
விடுதலை!
வாங்கித் தாவென்றாள்!
மலையேறி படியேறி !
மண்ணில்!
உருண்டு புரண்டு!
கடுந்தவம்!
இருந்து பெற்ற பிள்ளை!
பாலுக்கு!
அழும்போது!
பரிதவிக்க!
விட்டுவிட்டு!
பத்தினியோ தொடரை' பார்த்தாள்!
இத்தனையும்!
நடக்கும் போது!
என்னினிய அம்மாவோ!
அம்மனுக்கு கூழ் வார்த்தாள் !
!
நெருப்பு பொறி!
வந்து!
கண்களை ஒருபுரம்!
குத்த!
கால் கையில்!
ஆயிரம் விலங்கு விழ!
எப்படி நான்!
வாழ்வெதென்று!
எதுவுமே புரியாமல்!
மனநல!
வைத்தியரிடம்!
மருந்துக்கு நானும் வந்தேன்

நாடோடிகள் தொலைத்த வரைபடம்

குருசு.சாக்ரடீஸ்
குகை ஓவியங்களின்!
கடைசி வரியில் விரிகிறது!
உன் ஒளிரும் புன்னகையின் குறிப்புகள்.!
தாகம் தணித்த நீர் சுனைகளில்!
கௌவ துடிக்கும் எலும்பு கூடுகள்!
சுவைத்த பேரீச்சம் பழ விதைகளில்!
முளைத்து நிற்கிறது!
உன் வியர்வையின் மணமுள்ள!
பேரீச்சமரங்கள்!
தனிமையின் தவிப்புகளுடன்!
கிறுக்கிய குகை ஓவியங்களில்!
வேட்டை நாட்களின் இறுதியில்!
குளிர் இரவின் நடுக்கங்களுடன்!
நீ தயாரித்த வரைபடம்.!
தொலைந்த வரைபடத்தின் சிதிலங்கள்!
அழைத்து போகின்றன!
உன் வீட்டிற்கு!
ஹிருதயத்தின் சகலநாளங்களிலும்!
விரவும் தீரா தாகம்!
தடமழிந்த பாதைகள் அழைக்கின்றன!
வெளிச்சமற்ற சூரியனை!
பயணங்களின் நீட்சியில்!
தொலைந்துபோகிறது!
என் வீட்டிற்கான வரைபடம்.!
பாதைகளின் கடவுள்!
தவறவிட்ட என் வீடு!
பயண சுவாசங்களில்

இன்னும் வேண்டுமா ரத்தம்

கோ.புண்ணியவான், மலேசியா
ரத்தவேட்கையில் அலையும்!
ராஜபோக்கிரியே!
ரத்தத்தில் எது!
சுவைரத்தம் எனக்கேட்டால்!
துல்லிதமாய்ச்சொல்வான்!
கற்பினியின்!
கழுத்து ரத்தமா?!
கோலூன்றும் கிழவனின்!
கால் ரத்தமா?!
பள்ளிமுடிந்து!
துள்ளிவரும்!
மாணவ ரத்தமா?!
கடைத்தெருவிலிருந்து திரும்பும்!
கன்னிப்பெண் ரத்தமா?!
தண்ணீருக்கு அலைந்து!
குடம்நீர் கொண்டுவரும் வேளையில் குடித்த!
குடும்பப் பெண்ணின் ரத்தமா?!
எந்த ரத்தம்!
எது சுவை என!
நாவைச்சொட்டி!
நாராசமாய்சொல்வான்!
புதுங்கு குழிக்கு!
ஒதிங்கி ஓடும்!
பாலர்கள் ரத்தமா?!
கைக்குழந்தையை!
காப்பாற்ற ஓடிய!
அன்னையர்கள் ரத்தமா?!
காட்டுக்கு சென்று!
விறகு கொண்டுவரும்!
வழியில் சுடப்பட்ட!
தந்தையர் ரத்தமா?!
உரிமைப்போரில்!
உயிர்நீத்த!
உன்னதவிரனின்!
விதவையின்!
ஒட்டிய வயிற்று ரத்தமா?!
நெஞ்சை நிமிர்த்தி!
நேருக்கு நேர் போர்செய்த!
விடுதலை வீரனின் !
வியர்வை ரத்தமா?!
கருவறையில்!
நெளியும்!
கைகால் முளைக்காத!
அரைகுறை குழந்தையின்!
ஆறாத ரத்தமா?!
!
எது சுவை ரத்தம்!
ஏனிந்த குழப்பம்?!
இவர்கள்!
ரத்தத்தைவிட!
மிகுந்த சுவையானது!
புதிதாய் வயதுக்குவந்த!
உன் மகளின் சுடுரத்தம்!!
உன்னை ஈன்றபோது!
உன் நாவில் விழுந்த!
தாயின் யோனி ரத்தம்!!
புறமுதுகிட்டு!
போரில் மாண்டு!
நாய்கள் நக்கிய!
உன் படையின்!
ரத்தம்!!
நரம்பருந்து!
நாதொங்கி!
காலிழந்த!
உன் கூலிப்படையின் ரத்தம்.!
சுவைத்துப்பார்!
சொல்வாய் நீயே!!
!
-கோ.புண்ணியவான்

சித்திரவதைக் கூடத்திலிருந்து

அஜித் சி. ஹேரத்
அடுத்த கணம் நோக்கி!
எதிர்பார்ப்புக்களேதுமற்று பார்த்திருப்பதைத் தவிர!
முதலாமவனாகவோ இறுதியானவனாகவோ!
ஆவதற்கு நான் பிரார்த்தித்திருக்கவில்லை!
எவ்வளவுதான் சிரம் தாழ்த்தி அமர்ந்திருந்தபோதிலும்!
அவர்களது அன்பற்ற குட்டுக்களிலிருந்து!
தப்பிக்கொள்ள முடியவில்லை!
சித்திரவதைக் கூடத்தில் கழித்த முதல் மணித்தியாலத்திலேயே!
எண்ணங்கள் காணாமல் போயின!
துயர்தோய்ந்த இறந்த கால நினைவுகள்!
உடல்சதையைச் சுழற்றும் மோசமான வேதனைகள்!
மரண ஓலங்கள்!
அசாதாரண உருவங்களோடு மனங்கவர் வர்ணங்கள்!
பயங்கரக் கனவுகளிடையே உணர்வுகளைத் தூண்டுகின்றன!
பயங்கரத்தைத் தவிர!
இங்கிருப்பது!
மனிதத்தன்மையில் கையேதுமற்ற நிலை!
சித்திரவதைக் கூடத்தில் சந்திக்கக் கிடைக்கும்!
ஒரே அன்பான தோழன்!
மரணமே!
அவனும்!
எங்களது வேண்டுகோளை உதாசீனப்படுத்துகிறான்!
நேற்றிரவு கொண்டு வரப்பட்ட யுவதியின்!
குரல் படிப்படியாகத் தேய்ந்தழிகிறது!
சேவல் கூவ முன்பு!
மூன்றாவது முறையாகவும்!
எவரையும் தெரியாதெனச் சொன்ன சகோதரி!
காட்டிக் கொடுப்பதற்குப் பதிலாக!
அச்சம் தரும் மரணத்தையும்!
கெஞ்சுதலுக்குப் பதிலாக!
சாபமிடுவதையும் தேர்ந்தெடுத்த சகோதரி!
எனதிரு கண்களையும் கட்டியிருக்கும் துணித் துண்டு ஈர்த்தெடுத்த!
இறுதிக் கண்ணீர்த் துளிகளை!
சமர்ப்பித்தது உன்னிடமே!
உற்சாகமூட்டும் மேலதிகக் கொடுப்பனவு!
பகலுணவிற்காகக் கிடைத்த யோகட் கோப்பையின்!
அடிவரையில் நக்கிச் சுவைத்த படைவீரன்!
அதை எரிந்து மிதிக்கிறான்!
அடுத்தது யார்!
இங்கு வாழ்க்கை இதுதான்!
இங்கு மரணம் எது?!
முகமொன்றற்ற பிணமொன்று மற்றும்!
தலைப்பொன்ற செய்தியொன்று மட்டும்!
பட்டியலிடப்படாத வாழ்க்கை!
பட்டியலிடப்படாத மரணத்தோடு!
வந்து சேர்கிறது!
பைத்தியக் கனவுகளோடு!
நான் எத்தனை தடவை இங்கிருந்து தப்பித்துப் போயிருக்கிறேன்!
எனினும் நான் இங்கேயேதான்!
இந்தத் தெளிவு கூட!
கண்டிப்பாகப் பயங்கரமானது!
இங்கு படுகொலை செய்யப்பட்ட!
அனேகருக்கு!
மனித முகமொன்று இருந்தது!
எனது இறுதிச் சாட்சியாக!
எனக்குச் சொல்ல இருப்பது அது மட்டுமே

பிணைந்த சாமர்த்தியம்

வேதா. இலங்காதிலகம்
சொன்னால் புரியும் மனங்களும்!
தன்னாலும் புரியாத மண்டூகங்களும்,!
மென்மையான மனங்களோடும் பலர்!
வன்மையான மனங்களோடும் சிலர். !
களிமண்ணாக சில மூளைகளும்!
காயகல்பமாக சில மூளைகளும்!
பளிங்கு போன்ற சிந்தனைகளோடும்!
கலங்கிய சிந்தனைகளோடும் சிலர். !
உலக உயர் நிலையில் சிலரும்!
அதள பாதாளத்தில் சிலரும்,
மனிதநேயம் காக்கும் சிலரும்!
மனிதநேயம் மிதிக்கும் பலரும்!
நல்லது-தீயது, சிறியது-பெரிதுமாய்!
வட்டம்-சதுரம், வளைந்து-நீள்கோடாய்!
மொத்தமாய் இவ்வுலக வாழ்வில்!
எத்தனை வேறுபாடுகள் மனிதரில்! !
ஐந்து வேறுபாடான விரல்கள்!
ஐக்கியமாகி இணைந்த கரங்களாவதாய்!
இணைந்து வேற்றுமைகளிலும் வாழ்வது!
பிணைந்த எம்முள்ளெழும் சாமர்த்தியமே! !

மலர்கள் மீண்டும் மலரும்

அகரம் அமுதா
வில்லென்ற புருவம் வைத்து!
வேலென்ற விழிகள் வைத்துக்!
கள்ளுண்ட அதரம் வைத்துக்!
கனியுண்ட அங்கம் வைத்தே!
இல்லென்ற இடையும் வைத்தவ்!
இடையகத்தில் இன்பம் பொங்கும்!
நெல்லென்ற ஒன்றை வைத்து!
நிற்பவரோ பெய்வ ளைகள்?!
மொழிமுறை முற்றும் மாற்றி!
மொழிதலை விரும்பு வோரும்!
வழிமுறை என்னும் பேரில்!
வனிதையர்க் கிழைக்கும் தீங்கின்!
இழிமுறை அறிந்தி ருந்தும்!
இருப்பதோ கல்லாய்? ஆவரை!
அழிமுறை அறிந்தெ ழுந்தே!
ஆர்ப்பதே பெண்ணின் வேலை!!
வேணவா தீரும் மட்டும்!
விரும்பியே அணைத்துக் கொள்ளும்!
ஆணவா தீர்ந்த பின்னும்!
அணங்கவா தொடர்ந்து விட்டால்!
வீணவா என்னும் கீழ்மை!
விலங்கவா வன்றோ மஞ்சல்!
பூணவா பூவ வாவைப்!
பூணொண்ணா விதவைக் கோலம்!!
பெற்றவளைக் காணப் போமோ?!
பிறப்பினால் தமக்கை யாகப்!
பெற்றவளைக் காணப் போமோ?!
பின்னாளில் மனையைக் கூடிப்!
பெற்றவளைக் காணப் போமோ?!
பேச்சிலே முள்ளை வைத்து!
மற்றவளை கைம்பெண் என்றே!
மனங்குளிரும் பேர்கட் கெல்லாம்?!
மதியென்பார் முகத்தை வாயின்!
மலரென்பார் சிரிப்பை திரு!
மதியென்பார் மணந்து கொண்டால்!
மணவாளன் இருக்கும் மட்டும்!
மதியென்பார் அவன்ம ரித்தால்!
மதியவளை மிதியென் பார்கள்!
விதியென்றே வீட்டின் மூலை!
வீழ்தலோ பெண்ணின் வீரம்?!
மெட்டியை மஞ்சல் தோய்ந்த!
மணிக்கயிற் றோடு நெற்றிச்!
சுட்டியை@ பூவை வண்ணம்!
துளங்கிடும் ஆடை தன்னை!
போட்டோடு கைவ ளையைப்!
புரத்தலன்றித் துறத்தல் நன்றோ?!
அட்டியிலை அடுத்தோர் மாலை!
அவள்தோளில் வீழ்தல் நன்றே?!
பதுமைதான் இது வரைநீ!
பாவைநீ துணிந்து விட்டால்!
புதுமைதான் பூமி யெங்கும்!
புத்தியில் ஓர்ந்த றிந்தே!
புதுக்கிடும் மறும ணத்தைப்!
புரிதலே பெருமை யாண்டும்!!
மதுக்குடம் ஏந்தும் கூந்தல்!
மலர்மீண்டும் மலர்தல் வேண்டும்!!
-அகரம்.அமுதா

முட்களும் பூக்களும்

இப்னு ஹம்துன்
இப்னு ஹம்துன் !
!
முத்தங்கள் வழியும் பால்யம் !
முடிவுக்கு வர !
நிராகரிப்பின் முட்களோடு !
நீளும் உனது கரம் !
வருத்தங் கசிய வைப்பதில்லை !
ஒருபோதும்! !
உனது மவுனம் !
உரத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறது !
சங்கடம் என்றொரு அர்த்தமும் !
சம்மதம் தனக்கென்று! !
நடக்கப் பழகிவிட்டப் பின்னர் !
நான் அறிந்தே வைத்திருக்கிறேன் !
நாளை !
என் பருவத்தின் பாதையில் !
மறுபடி துளிர்க்கும் !
உனது கரத்தில் !
இருக்கலாம் !
எனக்கான பூங்கொத்துகள்! !
!
-- !
H.FAKHRUDEEN !
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்) !
+966 050 7891953

முகம் தொலைத்த

புதுவை பாரதிசோமசுந்தரம்
சுயம் இழந்து தவிக்கும்....!
முகம் இன்றி வருந்தும்....!
ஆயிரங்களில் ஒன்று...!!!!
கடமைகளில் கவலைகளில்!
கவிதைகள் மறந்தன...!
அடுப்படிகளில் வேலைகளில்!
ஆசைகள் தொலைந்தன...!
எனக்கென்ற வார்த்தைக்கு!
எதிர்ப்புகள் வந்தன...!
புரிதல்கள் இருந்தும்!
பூகம்பங்கள் தோன்றின...!
எரிமலை குழம்புகளாய்!
வார்த்தைகள் எரித்தன...!
அன்பினை நட்பினை!
அலைகள் அடித்தன...!
உண்மை நட்பு கொச்சை பட்டது...!
உதிர்ந்த வார்த்தைகள் மனதில் ரணமாய்...!
என் முகம் எங்கே?!
உன் முகமே என் முகமாய்...!
நம் பெண் முகமே என் முகமாய்...!
இருப்பினும்...!
என் அன்பும் உயிர் காதலும் உனக்கு மட்டுமே!
என்றென்றும்...!
முகம் தொலைத்த எனக்கு!
முகம் தெரியும் கண்ணாடியாவது பரிசளிப்பாயா....!
இருபது வருட காதல் கணவனே....?!
--புதுவை பாரதிசோமசுந்தரம்