தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

மனதின் கையில்

சித. அருணாசலம்
மரம் அமைதியைத் தான் விரும்புகிறது - ஆனால்!
காற்று விடுவதாயில்லை.!
மழை அமைதியைத் தான் விரும்புகிறது - ஆனால்!
மேகம் விடுவதாயில்லை.!
மனம் அமைதியைத்தான் விரும்புகிறது - ஆனால்!
ஆசை விடுவதாக இல்லை.!
காதல் அமைதியைத் தான் விரும்புகிறது - ஆனால்!
காமம் விடுவதாயில்லை.!
மேகத்தையும், காற்றையும் !
வேகத்தைக் கட்டுப்படுத்தச் சொல்ல முடியுமா?!
ஆசையையும், காமத்தையும்!
அளவாக்கிக் கொள்ளலாம் அல்லவா?!
நிறைவாக ஒன்று இருக்கும் போது - அதில்!
குறை சேர்வதற்கு மற்றது அவசியமா?!
இவற்றையெல்லாம் இணைத்திருப்பது!
இறைவன் படைப்போ - இல்லை!
இயற்கையின் நியதியோ?!
கட்டுப்பாடு என்பது!
மனிதனின் கையில் - அதுவும்!
மனதின் கையில் மட்டும்

விரல்நுனியில் மை வைத்து விதியை

வித்யாசாகர்
எழுதுங்கள் !!!
------------------------------------------------------------!
சில்லறைக்கு!
விலைபோகும்!
ஓட்டு எந்திரங்களல்ல – நாம்!
நாளைய விதியை இன்றெழுதும்!
தேர்தல் பிரம்மாக்கள்;!
இலவசத்தில் மதிமயங்கி!
எடுத்து வீசிய ஊழல் பணத்தில்!
வக்கற்று உயிர்வாழும் சோம்பேறி ஜென்மங்களல்ல – நாம்!
தேசத்தின் நலனை தேர்தலில் அணுகும்!
மண்ணின் – உரிமை குடிகள்;!
போட்டதை தின்று!
விரித்ததில் தூங்கிப் போகும்!
புரட்சியே யற்ற வெற்று குப்பைகளல்ல – நாம்!
சரி தவறு அலசி; தக்கவரை நிறுத்தி – நாட்டின்!
வளர்ச்சி குறித்து சிந்திக்கத் தக்க அறிவுள்ள மனிதர்கள்;!
விரல்நுனியில் மை பூசி – இருக்கை பெற்றபின்!
தலைக்கு நெருப்பிடும் கைகளை!
முறித்துப் போடும் வாய்ப்புதனை அன்றிலிருந்தே!
மீண்டும் மீண்டும் பெற்றவர்கள் – நாம்!
மீண்டும் மீண்டும் இழக்கிறோமே தவறில்லையா??????!
அடித்தவனை!
திருப்பியடிக்கத்!
தயங்காத நம் கைகள் -!
வயிற்றில் அடிப்பவர்களை மட்டும்!
விட்டுவைத்ததில் சோடைபோனோமே; அதும் தமிழராய்???!!!!
வரும் தலைமுறைக்கு!
வாழ்வினை சேகரிக்கும் கடமையினை!
ஒவ்வொருமுறை – கவனமின்றி பதிந்த ஒட்டுக்களுக்கும்!
கொடுத்த விலை படி விற்றுவிட்டோமென்பது!
சிந்திக்காத கேவலத்தால் -!
நாம் செய்த பெருங் குற்றமின்றி வேறென்ன???!
ஐந்து வருடத்திற்கு!
பணம் காய்க்கும் மரமென்றெண்ணி!
ஒரு குவளை சாராயம் ஊற்றிக் கொடுத்து!
வெட்டிச் செல்பவர்களை – இனி!
விரட்டித் துரத்துவோம்;!
ஓட்டு போடுவதற்கென!
அரிசி – யல்ல!
அமிழ்தமே தந்தாலும்!
தூக்கி முகத்தில் வீசுவோம்;!
மக்களின்!
சுய புரட்சியின் அர்த்தத்தை!
தேர்தலால் அனைவருக்கும்!
விளங்கவைப்போம்;!
உனக்கும்!
எனக்கும்!
இத் தேசத்தின் நன்மைக்கும்!
இனத்தின் மக்களின் ஒவ்வொரு குடிமகனின்!
உரிமைக்கும் மதிப்பு கொடுப்பவர்!
சிந்திப்பவர்!
உழைக்க முடிந்தவர் எவரேனும் உண்டெனில்!
அவருக்கென விரல் நுனியில் மையிடுவோம்;!
நம் வாழ்வினை நாமே திருத்தியமைப்போம்

வெயில் பிடித்தவள்

ரசிகவ் ஞானியார்
சாளரம் ஊடே நுழைகின்ற!
கற்றைகளின் துளியொன்றினை!
பிடிபொருளென நினைத்து!
பிடிக்க முயற்சித்து!
பிடிக்க முயற்சித்து!
தோற்றுவிடுகிறது!
அவள்!
பல் முளைக்கா பருவம்!
கற்றைகளை விளக்குமளவுக்கு!
கற்கவில்லை நான்!
கதிரவனே நீ!
கற்றைகளுக்குப் பதிலாய்!
கடிபொருளை அனுப்பேன்!
எப்பொழுதும் தோற்கவேகூடாது!
என்!
வெயில் பிடித்தவள்!
!
- ரசிகவ் ஞானியார்

விளம்பரங்களில் விழுந்த வாழ்க்கை

இ.இசாக்
யாருக்கும் !
வாய்க்காதது தான் !
ஊடகங்கள் பரிந்துரைக்கும் !
எல்லாவற்றையும் !
வாங்கி !
பயன்படுத்தி வாழ்வதென்பது !
கூடுதல் சிரமம் !
கூலித்தொழிலாளியாக கடல்கடந்தவனுக்கு. !
மீண்டும்.. மீண்டும் !
தொலைத்தெடுக்கிற !
விளம்பர யுக்திகளுக்கு பலியாகிவிடாமல் !
நாமிருக்கலாம் !
நம்மைச் சார்ந்தவர்கள்..? !
விளம்பரங்களெதையும் !
நம்பாமல் !
வாழக்கோரும் !
விளம்பரமொன்றை எடுத்தளிக்க !
யாரும் !
வரமாட்டார்களா?

பூக்கள் இன்னும் பேசும்

நளாயினி
இ!
ரகசியம் சொல்வதாய்!
முத்தமொன்றை!
வைத்து தொலைத்தேன்.!
என்ன நீ....!
ஒரு முத்தம் தானே.!
அதற்கு இப்படியா யாரும்!
முறைப்பார்கள்.!
ஐ!
யோ பாவம் அந்த நகங்கள்.!
அருகிருக்கும் செடிகள்.!
என் வருகைக்காக!
அவற்றை எவ்வளவு நேரம் தான்!
பிய்த்து எறிவாய்..!!
அட தூர நின்று!
இதைக் கூடரசிக்காது விட்டால்!
நான் உன் காதலியா என்ன.!
அ!
தெப்படி உன் நெற்றியை!
தடவிப்போகும் ஒற்றைத்தலைமுடி.!
அதை நீ ஒதுக்கி ஒதுக்கி!
கதைக்கும் போது!
எத்தனை அழகு தெரியுமா.!
உ!
ன்னை நான் கடக்கும் போது!
அதெப்படி எனக்காக!
இவ்வளவு அழகான பார்வையையும்!
புன்னகையையும்பரிசளிக்கிறாய்..!!
உ!
னது நண்பர்களோடு!
இருக்கும் போது!
என்னைக் கண்டதும்!
ஒரு செருமல்.!
அதெப்படி நண்பர்களுக்கேதெரியாமல்!
என் செவி தடவிப்போகும்உந்தன் செருமல்.!
நளாயினி

உருமாற்றம்

செல்வா
கவி ஆக்கம்செல்வா!
உழைப்புடன் மோதி!
வியர்வை மழையை!
பொழிந்து செல்!
உன்னத வாழ்வு!
செழித்தோங்கும்!!
தோல்வி படிகளை!
நம்பிக்கை என்ற!
கைப்பிடியால்!
துன்பப் படுத்து!
வெற்றி மேடைகள்!
விரும்பி அமையும்!!
முயற்சி என்ற முன்!
ஊதாரணத்தை!
முகவரியாக்கிகொள்!
முற்றுகையிடும்!
பாராட்டு கவிதைகள்!!
உறுதியுடன் வரைந்து பார்!
உன் வாழ்க்கை!
ஓவியத்தை!
உயர்ந்த “ உருமாற்றம் “!
அடையும்

சொரணையுள்ள சுடுகாட்டுப் பிணங்கள்

மகரந்தன்
கேட்பாரற்று !
குப்புறக்கிடக்கும் !
பேய் இரைச்சலில் !
சிகரெட்டின் முனைதவிர்த்த !
இடங்கள் அனைத்திலும் !
அடர்ந்துகிடக்கிறது !
கருப்பு. !
ஓயாமல் பேசும் வாய் !
பதில் கதவைத் திறக்காமல் !
சொற்களைப் பிணமாய் !
இருத்தி வைத்திருக்கிறது. !
கூட்டம் கூட்டமாக !
தனியாக !
வரிசையாக !
இணைந்து !
முன்னேமுன்னேவென்று !
புகை அப்பிய !
வானத்தை நோக்கி !
உணர்ச்சியற்று !
உட்கார்ந்திருக்கிறது !
எதிர்காலம் குறித்த !
ஒற்றைச் சம்பவம் !
என்ன ஒரேமுட்டா யோசனை ? !
முப்பாட்டனை நெனைச்சிக்கிட்டிருந்தேன் !
கனன்றுகொண்டிருக்கிறது !
கருஞ்சுருட்டு முனையின் கங்கு !
வெளிச்சத்தின் எல்லைதொட்டு. !
எரிதழல் கேட்கிறது !
சொரணையுள்ள !
சுடுகாட்டுப் பிணங்கள்

காற்றின் காதலனே

தமிழ் யாளி
இந்தியர்களின் இதய!
விஞ்ஞானியே !!
உங்கள்அக்கினிச் சிறகுகளுக்குள்!
அடைகாக்க!
வைக்கப்பட்டுள்ளது!
இந்திய இளைஞர் படை!
ஒரு கலங்கரை!
விளக்காக கண்களின்!
ஒளியைக் கொடுங்கள்!
பாரத இளைஞர்களின்!
பயணம் தொடர!
நீங்கள் வெடித்துக் காட்டிய பொக்ரான்!
குண்டால் அகிலமே அரண்டு போனது!
அது அமெரிக்க!
காதுகளுக்கு இடியாய்ப் போனது!
முதுபெரும் விஞ்ஞானியே !!
எங்கள் மூத்த குடிமகனே !!
உங்களுள் ...!
அன்னையைப் பார்க்கிறோம்!
ஆசானைப் பார்க்கிறோம்!
தோழமையைப் பார்க்கிறோம்!
உங்களுக்காக!
ஆயிரமாயிரம்!
இந்திய இளைஞர்கள்!
கைகளில் பட்டம்,!
கண்களில் கனவுகளுடன் தயார்!
உங்களின்...!
கனவினைக் கொடுங்கள்!
கருத்தினைக்!
கொடுங்கள்!
கற்பனை கொடுங்கள்!
கவியினைக்!
கொடுங்கள்...!
உங்கள்!
இலட்சிய பாரதம்!
நிச்சயம் நிரைவேறும்

வாழ்வும் மரணமும்

தேவஅபிரா
தளிர்களும் வேர்களும் !
மீள நீளத் துடிக்கும் !
சித்திரையின் இரவில் உங்கள் மரணம் கேள்வியுற்றேன் !
முரணணியோ வாழ்வு !
வன்மமானது வாழ்வன்று !
வலிவே வாழ்வானது என்றும் உங்களுக்கு !
விட்டுக் கொடா வார்த்கைகள் நிறைந்தவுங்கள் !
வாயாடல் அறிவேன் !
இட்ட போர் அறிவேன் !
இடாப் போரும் !
மூட்டிய மூச்சின் இறுதிக் கணமும் அறியேன் !
உன்னதமான கவிஞனின் துயரங்களுக்குத் து£ணாகவும் !
உயர்ந்த கவிஞர்களின் பெருமைகளுக்குத் தாயாகவும்!
வாழ்ந்த உங்கள் வாழ்வின் காலடியில் !
மரணம் தலைகுனிகிறது !
!
தேவஅபிரா !
14 சித்திரை 2004 !
மகாகவி உருத்திரமூர்த்தி அவர்களின் துணைவியாரின் மரணத்தின் நினைவாக

90களின் பின் அந்தி

ஸமான்
ஒரு ஊசாட்டமும் இல்லை!
என் செம் மண் தெருவை!
தார் ஊற்றி கொன்றது யார்!
90களின் பின் அந்தியா இது!
அப்போது காகங்கள் என்றாலும்!
தெருவை கலைத்துக் கொண்டிருக்கும்!
ராணுவ வீரர்களின் சூ கால்கள்!
தெருவின் விரை மீது!
ஊன்றி ஊன்றி மிதிக்கும்!
ஜீப் வண்டிகளின்!
டயர் தடங்களில் நசுங்கிய!
கைப் பாவைகளைக் கேட்டு!
எந்தக் குழந்தை என்றாலும்!
அழுது வடிந்து கொண்டிருக்கும்!
முரட்டு துப்பாக்கிகளைக் கண்டு!
தெரு நாய்கள் குரைத்து குரைத்து!
அச்சம் எழுப்பி!
தெருவெல்லாம் கதறி ஓடும்!
90-91 களின் அதிகாலை வெண் பனிக்குள்!
உடல் கொடுகி விழி நிமிர்ந்து!
கைகள் கெஞ்ச ஒவ்வொரு மின் கம்பங்களுக்கும்!
உரமாக விதைக்கப்பட்டவர்களின்!
குருதி சொட்டிய பரள் மண் துகள்கள்!
எங்கள் உம்மாக்களின் கண்களுக்குள்ளும்!
விழுந்து கரிக்கும்!
ஒரு ஊசாட்டமும் இல்லை!
கைகளும் கண்களும்!
கறுப்பு துணியால் கட்டபபட்டு!
சும்மா கிடந்தது தெரு!
மார்பில் இரும்பு துப்பாக்கிகள்!
அழுந்தியிருக்கவில்லை!
'நீல' வானத்தில் பறவைகளின்!
சஞ்சாரம் அறவே இல்லை பின் அந்தி 6.00 மணிக்கு!
எங்கள் விளையாட்டு திடல்களில்!
யுத்த விதை விழுந்து மண் பிளந்து!
வேர் கொண்டு எழுந்த நாட்களில்!
ஒன்றா இது!
1999ல் பயத்தோடு விளையாடி கழித்த!
முன் இரா ஒன்றில்!
'ஜஃபர் மச்சான்' இனம் தெரியாத!
இரண்டு பேரால் சுட்டு கொல்லப்பட்டார்!
அவர் மெளத்தாகி கிடந்த!
மஞ்சோண்ணா மர நிழல் மட்டும்தான்!
அவர் மரணத்திற்கு சாட்சியாய்!
இருந்தது!
பின் அதையும் கதற கதற!
சுட்டு கொன்றுவிட்டார்கள்!