தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

திரை விலக்கி

யோகபிரபா, புதுச்சேரி
இருபது ஆண்டுகளாய் !
இறுக்கப்பட்ட தசைத் தொகுதி!
தகித்துக் கொண்டிருந்த உணர்ச்சி !
வீரிடுகையில்!
கற்பென்ற கற்பிதமெல்லாம் !
காணாமல் போய்விடுகிறது,!
பால்பேதமின்றி!
யாரும் அறியாமல்!!
பொண்ணுனா அடக்கமா இருக்கனும்!
அடங்கிவிடுகிறது !
இதில் அனைத்துமே!!
சார்புயிரியாய் எத்தனைக் காலம்?!
எனக்காக ஓர் நாள் !
என் ஆசைக்கு உயிர் கொடுத்து !
என் உணர்ச்சிக்கு !
விடுதலை கொடுக்கிறேன்....!
!
-யோகப்ரபா

ஏதோ என்னுள்ளே

சத்தி சக்திதாசன்
சக்தி சக்திதாசன்!
எண்ணக் கருவறையில்!
என்னிதயத்து உணர்வுகள்!
கருக்கொண்டு கவிதையாக!
கணப்பொழுதினில் பிரவசமோ !!
சொல்லத் தெரியாத உணர்வுகள்!
சொல்ல முடியாத வார்த்தைகள்!
சொற்சிலம்பமாடித் தமைக் காட்டும்!
கண்ணாடியாய்ச் சில கவிதைகள்!
எந்தையும் தாயும் வடித்த!
அன்பெனும் கவிதையில் முகிழ்த்த!
ஆசைக் கவிதையின் உருவமாய்!
அவனியில் இன்று கவிதையாய் ....!
முந்தைய பருவத்து நினைவுகள்!
முல்லையாய் மணந்திட்ட பொழுதுகள்!
முத்தமிழ்க் கடலினுள் மூழ்கியே!
முத்தெடுத்துக் கோர்த்த கவிதைமாலைகள்!
சிந்தையை உலுப்பிய கணங்களும்!
செந்தமிழ் தடவிய களிப்பிலும்!
பந்தயம் போட்டுக் கெடுவது போல்!
பாழாகிப் போன காலங்களும்!
விந்தைதான் உலகில் அன்பெனும்!
விலையில்லா அருமருந்து தரும்!
வித்தக வடிவின் வெளியிடை!
வியத்தகு கவிதையின் வனப்புகள்

விழித்துக்கொள்வோம்

லலிதாசுந்தர்
இடிந்து கொண்டிருக்கும் சுவற்றில் !
சித்திரம் வரைந்து!
கொண்டிருக்கிறோம்!
சித்திரத்தின் முழுமையை!
உணரமுடியாபாதையில்!
செவிகளை விற்று!
இசைகருவி வாங்கிக்!
கொண்டிருக்கிறோம்!
அபாயம் அறியா!
விளக்கை சுற்றும் விட்டில்ப்பூச்சிகளாய்!
மின்னனுகருவிகளின் பிடியில் மயங்கி!
கொண்டிருக்கிறோம்!
தொலைத்தது பணமெனில்!
மீட்டுவிடலாம்!
தொலைந்துக் கொண்டிருப்பது!
வாழ்க்கை!
விழித்துக்கொள்வோம்!
முற்றிலும் இயந்திரமனிதனாய்!
மாறும்முன்!
- லலிதாசுந்தர்

மின்வெட்டு

பி.தமிழ் முகில்
ஏர் கண்டிஷனும் ஃபேனும் தான்!
உதவாமல் போய்விட!
கைகொடுப்பது பனையும் !
தென்னையும் தான் - விசிறிகளாய் !!!!
கிரைண்டரும் மிக்சியும்!
ஓரமாய் படுத்துறங்க -மீண்டும்!
துள்ளியோடி வந்து வாசலை!
அலங்கரிக்குது - அம்மியும் ஆட்டுரலும் !!!!
குளிர்ந்த நீருக்காக ஃப்ரிட்ஜ் அருகே !
காத்திருந்த காலம் மாறி !
கண்ணுக்கு அழகாய் கைக்கடக்கமாய்!
ஆரோக்கியத்துடன் - மண்பானைகள் !!!!
டிவியில் லயித்து - உலகை மறந்திருந்தோர்!
இப்போது சுற்றியிருப்போரின் !
முகங்களில் சிரிப்பினைப்!
பார்க்கவும் பழகியிருக்கிறார்கள் !!!!!
கம்ப்யூட்டரால் கட்டுண்டிருந்த குழந்தைகளுக்கு!
இப்போது மனப்பயிற்சியும் உடற்பயிற்சியும் !
தாயமும் பரமபதமும் - கண்ணாமூச்சியும்!
தொட்டு விளையாட்டும் கூட விளையாடுகிறார்கள் !!!!
செயற்கையோடு செயற்கையாகவே!
வாழப் பழகிவிட்ட நமக்கு- இயற்கையோடு!
இயைந்த வாழ்வினை அதன் சிறப்பினை!
நமக்கு கற்றுத் தருகிறது - மின்வெட்டு

தேசக்குரல்

வனு, பிரான்ஸ்
என்!
தேசத்து!
வண்ணாத்துப்!
பூச்சிகளே!!
பனி உருகும் !
தேசத்தின்!
பாசக்குரல் கேட்கிறதா?!
என் !
தேசத்தின்!
மின்மினி பூச்சிகளே!!
கூடு கலைந்து வந்த!
குயிலோசை கேட்கிறதா?!
பின்னிரவு கடக்கும்!
ஆட்காட்டி பறவைகளே!!
எங்கள்!
சாமத்து விழிப்பின்!
அர்த்தங்கள் புரிகிறதா?!
தேசத்து!
புதல்வர்களே!!
உங்கள் விழிப்பு !
வரலாறு.!
எங்கள் விழிப்பு !
வரலாற்றுக்கான அடிக்குறிப்பு.!
வனு.!
பிரான்ஸ்

பிரியாவிடை

மு. பழனியப்பன்
மங்கலமாய் வாழப்போகும்!
உனக்கு!
நான் என்ன சொல்லி!
வழியனுப்ப!!
அறிவுரை கூறவா?!
ஆசி நல்கவா?!
பிரியாவிடை தரவா?!
போய் வா மகளே!
போய் வா!!
இந்த!
ஒவ்வொரு சொல்லுக்குள்ளும்!
என் உண்மை அன்பு!
அழுத்தமாய்க் கிடக்கிறது!
போய் வா மகளே!
போய் வா!!
ஒப்புக்குச் சொல்லவில்லை மகளே!
நீ பிறந்தபோது!
நான் மிகவும் மகிழ்ந்தேன்.!
பிள்ளையில்லை என்ற!
பெரும்பழி தீர்க்கப் பிறந்தவள் நீ!
மகளே!
உன்னைப் பெற்றதால்!
இப்போதும் மகிழ்கிறேன்!
உன் சிரிப்புகள்!
உன் மழலைகள்!
உன் பரிசுகள்!
நம் வீட்டு வெற்றிடங்களை!
விரட்டி அழித்தன!
!
அடிக்கு ஒருதரம்!
உன்பேரைச் சொல்லி அழைப்பேன் மகளே!
இனி வருவதற்கு!
யார் இருக்கிறார்கள்!
என்னை விடவும்!
என்னைப் பற்றி!
நன்கு அறிந்தவள் நீ!
சின்னவயது முதலே!
எங்கள் சண்டைகளுக்குச்!
சமாதானத் தூது!
நடந்தவள் நீ!
இனி எங்களின் சண்டைகள் கூட!
ரசமற்றுப்போகும்!
வளர்ந்துவிட்டாய் நீ!
காலத்தின் பயணத்தில்!
வெகுவிரைவாய்!
வளர்ந்துவிட்டாய் நீ!
பேர் பார்த்து!
ஊர் பார்த்து!
மற்றொரு வீட்டுக்கு!
உன்னை ஒட்டு மொத்த மகிழ்வோடு!
நாங்கள் அனுப்பி வைக்கிறோம்!
போய் வா மகளே!
போய் வா!!
நேரங்கிடைக்கும் போதெல்லாம்!
எங்கள் நினைவு தோன்றும் போதெல்லாம்!
வந்து போ மகளே! வந்து போ!!
உன் மகிழ்வுகளை!
எங்களுடன் கலந்து கொள்ள!
வந்து போ மகளே! வந்துபோ!!
இவ்வளவு சொல்லியும்!
இன்னும் மீதமிருக்கின்றன!
என் உணர்வுகள்!
எழுத்துக்கள் போதாது மகளே!
போய் வா மகளே!!
போய் வா!!
!
மு. பழனியப்பன்

பார்வை

ஸ்ரெபினி
யார் யாரோ!
உன்!
பெயர் சொல்லி!
அழைக்கிறார்கள்!
பம்பரம் போல!
சுழன்றபடி!
நீ!
இயல்பாக சிரித்து!
இயல்பாக பேசி!
வழமைபோல!
யாருடனும் பேசாது!
தனிமையில்!
கழிகின்றன எனது!
பொழுதுகள்!
உன் உதட்டின்!
அசைவில்!
பேசும் வார்த்தைகளை!
வாசித்து விடுகின்றன!
எனது கண்களென்று!
பாவம் உனக்கு!
தெரிய வாய்ப்பில்லை!
அவசரங்கள்!
சங்கடங்கள்!
சமாழிப்புக்கள் என்று!
நகர்கின்றன!
நிமிடங்கள்!
ஆனாலும் நான்!
காத்திருக்கிறேன்!
நீ பார்க்கப்போகும்!
ஒரே ஒரு!
பார்வைக்காக!
-ஸ்ரெபனி

போலிகள்

செம்மதி
தேன் தடவப்பட்ட!
நாக்குகள்!
புற்றில் கருநாகமாய்!
வாய்க்குளியில்!
நெழிந்து புரழ்கின்றன!
ஒவ்வொரு உச்சரிப்புக்களும்!
உயிர்களைப் பிடிப்பதற்காய் செல்லும்!
பிசாசுகளைப்போல!
வான வெளியில்!
பரந்து செல்கிறது!
அவர்களின்!
கைகளில் இருந்து!
வெள்ளைப் புறாக்கள்!
பறக்கவிடப்படுகின்றன!
அவற்றின் கால்கள்!
இறுகக் கட்டப்பட்டிருக்கிறது!
அவர்களின் முகங்கள்!
நெருங்கி கீளே விழுகின்றன!
அந்தக் கொடூரத்தை!
பார்க்க முடியாது!
கண்கள் ஒவ்வொன்றும்!
ஒளி இழந்து போகிறது!
அப்பாவிகளின்!
கண்ணீர் கோடுகளை!
களுவுவதற்கு என்று!
அவர்களின்!
இரத்தம் கேட்கிறார்கள்!
சமாதானத்திற்காய்!
சண்டையிடுவதாய்!
சொல்கிறார்கள் ??? ......!
-செம்மதி

பறை

கவிமதி
முன்பொருமுறை !
பற்றியது !
பின்பொருமுறை !
பதிலுக்கு !
பற்றவைத்தது !
அநியாயம் கண்டு !
கொப்பளித்தது !
சுழன்று சுழன்று !
சோர்ந்துப்போகுமென்று !
எண்ணுகையில் !
சீறிப்பாந்தது !
ஒத்திசை பாடலமைத்து !
ஓங்காரமிட்டது !
கேள்விகளாயிரம் !
கேட்டு.. கேட்டு.. கேட்டு.. !
பதிலுக்குக் காத்திறாமல் !
ஆளுமையின் திமிர் அடக்க !
செவிகிழிய !
அறையத்தொடங்கிற்று !
எமது !
ஆதிப்பறை !
- கவிமதி

வெளிச்சம்

இஸுரு சாமர சோமவீர
அந்தகாரத்தில் எனக்கு வழி காட்டிய!
அச் சிறிய தங்க நிற ஒளிப் புள்ளி!
வெளியே தென்படாதது!
எங்கு, எப்பகுதியலது!
தேடினாலும் தென்படாதது !
அலங்காரங்களற்ற விழிகளில்!
இருளை விடவும் அனேகமானவை!
வெளிச்சத்தில் மறைந்துபோகும்!
தென்படாமலேயே