தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

காணாமல் போன இதயம்..எழுந்து வராத

முனியாண்டி ராஜ்
நியாயங்கள்!
01.!
காணாமல் போன இதயம்!
-------------------------------------!
முகம் காணாமல் போன!
பழைய டைரிகளின் மடிப்புகளில்!
தேடித் தேடிப் பார்க்கிறேன்…!
நிறம் மாறிய தாள்கள் உடைந்து!
முகத்தில் புழுதியைத் துப்பிவிட்டுப் போகின்றன..!
தூசுகளின் பரண்களில்!
கண்கள் அலசி ஆழ்ந்து தேடுகின்றன…!
இன்னும் கிடைக்காமலேயே நழுவிக் கொண்டு செல்கிறது…!
காணாமல் போன வருடங்களைப் போலவே!
தொலைந்து போயிருக்குமோ..!
தேடிக் கொண்டே செல்கிறேன்!
நடந்த வழித் தடமெங்கும்….!
உன்னையும் அதனையும் தேடி!!
கொடுக்கப்டாமல் போன ஒரு கடிதம்!
இன்னும் இதயத்தின் இறுக்கத்தில்..!
எங்கேயாவது இருக்கும்… அதுவரை!
தேடிக் கொண்டே ………….!
!
02.!
எழுந்து வராத நியாயங்கள்!
----------------------------------!
அமர்ந்தவை அமர்ந்தபடியே இருக்கட்டும்…!
காதுகளைக் கிழிக்கும் குரல்களாகட்டும்!
கால்களை இழுக்கும் காரணங்களாகட்டும்!
கழுத்தை நெறுக்கும் கண்டனங்களாகட்டும்….!
எல்லாருக்கும் தெரிந்த ஒன்று உனக்கும் தெரியும்!
காலடியில் நசுக்கப்படும் உரிமைகள் பற்றி!
நீயும் அறிந்திருக்கிறாய்…..!
அறிக்கைகள் வழி உன் அரசியல்!
உரசிப் பார்க்கப்பட்டும்…!
நீ மட்டும் பேசாமல் அமர்ந்தே இருக்கிறாய்!!!!!
எவ்வளவுதான் கீறப்பட்டாலும்!
உன் உணர்வுகளைச் செவிடாக்கிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாய்!!
அடுத்தவர் வந்து அமர்ந்தாலும்!
அப்படித் தான் பேசப்படும்!!
நாங்களும்!
எழுந்து வராத நியாயங்கள் பற்றி!
பேசிக் கொண்டேதான் இருப்போம்!
அவை முடம் என்று தெரிந்தும்

பேசிக்கொண்ட வார்த்தைகளின்

றஞ்சினி
எதிரொலி..!
--------------------------------------------!
உன்னருகாமையை!
அதிகமாகவே நேசிக்கிறேன்!
நான் அழகாக!
இருக்கும்போது!
எம் தொலைதூரம்!
வயதையும் இடைவெளியையும்!
அதிகரிப்பதில் வெற்றி கொள்கிறது!
நாம் பேசிக்கொண்டபோது!
பகிர்ந்துகொண்ட காதலும்!
இடம்மாறிய வார்த்தைகளும்!
வாங்கிக்கொண்ட!
முத்தங்களும்!
இன்று!
நடுவளியில் தவிக்கிறது!
மீண்டும் சந்திப்போமா!
என்பதே கேள்வியாகியும்!
என் உணர்வுகள் உனக்காக.. ..!
நீ சொன்ன் வார்த்தைதான்!
ஒருபொழுதேனும் உன்னுடன்!
உலகை ..!
நான் பொய்யாக எண்ணவில்லை!
நரைகள் விழுந்தபின்னும்கூட!
ஒருநாள் நாம் சந்திக்கலாம்!
உன் வார்த்தைகளை!
பத்திரமாகவே வைத்திருக்கிறேன்.!
-றஞ்சினி

வருத்தமுள்ள அர்த்தங்கள்

இப்னு ஹம்துன்
இப்னு ஹம்துன். !
கணந்தோறும் நிகழ்கின்றன !
சொற்களின் பிரசவங்கள். !
சூல் கொண்ட அர்த்தங்களை !
சுமந்து வரும் சொற்கள் !
அடைகின்றன !
தாய்மையின் பூரிப்பு! !
சுமத்தப்பட்ட அர்த்தங்களை !
சேர்த்திழுக்கும் சொற்களுக்கோ !
செக்கு மாடுகளின் பரிதவிப்பு. !
சில நேரங்களில் சில சொற்கள் !
சுவர்கள். !
சில கதவுகள். !
வாழ்க்கைப் பயணத்தில் !
வழி நெடுகிலும் சில கண்ணிவெடிகள் !
கை கால் பட்டாலே ரத்தக்களறி. !
வாழ்வின்நெடுஞ்சாலைகளில் !
கனிமரங்களும் உளதே. !
பசியைப் போக்கவே !
பழுத்திருக்கும் சொற்கள். !
பாலைப்போலவும் சொற்கள் !
பாலகர்களுக்கு ஊட்டமளிக்கும். !
பாலை போலவும் சொற்கள் !
ஒட்டகங்களுக்கே உகந்ததாக! !
வாழைப்போலவும் சொற்கள் !
வளர்த்திடும் தலைமுறைகள் !
வாளைப்போலவும் சொற்கள் !
வீழ்த்துவதே நோக்கமாக..! !
ஆடை விலக்கும் சொற்களின் !
ஆன்ம அர்த்தங்களுள் !
வழிந்துக் கொண்டிருக்கிறது !
வருத்தமொன்று! !
அது...... !
வயற்காடுகளில் !
வெட்டியான்களும் !
வந்தமர்ந்துக்கொள்ள............. !
மயானங்களிலும் !
உழுதுக்கொண்டிருக்கிறார்கள் !
மானுடத்தின் சில விவசாயிகள். !
-------------------------------- !
H.FAKHRUDEEN

எனக்கான இருப்பு……

கோகுலன். ஈழம்
ஒளிக் கற்றையின்!
ஊசி முனை வளியே!
தெரிகிறது எனது ஏழ்மை.!
உப்பிப்போன !
வயிறு சொல்கிறது!
எனது வாழ்வை.!
செம்படை முடியின்!
சிக்கல் சொல்கிறது!
எனது வயதை.!
அழுக்குத்துணியின்!
பாரம் சொல்கிறது!
எனது நிலையை.!
எனைத் தாண்டி!
எவன் செல்கிறானோ...........!
அவனது உமிழ்தல்கழுக்கும்!
அழைக்கும் பெயர்களுக்கும்!
நானே காரணமானவன்.!
எனது பெயர்கள்....!
பிச்சைக்காரன் பைத்தியம்!
லூசு கள்ளன்!
பரதேசி குப்பை!
கையேந்தி........!
பரவாயில்லை!
எனக்கான கேள்விகள் இதுதான்!!
மகனின் வாயினுள்!
துப்பாக்கி நுளைத்து - அவன்!
தலை சிதறிய பின்னும்!!
மகளின் பெண்மையை!
ஆமிக்காரன் அழித்து!
கொன்று விட்ட பின்னும்!!
மனைவியை!
உலக்கை எடுத்து!
ஓங்கி அடித்து !
கொலை செய்த பின்னும்!!
அத்தனையும்!
என் கண்முன்னே!
நிகழ்த்திய பின்னும்!!
எனக்கான இருப்பு.............!
பரவாயில்லை.!
!
-- கோகுலன்.!
ஈழம்

விடாது கொத்தும் பாம்பிலிருந்து

எஸ். ஹமீத்
விடுதலை பெற ஒரு வேண்டுகோள்...!!
ஓர் ஊழின் உக்கிரத்தில்...!
நரகத்தின் மையத்திலிருந்து பீறி எழுந்து!
அக்கினி மழையாய்க் குமுறித் தலை வீழும்!
செங்கங்குகளில்...!
சூரியனுருகி வழிந்த ஈயத் தரையினில் பாதம் !
எரிந்து கருகும் கொடிய கொடூரத்தின் கோரங்களில்...!
ஏதுமறியா இளம் பிஞ்சுக் குழந்தை;!
எடுத்தொரு நிழலில் கிடத்திட....!
யாருமில்லை...!!
சுற்றி நின்று பேய்கள் அலறும் கர்ண கடூரத்தில்!
எதிரொலிக்கும் பட்ட மரங்களின் உக்கிப் போன ஆணி வேர்கள்;!
இருளில் இருள் கரைந்த இரவாய்....கருப்பில் கருமை கரைத்த !
கருப்பாய்...!
விழி சிவந்த ஆந்தைகள் வழிதவறிப் பதைக்குமொரு நிசியில் !
பசித்துத் தவிக்கும் கிளிக் குஞ்சுக்கொரு!
பருக்கைப் பழம் தர....!
யாருமில்லை...!!
சிங்கங்களும் சிறுத்தைகளும் இளைப்பாறும் கரையில்... !
யானை இரத்தம் குடித்து இறுமாந்த முதலைகளைச் !
சர்ப்பங்கள் சப்பித் தின்னும் பாழ் குளத்து மேலே !
இரும்புச் சிறகடித்து இரையும் வல்லூறுகளின் வட்டமிடலில்...!
தாவித் தண்ணீரில் வீழ்ந்த குட்டி முயலின் !
செவி பிடித்துத் தூக்கியதன் உயிர் காக்க...!
யாருமில்லை...!!
ஒடுங்கிய கூட்டுக்குள் தேள் கொட்டக் கொட்ட !
வெளியேற வழியற்றுத் துடிதுடிக்க அலையும் !
சிட்டுக் குருவியின் உயிர் வலி போக்க...!
யாருமில்லை...!!
பிரபஞ்சப் பெரு வெளியில் !
இலையுமற்று கிளையுமற்ற மொட்டை மரமாய் !
தன்னந் தனியேயொரு ஒற்றை மரமாய் !
புழுத்துப் போனதான பக்க வேர்களின் தாங்கலில்...!
ஓயாமல் உள்ளிருந்தரித்துக் குடையும் !
வேதனைப் பூச்சிகளின் விளையாட்டில் நொந்தும் நொய்ந்தும்..!
பிணமாகி ரணம் தீர்க்கும் பேராவற் பொழுதுகள்!
மரணத்தை யாசிக்கும் ரண மனதின் விம்மல்கள்...! !
சம்மட்டியால் அடிக்கப்படும் !
ஆண் விதையாய் இதயம்...!
சவரக் கத்தியால் அறுக்கப்படும்!
பெண் முலையாய் சிரசம்...!
வாய் திறந்தரற்ற முடியா வதைகளில்!
மௌனக் கதறல்...! ஊமை ஒப்பாரி...!!!
சற்றேனும் அடங்காமல் கணந்தோறும் வியாபிக்கும்!
விகார வேதனைகளின் மூர்க்கத் தழுவல்களில் !
முதுகு வளைத்து மெதுவாய் நகரும் வயோதிப நாழிகைகள்...!
முகம் கூனி மனம் குறுகப் புரண்டெழும் இயலாமைப் பேரலைகள்...!!
பிரார்த்தனைகளும் களைத்துஇ விட்டு விடெனப்!
பிரார்த்தித்துத் தப்பித்த வேகத்தில் தறிகெட்டோடிட...!
இருண்ட சூன்யத்துள் மருண்டு மிரண்டோர்!
ஒற்றை ஒளிக் கீற்றுக்காய் உருண்டு புரண்டு...அட-!
கடவுளின் கணணியிலும் வைரஸ் தாக்கமோ...?!
கோரத் தீ கொடிது...கொட்டும் தேள் கொடிது...!
கொள்ளை நோய் கொடிது...பிள்ளை சா கொடிது...!
போர்கால வெடி கொடிது...போகாத மிடி கொடிது...!
கார்கால இடி கொடிது...கண்பறிக்கும் மின் கொடிது...!
பாரவண்டி தலையேறிப் பலிகொள்தல் கொடிது கொடிது....!
பாரழிக்கப் பொங்கிவரும் பேரலையும் கொடிது கொடிது...!
ஆரமுதில் விஷம் கலந்து அருந்துதலும் கொடிது கொடும்!
அரக்கர்களின் ஆட்சியிலே அவதியுறல் மிகக் கொடிது...!
இத்தனை கொடிதுகளும் இன்னும்பல கொடுமைகளும் !
இணைந்தொரு கடன் பாம்பாயாகி-!
உச்சி முதல் பாதம்வரை பிணைத்து!
ஓயாது கொத்துகின்ற வலி அறிவர் யாரோ...?!
எதற்கிந்த மூச்சு...? எதற்கிந்த வாழ்வு..?!
இல்லாளும் வேண்டாத - ஈன்றவளும் விரும்பாத!
இல்லானுக் கேனிந்த உலகு...??!
இக்கணமே சா வந்து !
எனையழைத்துச் செல்வதற்கு-!
இதயமுள்ள சான்றோரே..!
இருகரங்கள் ஏந்திடுங்கள்...!
இறைவனிடம் வேண்டிடுங்கள்

புன்னகை

வைகறை நிலா
வார்த்தைகள்!
ஏதுமின்றி!
அன்பை வெளிப்படுத்தும்!
அழகான மொழி.!
!
என் இதய வானில்!
------------------------!
என் இதய வானில்!
அன்பெனும் பறவைகள்!
என் இதய கடலில்!
அன்பெனும் அலைகள்!
என் இதய தோட்டத்தில்!
அன்பெனும் மலர்கள்!
என் இதய வீட்டில்!
அன்பு நிறைந்த மனிதர்கள்!
- வைகறை நிலா

விசும்பும், தொலைநோக்குதலும்

வ.ந.கிரிதரன்
வ.ந.கிரிதரன்!
தொலைநோக்கிகள் தொலைவுகளை!
நோக்க மட்டும்தானென்று யார் சொன்னது?!
இருப்பியங்குதற்கும் இங்கவை!
இருக்கும் அதிசயந்தானென்ன!!
எனக்கு நினைவு தெரிந்த!
நாளிலிருந்து!
-முற்றத்தில் அப்பாவின் 'சாற'த்தொட்டிலில்!
மல்லாந்திருந்து இரசித்த அன்றிலிருந்து -!
நானும்!
தொலைவுகளை இதனூடு!
மேய்ந்துகொண்டுதான் வருகின்றேன்!
ஒருவித அறிவுப் பசிகொண்டு.!
அடங்கவில்லை அந்தப் பசி!
இன்றுவரை.!
இருந்தும் பால்வீதிகளில் பயணித்தலிலுள்ள!
ஆர்வம் மட்டும் அணைந்திடவில்லை.!
ஒவ்வொருமுறையும் வியப்புடனும், ஆர்வத்துடனும்,!
மர்மங்களை அவிழ்த்துவிட முடியாதாவென்றொரு!
நப்பாசையுடனும் நானும்!
முயன்றுகொண்டுதானிருக்கிறேன்; தொலை நோக்கிக்!
கொண்டுதானிருக்கிறேன்.!
ஓடு 'சடசட'க்கக் கொட்டும் மழைபோல்!
என் நெஞ்சு கவர்ந்த மேலுமொரு!
விடயமிது.!
எத்தனைமுறை பெய்தாலும் அலுக்காத மழைபோல்!
எத்தனைமுறை பார்த்தாலும் அலுக்கவில்லை!
எனக்கு.!
நீண்டு,கவிந்த இரவு.!
வியாபித்திருக்கும் விரிவிசும்பு.!
இயன்றபோதெல்லாம்!
நோக்கிக் கொண்டிதானிருக்கின்றேன்.!
இருக்கும்வரை நோக்கிக் கொண்டுதானிருப்பேன்.!
தொலைநோக்கிகள் தொலைவுகளை!
நோக்க மட்டும்தானென்று யார் சொன்னது?!
இருப்பியங்குதற்கும் இங்கவை!
இருக்கும் அதிசயந்தானென்ன

தமிழுக்கு அமுதென்று பேர்

வை. அண்ணாஸாமி
அழிவிலாத் தமிழே, குறுமுனி ஈன்ற!
குழவியே, குன்றா இளமையொடு, ஆழம்நிறை!
மொழியின் இருநூற்று நாற்பத்தே ழெத்தில்!
அழகான 'ழகரத்தில்' திகழ்பவளே.!
ஏடுகளில் ஏற்றம் பெற்றாய் அன்று.!
நாடுபல கடந்தும் உன்னை நாடுவோர்க்கு!
அன்பினைப் பொழியும் தாயாய்க் காத்து,!
இன்புறச் செய்து மகிழ்பவளே.!
மொழியும் போதும், மொழிந்த பின்னும்!
எழில் கூட்டிய உள்ளங்கள் எழுச்சியிலே;!
பாடுபட்டு உழைக்கும் உழவனின் நிலம்!
மிடுக்காய் விளைவது போலன்றோ?!
தாய் வழி வந்த அன்னையே!!
தோய்ந்த தேன்கனிச் சுவையை ஓயாமல்!
உண்ணும் இச்சேய்கள், பார்மொழி இதுவெனப்!
பண்ணுவோம்; வாழ்த்தி வழிநடத்து

விலை கம்மியாய் ஒரு ந(ர)கர அறை

செந்தமிழ், சென்னை
மலை முகடுகளை!
மேகங்கள் உரசிச்செல்வதுபோல!
தொட்டு உரசும் கூரை!
நெருக்கத்தைப் பறைசாற்றி நிற்கும்!
ஒற்றை அடுப்பின்!
சமையல் மேடை!
படைசூழ்ந்த !
எதிரி முகாமினைப் போல்!
அடுக்குகளால் மறைக்கப்பட்ட!
ஒற்றைக் கல்சுவர்!
கசியும் பனிப்பொழிவும்!
மென்சரத் தூறலும் !
உச்சிப் போதின் பகலவனும் !
கைகுலுக்கிச் செல்வர்!
அவரவர்களுக்கான நேரங்களில்... !
நாம் விடும் மூச்சில்!
உமிழ்ந்த வெப்பம்!
அறைசுற்றிக் கிடக்கிறது !
சீக்காளியைப் போல!!

நிகழ்வுகளின் இறந்தகாலங்கள்

முத்துக்குமார்
கவிதைகளால் புணரப்படும் சுவை அறியாத!
உன்னுடனான என் தோழமை!
என் கவிதை வரிகளை எரித்ததினாலேயே!
உருவானது...!
நமக்குள்ளான நிகழ்வுகள் பற்றிய என் குறிப்புகள்!
எல்லாம் நம் தோட்டத்தில் புதைக்கபட்டன!
எனினும் ரகசியமாக நான் எழுதிய குறிப்புகளின்!
வார்த்தைகள் எல்லாம் உன்னாலேயே சிருஷ்டிக்கபட்டன...!
நம் நிகழ்வுகளின் குறிப்புகளில் எல்லாம்!
கவிதைக்கான வார்த்தைகள் கவனமாக தவிர்க்கபட்டிருந்தன...!
வெளிச்சம் குறைவான மாலை நேர சந்திப்புகளின் இறுதியில்!
நெடிய முத்தங்களுடன் பிரிவோம்..!
நான் தனித்து நடக்கும் இரவுகளின் கவிதைக்கான வார்த்தைகள்!
என்னுடன் இருந்திருந்தன...!
ஒரு கோடையின் இறுதியில் வேட்கைகளின் நிஜத்தில் நாம்!
திளைத்திருந்த மாலையில் நம் தோட்டத்தின் எல்லா குறிப்புகளும்!
கவிதைகளாக மலர்ந்திருந்தன...!
பிறகு நெடுநாட்கள் நாம் சந்திக்கவில்லை...!
தனிமையில் சேர்ந்திருந்த வார்த்தைகளின் கனம் கூடி மழை பொழிவின் உச்சத்தில்!
நம் குறிப்புகளின் இருந்து கவிதைகள் தம்மை தாமே உருவாக்கி கொண்டன!
முடிவுறாத ஒரு கவிதையின் முதல் வரியை போல!
ஒவ்வொரு கோடையின் இறுதியிலும் மழை பொழிகிறது