வாழ்க்கையை வாழ முடியுமா? - ஆ.மணவழகன்

Photo by Jr Korpa on Unsplash

ஆ. மணவழகன் !
!
பயணத்தில் !
பக்கத்து இருக்கையாளரிடம் - நட்பாய் !
புன்னகையை உதிர்க்க முடியுமா? !
தாய் தோளில் சாய்ந்து !
தன்னுலகம் இதுவென !
கண்ணுறங்கும் குழந்தை, !
மன்பதையில் முதல் அதிசயம்... !
மனதில் வியக்க முடியுமா? !
பூத்துக் குலுங்கும் மலர் !
இப்புவியில் மற்றுமோர் அதிசயம்.. !
புரிந்து பூரிக்க முடியுமா? !
ஆடும் மயிலல்ல... !
அண்டங் காக்கையையும் !
அழகென ரசிக்க முடியுமா? !
பௌர்ணமி நிலவல்ல... !
அமாவாசை இரவையும் !
ஆழ்ந்து அனுபவிக்க முடியுமா? !
இன்ப நிலையல்ல... !
துன்பச் வழலிலும் !
சிரிக்க முடியுமா? !
இருக்கும் இருப்பல்ல... !
இல்லாத நிலையிலும் !
இயன்றதைக் கொடுக்க முடியுமா? !
காதலும் காமமும் !
கருத்தில் வேறல்ல... !
கண்டு தெளிந்திட முடியுமா? !
எது நடக்கிறதோ !
அதை அதுவாக !
அப்போதே வாழ்ந்துகாட்ட முடியுமா? !
நேற்றைத் துறந்து !
நாளை மறந்து !
இன்றில் திளைக்க முடியுமா? !
மழைச் சாரலிலும் !
மாலை வெய்யிலிலும் !
உடலோடு மனதாலும் நனைய முடியுமா? !
தளிரில் மட்டுமல்ல !
சருகிலும் தத்துவமுண்டு, !
படிக்க முடியுமா? !
இளமைக்கு மட்டுமல்ல !
முதுமைக்கும் அழகுண்டு !
கலையோடு காணமுடியுமா? !
முயன்று பார்! !
முடியும் என்றால்... !
நீ !
வாழ்ந்து கொண்டிருக்கிறாய்! !
!
manavazhahan
ஆ.மணவழகன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.