தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

ஊசலாடுகிறதே உயிர்

கலைமகள் ஹிதாயா றிஸ்வி
சுடு காட்டுத் தணல் வீசும்!
இந்த அக்கினிக் கிடங்கை!
இன்னும் நாம் காவிக் கொண்டு ....!!
வெற்றுடம் பெங்கும்!
பயவுணர்கள் உரசுவது!
இந்த நூற்றாண்டில் தான்!
கையினில்!
உயிரைப் போத்தியும்!
ஏதோவொரு அந்தரிப்பில்!
ஊசலாடுகிறதே உயிர்!!
சதைசப்பி உமிழ்ந்து!
குதறுவதான கனாக்களோடு!
புரளுகிறது இரவுகள்!
மீந்திருப்பவைகள்!
விழி நீர்க் கசிவுகளும்!
மாயைகளுமாய்.....!
ஒரு மித்துக் கூவுவோம் இனி!
சமாதானமென!
இல்லையேல்!
சமாதானக் காற்றினை!
உள் வாங்கிட!
அண்டவெளி சென்றாலும்!
முண்டங்களைத் தானே!
கொண்டு வரும்!
வெண்புறாக்கள்!!!

அன்னையர் தினத்தில்

சத்தி சக்திதாசன்
அன்பெனும் ஆலயத்தில்!
பாசமெனும் தீபம்!
ஏற்றி வைத்ததோ!
அன்னையெனும் தெய்வம்!
அம்மாவின் அரவணைப்பில்!
அடங்கும் மனத்துயரம்!
அகிலத்திலில்லை அன்னைக்கு!
ஈடாய் ஒரு செல்வம்!
பாசத்தைப் பொழிவாள்!
பலனொன்றும் வேண்டாள்!
நேசத்தில் மலர்வாள்!
நெஞ்சத்தில் பூத்திடுவாள்!
கண்ணீரைக் கண்டால்!
கலங்கித் தவித்திடுவாள்!
உடல் கொஞ்சம் துவண்டால்!
உயிர் வாடித் துடித்திடுவாள்!
பட்டம் பெற்றவரோ அன்றிப்!
பாராரியாய்த் திரிபவரோ!
தெய்வமவள் கண்ணுக்கு!
தெரிவதில்லை வேறுபாடு!
தானுண்ண மாட்டாள்!
தன் சேய் உண்ணுமட்டும்!
கண்மூடமாட்டாள் அவள்!
கண்மணி கண்ணயருமட்டும்!
ஆண்டவனின் படைப்பினில்!
அற்புதம் உண்டென்றால்!
அன்னை என்னும் அந்த!
அதிசயம் ஒன்றுதான்!
என் தாயின் தியாகத்தை!
ஏற்றி நான் போற்றினேன்!
மகனுடைய நலனுக்காய்!
மகத்தான சேவை செய்தாள்!
தந்தையாக நானாகி!
தத்தளித்த வேளையிலே!
தன் மகனுக்காய் உருகிய!
தாரத்தின் பெருமையுணர்ந்தேன்!
அன்னையர் தினத்திலே!
அவளுடைய நினைவு காக்க!
அம்மாவாய் திகழ்கின்ற என்!
மனையாளின் புகழ் சொல்வேன்!
அன்னையர் தினமதிலே உங்கள்!
அன்புத் தெய்வங்களின் நினைவாக!
அருமை நண்பர்களே நீங்கள்!
மணந்தவளை போற்றிடுவீர்!
அன்னையர் தினத்தினில்!
அழியாத உண்மை சொல்வேன்!
மாதா மட்டும் அன்னையல்ல எமை!
மணந்த மனையாளும் அன்னைதான்!
!
-சக்தி சக்திதாசன்

இருட்டு

இரா.அரிகரசுதன்
அவள்!
கனவுகளுக்கு!
கள் ஊற்றிக்கொண்டு!
உலகெங்கும் தன்!
மெல்லியதொடுதலோடு!
மதர்த்து திரிகிறாள்...!
கலைந்துபோன கனவுகளின்!
சுமையில் களைத்துப்போன!
இதயங்களை!
ஒரு பனிக்கட்டிக் கத்தியின்!
கூரிய முனை கொண்டு!
இரக்கமற்று பிளந்து செல்கிறாள்...!
ஒரு வண்ணத்துப்பூச்சியின்!
வயிற்றிலிருந்து வெடித்து!
பறக்கும்!
பல வண்ணங்களைப் போல!
கவிதையை காதலித்துக் கிடப்பவர்களின்!
கருவாக உறவு கொள்கிறாள்...!
காற்றோடு கலந்துபோன!
தொப்புள்கொடிகளின்!
இரத்தவாடையில்!
என்னோடு பறையாடிக்கொண்டே!
அவள் சிரிக்கிறாள்...!
பறையொலி கிளர்ந்து!
எழுகிறது எங்குமாய்!
சிரித்துக்கொண்டேயிருக்கிறாள்!
சிந்துகிறது தீ!
விரவி பரவி!
தீண்டுகிறது தீ!
தளிர் துளிர் இலை பூ பிஞ்சு!
காய் கனி தழை என!
எங்கும் தீ தீ!
பெருந்தீ

தோழமையுடன்

அன்பாதவன்
வயலின் ஸ்வரமோ குழலின் கீதமோ !
கருப்புத் தொலை பேசியும் வண்ணமானது !
குரல் கேட்டதில் !
சந்தோஷத் தசைகள் விரிய !
ஒரு பெரிய புன்னகையுடன் !
வரவேற்பு இனித்தது. !
எத்தனை ஆண்டுகள்..... !
எங்கே தொலைத்தோம் !
நினைத்திருப்போமா ..... நிகழ்ந்ததின்று !
என்றோ அறுந்ததை தேடி தொடர்ந்ததில் !
' மாறாத அலைவரிசை!' மகிழ்ந்ததுள்ளம் !
புரிகிறது ...தோழி !
நதிநீர் வரும் / வற்றும் !
உயிரோடு இருக்கிறது ஊற்று. !
( அமுதாவிற்கு) !
அன்பாதவன்

போராடல் பற்றி

மாக்ஸ் பிரபாஹர்
உயிரழியும் வலி உணர்ர்து பார்!
உறவுகள் பிரியும் பொழுதுகளின்!
உணர்வுகளில் வீழ்ந்து பார் !
உடன்பிறப்புகளைத் தொலைத்த!
மனதொன்றின்!
உடைந்த நிலையேகிப்பார். !
உன் மகன் அல்லது மகள்!
கடத்தப்பட்ட கணங்களின் மேல்!
கிடந்து பார்!
இணையதைப் பிரிந்த!
இழவு வீட்டின்!
வெறுமை தின்று பார்.!
அம்மையப்பரை இழந்த!
அநாதைக் குழந்தைகளின்!
ஆழ்துயர் மொழிகளில் வாழ்ந்து பார்!
கொடும் வதைகள் தரும்!
அவசர சட்டங்களின்!
சிக்கலுக்குள் சிதைந்து பார்.!
நன்மை, தீமை - இன்ப துன்பமென!
நாள்தோறும் உடனிருந்த - தோழனைத்!
தொலைத்துருகும் நிமிடங்களில் நின்று பார்!
எறிகணைகள் ஏவி விடப்பட்ட!
நிலத்திடை நின்று - அவை தரும்!
அசுர வலிகளை அனுபவித்துப் பார்!
கைகளை, கால்களை அன்றேல்!
உடலதன் வேறு உறுப்பகளை!
செல்வீச்சில் இழந்து செத்துப்பிழைத்துப் பார்!
சமனிலை பெறா சமூகத்தில்!
ஓரங்கட்டப்பட்ட ஒருவனாய்!
சஞ்சரித்துப்பார்!
அகதி வாழ்வில்!
ஆகாரமின்றி முடங்கி!
அவதியுற்றுப் பார்!
நொருங்கிய வாழ்வின்!
நோவுகள் தாளாது - நீயுங்கூட!
போராட முனைவாய்

தோழமை கனா

அறிவுநிதி
“தோழமை கனா”!
கவி ஆக்கம்: அறிவுநிதி!
காலம் பரிசளித்திருக்கிறது!
உன் அன்பை அள்ளி!
என் உயிரெங்கும் பூசிக்கொள்கிறேன்!
உன் புன்னகை!
என் உடலாகிறது!
பசிபோக்குகிறாய்!
குழந்தைபோல!
பாவணைகளால் - ஒரே!
தலையனையில் தூக்கம்!
முகங்கள் மட்டும் வேறு வேறு திசைகளில்!
தூக்கம் மீறிய நட்பு விழிசேர்கிறது!
உன் கூந்தலிலிருந்து!
பூக்கள் உதிர்கின்றன!
உதிரும் பூக்களை!
நுகர்ந்து கொண்டே சேகரிக்கிறேன்!
பூக்களின் தாயாய் - என்னை!
ஆசிர்வதிக்கிறாய்!
விலகும் இமைகளிலிருந்து!
வாழ்க்கை யதார்தமாகிறது!
எத்தனையோ இயலாமைகளுக்கு முன்!
அரவணைத்து விட்டு போகிறது!
உன் விசாரிப்பு...!
கவி ஆக்கம்: அறிவுநிதி!
006590054078

கற்பனையில் வாழ்வு.. உறவு

கலாநிதி தனபாலன்
01.!
கற்பனையில் வாழ்வு!
-----------------------------!
ஊனின்றி உறக்கமின்றி!
உள்ளதையும் தொலைத்துவிட்டு!
நிசத்தினையும் நினைக்காது!
நினைப்பினிலே வாழுகின்றார்!
நித்திரையும் இவர்க்கில்லை!
நிமித்திகர் சொன்னதையே!
நிசமென்று நம்புகிறார்.!
மரத்தடியில் இருந்தவனை!
மகானென்று நம்பி!
மனத்தினையும் தொலைத்துவிட்டு!
பணத்தினையும் பறிகொடுத்து!
பரிதவித்துப் போகின்றார்!
இன்றிருந்த நிலையினையும் இழந்துவிட்டு !
இல்லாத ஒன்றுக்காய்!
இப்படியேன் பரிதவிப்பு!
கண்டதையும் கேட்டதையும்!
கட்டாயம் நடக்குமென்று நம்பி!
கடன்பட்டு வாழுகிறார் !
காலமெல்லாம் கற்பனையில் !
நிசத்தினை நினைத்திடா!
நிழல்களின் வாழ்வது!
நிச்சயம் மாறணும்!
அறிவினில் ஆசை அமிழ்ந்திடின்!
அஃது சாத்தியமாயினும்!
சாத்திரி சொன்னது சத்தியம் என்றுதான்!
‘சா’ வரை நம்புவாராதலால்!
சாத்தியமாகுமோ?!
02.!
உறவு!
--------!
ஆயிரம் ஆயிரமாய்!
அள்ளிக் கொடுத்தேன்!
வெள்ளிப் பணத்தை!
அங்கிங்கெனாதபடி!
எங்கும் நிறைந்தது!
உறவு.!
காலம் கரைந்தது!
காசும் கரைந்தது!
காற்றெனப் பறந்தன!
கரையெலாம் இருந்த உறவுகள்!
தேற்றி எனை நான்!
திரும்பு முன்னே!
காலம் காட்டி நின்றது!
காயத்தின் சுவடுகளை.!
!
-கலாநிதி தனபாலன்

காதல் வேர்

அணு
ஒரு தலை ஆண் காதலில் பழகிய சமுதாயம் !
பெண் காதல் காவியம் படைக்கும் அதிசயம் கண்டால் என்ன?!
இரவுக்காக வாழ்ந்துவிட்டு இறந்து போகும்!
விட்டில் பூச்சியின் ஆயுள் போதும் எனக்கு !
உன் உறவுக்காக வாழ்ந்துவிட்டு இறந்து போக.!
இதுவரை தோற்றதில்லை யாரிடமும்!
உன் கடைவிழிப்பார்வையில் தோற்றுப்போவேன்!
என்று கனாவும் கூட கண்டதில்லை.!
'உனக்காகவே வாழ்கிறேன்' என்று நீ கூறிய போதும் !
பொருந்தாக் காதல் என்று கூறி பொய்யாய் தேற்றிக் கொண்டு !
திரையிட்டுக் கொண்டேன் இதயத்திற்கு.!
இன்று நீ விலகி நிற்க, தடைகளை தாண்டி !
தேடி வருகிறேன் உன் இதயவாசல் நோக்கி.!
இதயவலி என்பது உடல் சார்ந்த வலி என்றே நினைத்திருந்தேன்;!
இதயவலி என்பது நேசித்தவரை இழப்பதால் !
உண்டாகும் உயிர்வலி என்று அனுபவத்தால் !
உணர்ந்து கொண்டேன். !
உன்னைக் கடந்து போகையில் களவு போகிறேன் நான்.!
என் பேர் சொல்லி அழைக்கையில் உன் அடிமை ஆகிறேன் நான்.!
'இது உனக்கு' என்று தரும் போது மகுடம் அணிகிறேன் நான்.!
உன் பார்வை கிடைப்பதால் புதிதாய் பிறக்கிறேன் நான். !
ஒருமுறை பார்ப்பதுபோல்; மறுமுறை ஏற்கமாட்டாயா !!
உன் முன்னே!
எதையோ கேட்பது போல் நின்று ஒரு நொடியேனும் !
உன் விழித்திரைகளில் என்னைக் கண்டுபிடித்துக் கொள்வதில் !
கொள்ளை மகிழ்வு எனக்கு. !
நாம் இருவரும் இவ்வுலகை வலம் வர வேண்டும் !
தனிமையில் - நாம் மட்டுமே நம்மோடு;!
சொர்க்கம் கொண்டு வரும் உன் உறவோடு !
விளையாடித் திளைத்திருக்க வேண்டும். !
காதல் கொடியது என்று கொடி பிடித்து!
இன்று உன்னைப் பிடிக்க !
கை நழுவியது என் கொள்கை.!
யாரை நீ விரும்பினாலும் - நம்புவேன்!
நான் உன் தனித்துவம் என்று!!
உலகம் சுற்ற ஆசையில்லை!
காசு பணம் தேவையில்லை !
சொகுசு வாழ்க்கை பிடிக்கவில்லை !
மா, பலா இனிக்கவில்லை !
என்னை சிறைப்பிடித்து உன் !
இதயக் கூட்டினில் அடைத்துக் கொள்ளேன் !
வாழ்ந்துவிட்டு போகிறேன் இந்த ஒரு ஜென்மமேனும்.!
'ஸ்ரீராமஜெயம்' எழுத மாங்கல்யம் கிட்டும் என்றார்கள் !
உன் நாமமே ஜெயம் என்று சுவாசித்துக் கொண்டிருப்பதை !
எப்படி சொல்வேன் இந்த உலகிற்கு.!
மண ஆசை இல்லை - பிற ஆண்கள் !
பிடிக்கவில்லை.!
மன ஆசை உண்டு - அதில்!
உனக்கு மட்டுமே இடம் உண்டு. !
உன் மாற்றத்தால் வருந்தி வாடும் !
என் மனதின் நோயால் !
உடலில் பசலை படர்ந்திருப்பதை !
உணராமலா இருக்கிறாய்?!
ஒரே ஒரு முறை காதல் கண் கொண்டு பார்க்கமாட்டாயா !
ஏழு ஜென்மங்கள் வாழ்ந்து காட்டுவேன் உனக்காக.!
விண்ணில் பறந்தாலும் !
மண்ணில் புதைந்தாலும் !
என் ஜீவன் உன்னை மட்டுமே தேடும். !
என்னவனின் கூர்மை விழிகளே !
என் காதலை அவன் இதயத்திடம் சொன்னால் என்ன? !
சிந்தைகளை களவாடிய என் !
ஜீவனே, தேற்றுவாயா என்னை உன் காதல் மருத்துவத்தால்

அமுத விஷம்... தீவனம்

தீபா திருமுர்த்தி
அமுத விஷம்...! தீவனம் !
01.!
அமுத விஷம்...!!
---------------------!
முகக் கழுவலில்!
தெறிக்கும்!
துளிகளையும்!
பருகிக் கொண்டே!
நகக் கணுக்களும்...!
தாக நினைவு தாங்கி!!
மனச் சட்டை!
கிழிசளுக்குத் தையளிடும்!
நூற்பாலைக் கனவுகள்!!
முட்களோடு!
புஷ்பித்த செடியில்!
முணகலோடு!
விஷரோஜாக்கள்!!
காய்ப்பேறிய கணுக்களில்!
சுவை தளும்பும்!
மறுக்கப்பட்ட கனிங்கள்....!
விழுங்கிய யாவும்!
திமிருந்து படரும்!
பூசணிக் கொடியாய்!!
02.!
தீவனம் !
--------------!
உள்ளே உள்ளே !
இன்னும் !
இறுக கரம் பற்றி !
இழுத்து செல்கிறது !
உள்ளே !
மனசுரங்கம் !
வாழை மரக் கனியோன்று !
மா மாற விடை விழுங்குவத்திலே !
குறியுடன் !
ராவண தலைகள் !
காளிகாம்பாவின் !
கற்பனைக்கு எட்டா !
கரங்கலேன !
தாண்டியும் கூவிகிறது !
தீவிரம் !
ராமாயநங்களும் !
லட்சுமன பாதங்களும் !
இணைந்து கூத்திடிகின்றன !
பார்வையாளாரற்ற !
தேசம் !
வாழ்க்கை தீவனாத்தை !
ஆசை போதும் !
நிலவும்

கனவிலே வாழ்தல்.. கனவுலகில்

வேலணையூர்-தாஸ்
காத்திருக்கிறேன்!
01.!
கனவிலே வாழ்தல்!
-------------------------!
நிலவொளியில் பனைவெளியில்!
நீண்ட மணற்பரப்பில் காலாற நடப்பதாய்!
நண்பருடன்!
கவிதை கதை இலக்கியம்!
மனம் நிறைய பேசி மகிழ்ந்து களிப்பதாய்.!
பொங்கும் கடலலை குளித்து!
கடல்நுரை அள்ளி களித்து!
துய காற்றிழுத்து நுரையீரல் நிரப்பி!
சுதந்திரமாய் பறப்பதாய் !
எங்கும் மலர்ந்த முகமாய் நட்பொடு பேசி!
ஆண் பெண் சமநீதி அமர்ந்த தேசத்தில்!
அன்பொன்றே மொழியாய் அமைந்த வெளியொன்றில்!
இன்புற்றிருப்பதாய்.!
போட்டி பொறாமை வஞ்சகம் தான் நீங்கி!
புத்தம் புதிதாய் பூமியிலே பிறப்பதாய்!
என்னுள்ளே அடிக்கடி கனவு வரும்!
அந்த நிமிடம் மனது குது கலிக்கும்!
ஆனந்தம மேலோங்கி உயிர் பறக்கும்.!
மீண்டும் விழிப்புவரும்.!
நான்கு சுவருள் அகப்பட்டு!
நுரையீரல் காற்றுக்காய் ஏங்கும்!
எழுந்த அவசரத்தில் உயிர் இயங்கும்!
நகர வாழ்வில்!
இயந்திர வாழ்க்கையில்!
மகிழ்ச்சி தொலைத்த ஜடமாய்...!
!
02.!
கனவுலகில் காத்திருக்கிறேன்!
--------------------------------------!
உன் நினைவு நெருப்பில்!
தகிக்கிறது நெஞ்சம்!
பனியிலும் வேர்க்கிறது!
பாவை மேனி!
நிலவும் சுடுகிறது!
நீ அருகில் இல்லாமல்!
பாலும் கசக்கிறது !
உன் பார்வை பருகாமல்!
மனமெங்கும் குளிர் நிறைக்கும்!
உன் புன்னகையில் தோயாமல்!
நீர் இன்றி வாடும் பூச் செடியாய்!
நீர் இன்றி துவள்கிறது மனது!
விழி வாசல் முடி!
கனவுலகில் காத்திருக்கிறேன்!
கனவிலாது வந்து !
என் காதலுக்கு நீர் ஊற்று!
கனவில் உன் முகம் கண்டு மகிழ்கிறேன்!
கருகும் என் உயிர் மீட்கிறேன்