தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

கண்ணாடிச் சிதறல்கள்

அவனி அரவிந்தன்
வீட்டின் முன்பகுதில் நட்டிருந்த மூங்கில்கள்!
பூவிட்டிருந்த ஒரு அதிகாலைப் பொழுதில்!
கிரணங்கள் தீட்டிய சித்திரம் போல நீ வந்திருந்தாய்!
என்னைத் தவிர மற்ற அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்த!
உன்னைப் பிரதியெடுக்க பிரயத்தனப்பட்டன!
என் வீட்டின் நிலைக் கண்ணாடிகள் அனைத்தும்!
ஆனால் கையலம்பும் குழாய்க்கு மேலே தொங்கும்!
பழைய கண்ணாடிக்கு மட்டுமே அன்று யோகம் போல!
உனக்கு அந்தக் கண்ணாடியை!
நினைவிருக்குமா எனத் தெரியவில்லை!
பச்சை நிறத்தில் சட்டம் கட்டியிருக்கும்!
ஓரங்களில் லேசாக உப்புப் படிந்திருக்கும்!
நேற்று முன்தினம் அந்தக் கண்ணாடி!
அதை மாட்டி வைத்திருந்த!
ஆணியில் இருந்து கழன்று!
கீழே விழுந்து தெறித்தது...!
இத்தனை நாட்களாக!
உன் முகத்தை!
நினைவுகொள்ள முயன்று!
தோற்றதால் இருக்கலாம்...!
சிதறிக் கிடந்த சில்லுகள் ஒவ்வொன்றையும்!
உற்றுப் பார்க்கிறேன் - அவை!
உன்னைத் தவிர வேறு எதையெதையோ!
பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன

நாட்கள் மெலிந்தன

பர்ஸான்.ஏ.ஆர்
அனைவரும் போல நீயுமானாய்.!
பகல்களை சூரியனிடமிருந்து பிடுங்கி!
அனைத்தினையும் இருளாக்கிடும் விடயமாய்!
நான் இதை நினைத்திருக்கவில்லை.!
என்னிலைகளை புரிந்து கொண்டு!
காலமெல்லாம் நீ பேசிய அனைத்தையும்!
மறந்து!
உன்னிலை காப்பிற்காய்!
துக்கியெறிந்து முகம் மாற்றி!
நீண்ட வெளியில் எதுவுமற்று என்னை!
உன்னால் நிரப்பிவிட்டு சென்றாய்.!
இருப்பினும்,!
நீயும் உன் நினைவுகளும்!
குளிர் காலத்து உன் சிறகுகளும் போதும்.!
என்னை முந்தியடித்து!
உன்னோடு எனக்குள் வாழ்வேன்.!
நாட்கள் மெலிந்து கிடக்கின்றன.!
!
-பர்ஸான்.ஏ.ஆர்!
01.06.2008

மனிதனைத் தேடி

சத்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன் !
!
களைத்து விட்டேன் ஏனொ இது !
முடிவிலாத பயணமன்றோ ! !
பாதை நீண்டு !
கொண்டேயிருக்கிறது !
பயணம் தொடர்ந்து !
கொண்டேயிருக்கிறது !
தேடும் அவனைக் !
காணவவேயில்லை ! !
அன்பைக்கொடு உடனே !
அவனைக் கண்டுபிடித்து விடலாம் !
என்றவன் ஒருவன் !
கொடுத்த அன்பையும் !
தொலைத்து விட்டு !
ஏழையாய் இன்று நான் !
ஆனாலும் !
அவனைக் காணவில்லை !
பணத்தை அள்ளியெறி !
காலடியில் விழுந்திருப்பான் !
அறிவாளி ஒருவன் !
அறிவுரை சொல்லிட்டான் !
இருந்ததை இழந்தோர் !
செல்வந்தனானேன் !
இன்னமும் அவனெனக்கு !
அகப்படவில்லை !
வெளிச்சத்தில் பார்த்தால் !
வெளியே வந்திடுவான் !
இருட்டினில் இருந்தவன் !
இனாமாய் வழங்கிய புத்திமதி. !
பகல் போல வெளிச்சத்தை !
பாய்ச்சியும் கூட !
கண்களின் ஓரத்தில் !
காணவேயில்லை அவனை !
களைத்து விட்டேன் !
கடைசிப் படியை எட்டியும் விட்டேன் !
தென்படவே மாட்டான் எனத் !
தெளிந்து நானும் !
உலகில் அவன் இல்லவேயில்லை என !
உணர்ந்து கொண்டே தூங்கும் போது !
தோளில் ஒரு கை !
தோழமையாய்த் !
தொட்டது !
தேடும் போது என்னைக் !
காணமாட்டாய் என்னை !
ஏனெனில் !
நீ தேடியது !
எந்தன் நிழலையே !
சிரித்தபடியே என்னருகே !
மனிதன் நின்றான்

வேண்டாம் யுத்தம்

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்
வேகத்தைக் குறைத்து !
வீதித்தடை தாண்டி !
வலதுபக்கம் திரும்பிப்பார்க்கிறேன் !
வெறிச்சோடிக் கிடக்கிறது 'செக்பொயின்ட்'. !
!
செக்குமாடுகள் போல் !
சுற்றிச் சுற்றிவந்த !
ஒருவரையும் காணவில்லை - அந்த !
ஒரு கருப்பு நாயையும்தான். !
நான் தினமும் வேலைக்குச்செல்லும் !
நன்கு பரிச்சயமான பாதைதான். !
பலமுறை வானை நிறுத்திவிட்டு !
பல்லிழித்து அடையாளம் காட்டி, !
அனுமதி கிடைத்ததும் !
அடிதடுமாறி தப்பிப்பிழைத்தோ மென !
மீண்டும் வாகனத்தில் ஏறி !
மறைந்ததும் இங்குதான். !
தாய் தந்தை தாரம் !
தம்பி தங்கை அண்ணா !
மாமன் மாமி மச்சான் !
மதினி மக்கள் உறவுகளெல்லாம், !
நலிந்து நடைப்பிணமாகி !
நாறிவிட்ட நிலையில் !
நடை பயின்று !
நல்லபல பண்புகளுடன் !
மீண் டெழுவதைக் !
காணும் போது, !
வேண்டாம் வேண்டாம் !
மீண்டுமொரு யுத்தம் !
எம் ஈழத்திருநாட்டில் !
இனி மேலும்! !
- எஸ். ஏ. ஹப்பார்

தூரமும் பக்கம்தான்

பட்டுக்கோட்டை தமிழ்மதி
இரும்பும் பித்தளையும் !
அருகருகே இருந்தால் !
அரித்தல் போன்ற !
வேதிமாற்றம் நிகழுமாம். !
பஞ்சும் நெருப்பும் !
பக்கம் பக்க மிருந்தால் !
பற்றிக்கொள்ளுமாம். !
காந்த !
எதிர் எதிர் துருவங்கள் !
கிட்ட கிட்ட யிருந்தால் !
ஒட்டிக்கொள்ள !
இழுத்துக்கொள்ளுமாம். !
வா... !
அவை போல !
இருந்துப் பார்ப்போம் !
என்னாகிறது என்று பார்ப்போம் !
என்றேன். !
என்றாலும் !
ஒருநாள்தான் புரிந்தது. !
நாம் விலகி !
தூரத்திலிருந்தாலும் !
அருகருகே யிருந்த !
அவைகளைவிட !
அதிக சீக்கிரமாகவே !
இணைவதை எண்ணித்தான் !
இருந்திருக்கிறோம் என்பது !
ஒரு நாள்தான் புரிந்தது. !
!
- பட்டுக்கோட்டை தமிழ்மதி !
(சிங்கப்பூர்)

நம் கிழவிகள்

வீ.கார்த்திகேயன்
கால் கிலோ தோட்டினை!
காலம் காலமாய் அணிந்து!
காது தொங்கிப்போன நம் கிழவிகள்!
வெற்றிலைப் பாக்குகளோடு!
வாழ்வின் நினைவுகளையும்!
அசை போட்டபடி நம் கிழவிகள்!
அனுபவம் தந்த அன்பளிப்பாய்!
முகம் முழுவதும்!
சுருக்க சுவடுகளோடு நம் கிழவிகள்!
கற்பனை கதைகளாலும்!
நாட்டுப்புற நையாண்டிகளாலும்!
பேரப் பிள்ளைகளைக் கவர்ந்த நம் கிழவிகள்...!
வருங்காலம்!
இவர்களையும் அச்சில் ஏற்றும்!
ஏட்டில் எழுத்துக்களாக்கும்!
பண்டைய நாகரீகமெனும் தலைப்புத்தந்து!
படித்துப் பார்க்கச் சொல்லும் !
-வீ.கார்த்திகேயன்

கருஞ்சுவரில் குழாய் வரைந்து

கிண்ணியா பாயிஸா அலி
ஆவலை மின்னவிட்டவாறே!
இடியாய் வந்திறங்கியிருக்கிறது பெறுபேறு.!
எப்போதும் போலே!
எனக்கு மட்டுமில்லை நூறு விழுக்காடு!
முழுமைக்கான கரகோஷங்களுக்காய்!
நடனமாடிய விரல்களிலிருந்தே!
எனை நோக்கியும் நீள்கின்றன!
சுட்டு விரல்கள்!
இனியுமென்ன!
சுரண்டித் தெரியும்!
கடைக் கத்தரிக்காய் ஆகிற்றென்!
கற்பித்தல்.!
இல்லாத இடைவெளி வேண்டி!
கிளறப் படுகின்றன!
ஆவணக் கோப்புகள்.!
துவக்க வருஷத்தின்!
பேறு கால விடுமுறை நாட்களோ!
இல்லை!
நிறைந்து!
முந்தானைக்கு மேலாயும் கசிந்த!
செல்லக் குழந்தையின் கதறல் !
துடைத்த நிமிஷத் துளிகளோ!
மிகப் பெரும் நேரத் திருட்டாய்!
உணரப் படுகிற!
இக்காலங்களுக்குள்!
கணக்கில் வருவதேயில்லை!
அதற்கான பதிலீடுகள்.!
உண்ணப் படாமலேயே குவிந்தழுகும்!
பணக்கார வீட்டுச் சமையலறைபோலே!
பல ஆய்வறைகள்!
தூசித்துத் தூங்கையிலே!
கருஞ் சுவரில் குழாய் வரைந்து……!
காற்றிலேதான் செய்துவித்த!
பரிசோதனைகள் யாவுமே!
பயணப் பட்டிருக்குமா!
பரீட்சை விடைத்தாள் வரைக்குமென்ற!
வினாவுக்கு மட்டும்!
யாரிடமுண்டு விடை.!
இது எனக்கான நேரம்!
இரைச்சலாய் மேலெழும் கோபமாயோ!
இல்லை!
கண்ணீராய் வழியும் சாபமாயோ!
பதிலை எதிர்பார்த்திருந்த!
பதட்டமான கணங்களுக்குள்!
மிக மௌனமாகவே!
மீட்டிக் கொண்டிருக்கிறேன்!
பேரறியா அந்தச் சீனக் கவிஞனின் வரிகளை..!
நான் கேட்கிறேன் -மறக்கிறேன்.!
நான் பார்க்கிறேன்- உணர்கிறேன்!
நான் செய்கிறேன்- விளங்கிக்கொள்கிறேன்

அவிழ்.. உயிர் வளையம்

ந.மயூரரூபன்
01.!
அவிழ்!
------------!
தானாய் அவிழும் முடிச்சுகளில்!
முட்டித் துடித்துவரும் ஓலங்கள்!
என்காலடிகளைத் தேடி!
ஓடிவருகின்றன.!
அடக்கம் செய்யப்படாததாய்!
சாவறிவித்தல் கொடுக்கப்பட்ட ஓலங்களில்!
மரணத்தின் உறவினைக் காணமுடியவில்லை.!
எனது முடிச்சு அவிழும் பொழுதுகளில்!
அதன் உயிர்ப்பின் கூர்மையை அனுபவிக்கிறேன்!
ஓரங்கள் சீவப்பட்ட எனது காலடிகள்!
இரத்தத்திலே தோய்ந்திருப்பதாக!
அம்மா அழுகின்றாள்.!
நான் எனது மண்ணில் நடக்கிறேன்...!
வெளியெங்கும் சிவப்பாகும் காலத்தை!
நான் என சந்ததிக்காய் வரைந்து கொள்வதாக!
நீ சொல்வது எங்கும் கேட்கிறது.!
மண்ணின் முடிச்சுகள்!
உனக்குள்ளும் அவிழ்ந்து கொள்ளும்.!
விட்டு விடுதலையாகும்!
ஓலங்களின் தரிசனத்தினை!
அப்போது நீயும் வரைவாய்.!
02.!
உயிர் வளையம்!
-------------------------!
வார்த்தைகள் நெருங்கா!
வளையத்துள் எங்கள் உயிர்!
படுத்திருக்கிறது சோர்ந்து.!
நீயெறியும் சொற்கள்!
உணர்வுகளறுந்து அம்மணமாய்!
திசைகளற்று ஓடியலைகிறது.!
எங்களுக்கான சொற்களை!
எண்ணியெண்ணி அடுக்குகிறேன்!
உயிர் வளையத்துள்.!
ஒலிதின்னும் பேய்ச்சுழலொன்று!
புலன்மயக்கி ஓடித்திரிகிறது.!
உனதுமெனதுமான சொற்கள்!
உலர்ந்தபின் உடைந்துபோய்!
சத்தமற்று எரிகின்றன.!
ஒலியறுந்த நெருப்பினைப் பார்த்தபடியே!
படுத்திருக்கிறது எங்களுயிர்

பனிக்கோர் ... கால விரயம்

சிபி பாபு
பனிக்கோர் எச்சரிக்கையாய்...கால விரயம்!
!
01.!
பனிக்கோர் எச்சரிக்கையாய்...!
-------------------------------!
புல்லின் மேல் நடக்காதிர்!
கதிரவனுக்கும்!
தமி்ழ் தெரிந்திருக்குமோ?!!
அதனால்தான் தினமும்!
காலைப்பொழுதில்!
வந்துவிடுகிறான்!!
புல்லின் மேல் உறங்கும்!
பனித்துளிகளை எழுப்ப?!.!
02.!
கால விரயம்...!
-------------------!
இரவு நேர!
படுக்கைக்கு முன்!
கவியெழுத நினைத்து...!
அதன் நிமி்த்தம்!
யோசித்த காலங்கள்!
வீணாகிப்போனதே தவிர!...!
இந்த காகிதங்களும்,!
பேனா மைய்யும்...!
வீணாகிவிடவில்லை!!
ஏனெனின்!
சிறு கிருக்கல் கூட!
செய்ய முடியாததின் விளைவுதான்.!
!
-சிபி பாபு.!
sathishbabu(CP.BABU)!
13,tuas avenue 6,!
singapore

எந்தமிழ் நாடு

மு.கந்தசாமி நாகராஜன்
செந்தமிழ் நாடிது!
எந்தமிழ் நாடென்று!
ஏட்டினில் எழுதுகையில்!
இனிக்குதடா செந்தமிழா!.!
எந்தமிழ் நாடிதனில்!
எனக்கில்லா சுதந்திரத்தை!
எண்ணிப் பார்க்கையிலே!
எரியுதடா என் நெஞ்சு!!
சுதந்திரமும் குடியரசும்!
சுட்டெரிந்து போனதனால்!
சுடரில்ல விளக்குகளால்!
இருண்டதடா தமிழகமே!!
பிறப்புச் சான்று முதல் நம்!
இறப்புச் சான்று வரை!
இலவசமாய்ப் பெற்றிடவே!
இல்லாத நிலைமையடா!!
அரசியலாரும் மெத்த!
அதிகாரியாரும் மக்கள்!
பணியாளர்களென்றே என்!
பள்ளியிலே சொன்னதுண்டு!!
எஜமானர் தானிங்கு!
எடுபிடிகளாகி விட்ட!
எழுதவொண்ணா நிலையிதனை!
எடுத்துச் சொல்வார் யாரோ?!
ஆகஸ்டு சுதந்திரத்தை!
அநியாயமாய்த் தொலைத்துவிட்ட!
அடிமைத் தமிழனே.... உன்னை!
அறிந்துகொள் தமிழனே....!
உண்மை!
தெரிந்துகொள் தமிழனே...!
மேடைபோட்டு உனக்குப்!
பாடைகட்டுவோரின் சொல்!
வேதமென்று துடித்திடும் நீ - அறியாது!
வேதனையில் துடித்திடுவாய்!!
உணர்ந்துகொள் தமிழா!
உனக்கு எல்லாவிடத்தும் உரிமை உண்டென்று!!
தெரிந்துகொள் தமிழா இத்!
தேசமே உனதென்று!!
செந்தமிழ் நாடிதனை!
எந்தமிழ் நாடென்றிட!
புறப்பட்டு வாராயோ!!!
புதுப் புரட்சியைத் தாராயோ!!!!
!
- மு. கந்தசாமி நாகராஜன்.!
சுப்பிரமணியபுரம்.!
--------------------------------!
பிறந்தது மறக் குலத்தில் - அவன்!
பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில்;!
சிறந்தது பார்ப்பன ருள்ளே; - சில!
செட்டிமக்க ளொடுமிகப் பழக்க முண்டு;!
நிறந்தனிற் கருமை கொண்டான்; - அவன்!
நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள்!!
துறந்த நடைக ளுடையான் - உங்கள்!
சூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான்