தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

என்றிலிருந்து ?

வினோபா
கண்களை நான் மொத்தமும் இழந்தது மிகச்சமீபத்தில்தான் !
திடீரென்ற விபத்தொன்றுமல்ல !
படிப்படியான நிகழ்வுதான் !
சோற்றுப்பானையில் நித்தம் பிடிக்கும் !
கரியாய். !
எனக்குச் சரியாக நினைவில்லை !
இன்றுதானென்று சொல்லமுடியாதபடிக்கு !
குன்றியிருக்க வேண்டும் தினம் தினம் !
சிதறியிருந்த பருக்கைகளை !
சரியாய் துடைக்காமல் !
சிறுவன் அடிவாங்கிய போது !
ஆற்றிக் குடித்துவந்த காப்பி !
அடி நாக்கில் கச்கிறது இன்று. !
படித்திருந்தால் அவன் அஞ்சாங்கிளாஸ் !
அதற்கும் முன்னர்தான் துவங்கியிருக்கவேண்டும் !
என் பார்வைக் குறை !
நெருக்கம் அதிகமில்லா ரயில் பயணத்தில் !
ஒவ்வொரு நிருத்தத்தின் போதும் !
சம்பிரதாயத்திற்கேனும் வாங்கிக்குடித்த !
“டீ காபி பாலுக்கு” அஞ்சு ரூபாய் கேட்டு நீட்டிய பிஞ்சுக் கையில் !
சிவப்புக் கோடாய் பால் பாத்திர பாரம் !
மிச்சக்காசை எண்ணின (என்)கண்கள். !
!
அன்றையிலிருந்தா ? !
பட்டாசுக் கம்பெனி தீ விபத்தில் !
பதினஞ்சு குழந்தைகள் வெந்ததிற்கும், !
பம்பாயில் மீட்ட சிறுமிகளுக்கும் சேர்த்து !
உணர்ச்சிகளற்ற இரண்டு ”த்சோ”க்களை மட்டும் உதிர்த்துவிட்டு !
சேனலை மாற்றியபோதும் உணர்ந்தேனில்லை !
நான் முழுக்குருடனென்பதை !
சொச்சமேனும் மீந்து கிடந்த மனிதம் உரைத்தது !
இன்னும் கை சூப்பும் தம்பியை !
இடுப்பில் சுமந்தபடி !
குட்டிப்பாப்பா ஒருத்தி !
கால்சட்டையை பிடித்துச் சொடுக்கி !
கசக்கிப் பிழிகிற தொனியில் !
”சார்....” என்று யாசித்தபோது

நானுன்னை காதலிக்கிறேன்

பாஷா
பாஷா !
ஏன் சுரேஷ்.... !
ஏனென்றால் நானுன்னை !
காதலிக்கிறேன் !
கேட்கப்படும் உன் !
கேள்விகளுக்கெல்லாம் ஒரே !
பதிலாக சொல்ல முடியவில்லை !
நேசிக்கிறாயா !
என் நினைவால் !
தேய்ந்துகொண்டிருக்கிறாயா, !
பாசம் வைத்திருக்கிறாயா, !
என் ஆழ்ந்த இதயத்தின் !
இருள் பள்ளத்தாக்குகளில் !
ஊறும் என் அன்பு !
உன்னிடம் அடைக்கலமாக !
உன் மனக்கதவு !
திறந்திருக்கிறதா, !
என்ன செய்துகொண்டிருக்கிறாய் !
என்ற உறுதிசெய்ய முடியாத அவஸ்தையில் !
உயிர் தீண்டிகொண்டுதானிருக்கிறாய் நீ! !
என் காதலை !
ஏற்பாயா !
எதிர்ப்பாயா !
எதுவெனினும் உன்னை !
பார்க்காத நாளும் !
நினைக்காத நெஞ்சமும் !
நெருப்பில் வேகட்டும்

காதல் தீபம்

கலாநிதி தனபாலன்
விண்ணினைத் தொட்டிடும் விரக தீயினால் !
விழி எனும் விளக்கிலே விாித்த!
விருப்பு எனும் நெடும் திாியிலே!
தீபம் ஏற்றினாள் காதல் தீபமேற்றினாள்!
மாம்பழ மதுரமேனி மங்கையின் கண்ணிலே!
கண்ட காதலால் கன்னியுடன் சென்று!
காமம் கலந்துண்டு களிப்புற்று கழித்திட்ட!
கனிந்த பொழுதுகள் காலத்திற் புதியது!
மனம் புதியதென்று பூமகளைப் புாிகையிலே..!
நெருப்பென்ன நின்ற நெடும் குமாி!
நெருங்கி வந்ததுவும் நிசம் தானோவென்று!
நின்று நினைக்கையிலே கருத்தைப் பிழைப்பித்து!
கட்டியவள் அணைக்கையிலே காதல்தான் பெருகியது!
ஆசையினாலுண்டான அறியாத ஆயிரமாயிரம் உணா்வுகளில்!
அன்பேதான் ஆதிக்கம் செலுத்தியது ஆதலினால்!
அழகுத் திருமகள் ஆசையுடன் கூடிவந்து!
கொண்டு வந்த காதலெனும் தீபமது!
ஆண்டாண்டு காலமதாய் அணையாது எாியட்டும்

1971 ஏப்ரல் 2004¢

ரவி (சுவிஸ்)
1971ஏப்ரல்2004 !
சேய்! !
என்னைத் தண்டித்துவிடு !
உனது புதைகுழியை !
தென்னமெரிக்கக் காற்றில் விதைத்து !
புரட்சியின் குறியீடாய்ப் போனவன் நீ. !
உன்முன் நான் மண்டியிடுகிறேன் !
என்னைத் தண்டித்துவிடு, நான் !
ஓர் இலங்கையனாய்ப் பிறந்ததிற்காய். !
சேகுவேரா !
உனது பெயரில் ஓர் ஏப்ரல் கிளர்ச்சி !
வெடித்து பின் !
சிதறிப்போய் முப்பத்திமூன்று ஆண்டுகளாகிறது. !
இன்றும் சேகுவேரா என்றால் உனது !
பெயரென்றறியாமல் !
தவறியிருப்பவர்களிடம் நினைவில் !
வந்துபோபவர்களை உனக்குக் காட்ட !
வெட்கப்படுகிறேன். !
உனது தாடியை பிரதிபண்ணியதற்கும் அப்பால் !
சம்பந்தமற்றுப்போனவர்கள் அவர்கள். !
கிளர்ச்சியின் நாயகர்களாய் !
வதந்திகளை நாளுக்குநாள் காற்று !
எழுதிக்கொட்டிய அந்த நாட்களில் நாம் !
திகில்கொண்டிருந்தோம் !
புரட்சியை ஒரு மாயக்குகைபோல் !
அவசர அவசரமாய்ப் புனைந்துகாட்டி பின் !
தோற்றுப்போனார்கள். !
எல்லாம் போயிற்று !
வதந்திகள் பிணங்களின் எண்ணிக்கையையும் !
இந்திய இராணுவத்தின் கொலை வெறியாட்டத்தையும் !
காவி வரவர !
ஊதிப் பெருத்த செய்திகளில் நாம் !
களைப்படைந்தோம். !
அழகுராணி மன்னம்பெரியை நிர்வாணமாய் !
வீதியில் நடத்தி பின் !
கொலைசெய்த பொலிஸ்கோரத்தில் !
மனிதம் அதிர்ந்துநிற்க, உலகின் முதல் !
பெண் பிரதமர் அரசவைக் கட்டிலை !
அலங்கரித்துக்கொண்டிருந்தார். !
இப்படியாய் !
பரம எதிரியாய்ப் போனோர் இன்று !
தேர்தலில் ஓரணியான புதினம் !
இருக்கிறதே பார், சொல்லிட !
வெட்கப்படுகிறேன் நான் ஓர் !
இலங்கையனாய்ப் பிறந்ததில். !
இளைஞர்களேயற்ற கிராமங்களையும் !
பிணங்கள் காவிய களனிகங்கையையும் !
நிர்மாணித்ததில் !
கொலைக்கரங்களிற்குக்கூட வலி எடுத்திருக்கும். !
உயிர்களை புதைகுழிக்குள் கொழுவி !
வீசியதில் !
கடிகார முட்களும் சோர்வுற்றிருக்கும். !
சோசலிசக் கனவுகளோடு புதைக்கப்பட்ட !
தோழர்களின் புதைகுழியில் !
மலர்களுக்குப் பதில் !
இனவாத முட்களோடு அஞ்சலிக்காய் !
அணிவகுக்கின்றனர், உனது பெயரில் !
முன்னர் புயல்கொண்டவர்கள். !
இதற்காய் !
வெட்கம்கொள்ள ஏதும் இல்லை எனின் !
அம்மணமாய் நான் வீதியில் !
நடப்பது ஒன்றும் அசாதாரணமல்ல. !
தண்டித்துவிடு, !
என்னைத் தண்டித்துவிடு! !
உன்முன் நான் மண்டியிடுகிறேன் !
என்னைத் தண்டித்துவிடு சே, நான் !
ஓர் இலங்கையனாய்ப் பிறந்ததிற்காய்! !
- ரவி (சுவிஸ்,160204)

அக்கறை/ரையை யாசிப்பவள்

எம்.ரிஷான் ஷெரீப்
அன்றைய வைகறையிலாவது!
ஏதாவதொரு அதிசயம் நிகழக்கூடுமென!
படிப்படியாயிறங்கி வருகிறாள்!
சர்வாதிகார நிலத்து ராசாவின்!
அப்பாவி இளவரசி !
அதே நிலா, அதே குளம்,!
அதே அன்னம், அதே பூங்காவனம்,!
அதே செயற்கை வசந்தம்!
அதுவாகவே அனைத்தும் !
எந்த வர்ணங்களும் அழகானதாயில்லை!
எந்த மெல்லிசையும் புதிதானதாயில்லை!
எந்த சுதந்திரமும் மகிழ்வூட்டக் கூடியதாயில்லை !
நெகிழ்ச்சி மிக்கதொரு!
நேசத் தீண்டலை!
அவள் எதிர்பார்த்திருந்தாள்!
அலையடிக்கும் சமுத்திரத்தில்!
பாதங்கள் நனைத்தபடி!
வழியும் இருளைக் காணும்!
விடுதலையை ஆவலுற்றிருந்தாள்!
காவல்வீரர்களின் பார்வைக்குப் புலப்படா!
மாய உடலையொன்றையும் வேண்டி நின்றாள்!
அவள் நிதமும் !
அப் புல்வெளியோடு!
வானுக்குச் சென்றிடும் மாய ஏணியொன்றும்!
அவளது கற்பனையிலிருந்தது !
இப் பொழுதுக்கு மீண்டும் இக்கரை தீண்டா!
ஒரு சிறு ஓடம் போதும்!
எல்லை கடந்துசென்று!
சுதந்திரமாய்ப் பறக்கும் பட்சிகள் பார்க்கவென!
அச் சமுத்திரத்தின் அக்கரையில்!
அவளுக்கொரு குடில் போதும்

பிம்பம்

புதியமாதவி, மும்பை
புதியமாதவி, மும்பை!
உடைந்து போன!
கம்பீரங்களின்!
அதிர்ச்சியில்!
சிதறிக்கிடக்கும் பிம்பங்கள்!
பொறுக்கி எடுக்கும்!
ஒவ்வொரு கணமும்!
மீண்டும் மீண்டும்!
விசவரூபமெடுக்கின்றன!
ஒவ்வொரு துண்டிலிருந்தும்!
வெவ்வேறு முகங்களுடன்.!
உன் நிஜங்கள்.!
ரசிக்கவும் முடியாமல்!
கடக்கவும் தெரியாமல்!
கவனமாக எடுத்தாலும்!
காயப்படுத்தும்!
கண்ணாடிச்சில்லுகளில்!
பதிந்துபோனது!
பலகீனரேகைகள்!
புரிந்ததாக நினைத்து!
புன்னகைப் புரியும்!
ஒவ்வொரு கணமும்!
மாயவித்தைகளில்!
மயங்கிவிடுகிறது!
நமக்கான!
நம் புரிதல்கள்

தீக்குச்சி

முத்து குமரன்
கவி ஆக்கம் க.முத்துக்குமரன்!
தீண்டலுக்காக!
காத்திருக்கும்!
தீயிளவரசி!!
பற்றும் முன்!
பெட்டியிலும்!
பற்றியபின்!
தொட்டியிலும் வசிக்கும்!
பிதாமகன்!!
பெயரில்!
“தீ” யை சுமக்கும்!
தற்கொலைவாதி!!
விளக்கிற்கு!
வாழ்க்கை கொடுத்துவிட்டு!
தன் வாழ்வை!
இருளாக்கி கொள்ளும்!
தியாகி!!
பஞ்சபூதங்களில்!
“ஓரினம”; என்பதை!
தலைக்கனத்தோடு!
உருவகத்தில் சொல்லும்!
“பேரினம்: !!!!
!
கவி ஆக்கம் க.முத்துக்குமரன்

எதார்த்தம்.. விட்டுக்கொடுத்தல்..தடங்கள்

செல்வராஜ் ஜெகதீசன் - அபுதாபி
01.!
எதார்த்தம்!
---------------!
!
நான் இருந்தேன்!
நீ வந்தாய்!
நாம் ஆனோம்.!
!
நீ சென்ற பின்னும்!
நான் இருக்கிறேன்.!
!
ஒன்று நீங்கிடில்!
மற்றொன்றும்!
உயிர் துறப்பது!
!
பறவைகளில் !
வேண்டுமானால்!
பழக்கமாய் இருக்கலாம்.!
!
மனிதனுக்குத் !
தெரியும்!
சேர்ந்துபோவதில் உள்ள!
சிக்கல்கள்.!
02.!
விட்டுக்கொடுத்தல்!
-----------------------!
எவருக்கும்!
இயலக்கூடும்.!
காதலுக்காக !
காதலியை !
விட்டுக்கொடுத்தல். !
!
எவருக்கேனும் !
இயன்றதுண்டோ?!
காதலுக்காக !
காதலையே !
விட்டுக்கொடுத்தல்.!
!
03.!
தடங்கள் !
------------ !
எப்போதும் போல்தான் !
இருக்கிறது. !
என்னையும் உன்னையும்!
பிரித்த நிலா.!
!
இப்போதும் முத்தமிட்டுக்கொண்டுதான் !
இருக்கின்றன. !
எதிர்வரும் அலைகளோடு!
உள் வாங்கும் அலைகள்.!
!
நீ விட்டுப்போன !
தடங்களோடு நான். !
இங்கேயும் அங்கேயும்.!
!
இன்றும் நீ வராமலே !
இருந்திருக்கலாம். !
ஏனைய நாட்களைப் போல.!
!
-செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

பசியடங்கா மனிதன்

தோழன் மபா
நீ !
நேற்றுவரை !
துள்ளித் திரிந்திருப்பாய்.!
ஓடி !
விளையாடியிருப்பாய்.!
மிட்டாய்க்காக!
முகம் மலர்ந்திருப்பாய்.!
இன்றுன்னை!
கொன்றதாரென்று!
அறிந்திருப்பாயா....?!
ரசாயனக் குண்றென்றார்!
விஷவாயுவென்றார்.!
அரசு ராணுவமென்றார்!
கிளர்ச்சியாளர் கூட்டமென்றார்!
கொன்றது!
எப்படியாயினும்!
யாராகினும் !
கொல்லப்பட்டது!
நீதானே....?!
மனிதன் தின்ற!
மழலைகளின் !
மாமிசம் !
என்றேன் !
நான்.!
இன்னும்!
பசியடங்கா !
மனிதன் -இருந்தால்!
வரலாம்!
சிரியாவுக்கு!
பசியாற...?!
!
குறிப்பு: சிரியா டாமஸ்கசில் அரசு ராணுவத்தினரால் விஷ வாயு குண்டு வீசிக் ஒன்றுமறிய மழலைகள் கொல்லப்பட்டுள்ளனர். . இத் தாக்குதலில் சுமார் 1500 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர்.!
அந்த குமுறலே எனது கவிதையாக வெளிவந்துள்ளது

பம்பரம்

அகரம் அமுதா
கவி ஆக்கம்: அகரம் “அமுதா” !
ஒற்றைக் காலில் நின்றபடி !
உன்னை என்னை பார்த்தபடி !
சற்றே காற்றை கிழித்தபடி !
சுற்றும் பம்பரம் சொல்வதென்ன? !
நிலையே இல்லா இவ்வாழ்வில் !
நிலைத்து வாழ வேண்டுமென்று !
நில்லா துழைத்தல் வேண்டுமென்று !
நிற்கும் பம்பரம் சொல்கிறது! !
ஊனம் உடலில் இல்லையென்றும் !
உள்ளத் தில்தான் உள்ளதென்றும் !
காணும் பேரைக் கூப்பிட்டு !
கனிவுடன் பம்பரம் சொல்கிறது! !
வட்டத் துள்ளதை சிறைவிடுத்து !
வாழ்வளித்திடும் தன்னைபோல் !
இட்டமுடனே இல்லார்க்கு !
இயன்றது செய்திட இயம்பிடுது! !
தலைக்கனம் கொண்டு ஆடுவதால் !
தாழ்வே வந்து சேருமென்று !
தலையை ஆட்டித் தக்கபடி !
தன்மையாய் பம்பரம் சொல்கிறது! !
தன்னைச் சுற்றும் சாட்டடைக்கே !
தன்னை வழங்கும் பம்பரம்போல் !
உன்னை சார்ந்த உறவுக்கு !
உன்னை ஈந்திடு என்கிறது! !
சொந்தக் காலில் நிற்பதுதான் !
சுகத்திற் சிறந்த சுகமென்றும் !
அந்தப் பம்பரம் சொல்கிறது !
ஆழகாய் நிமிர்ந்து நிற்கிறது! !
!
கவி ஆக்கம்: அகரம் “அமுதா” !
தொடர்பு:006592468200