கானல் பூக்கள் - வல்வை சுஜேன்

Photo by Jan Huber on Unsplash

ஒட்டிய வயிறும் கந்தல் உடையும்!
தெருநடை ஓரத்தில் பிச்சை தட்டுடன் நான் !
கானல் வீதியில் சருகாகும் பூக்களில் !
என்னைபோல் ஏராளம் சிறார்கள் இங்கே !
இனப் படுகொலை அரசின் மயானத்தில்!
என் குடும்பத்தில் எஞ்சிய எச்சம் நான்!
எச்சில் சோறேனும் தருவாரா என!
சுற்றத்தை பார்க்கிறேன்!
விழியில் வீழ்ந்து வளியும் வேர்வைத் துளி!
எரிவை தந்து காய்கிறது!
என் தாகத்தை தணிக்கவில்லை !
எனக்காகத்தான் கனிந்ததோ தெரியவில்லை !
தெருவோர கால்வாய்க்குள் ஒரு தோடம்பழம் !
நிறம் மாறினாலும் முக்குளித் தெழுந்து !
என் முகத்தை பார்க்கிறது !
விடுவேனா அதை துடைத்தெடுத்து !
சுளை உரித்துண்டு !
களைப்பை போக்கிக்கொள்கிறேன்!
எங்கிருந்தோ வந்த ஓர் நல்லிதயம்!
ஒத்தை ரூபாயை என் தட்டில் !
இட்டுச் செல்கிறது!
தேனீருக்கும் அது போதாத காசு !
யாம் இருக்க பயம் ஏன் ! விளம்பர பலகையோடு!
என் எதிரே ஓர் தேனீர் கடை!
அதன் கண்ணாடி பெட்டிக்குள் சீனிபணிஸ்!
கண்ணுக் கெட்டியது வாய்க்கெட்டுமா!
காத்திருக்கிறேன் இன்னு ஒரு ஒத்தை ரூபாவிற்காக.!
வல்வை சுஜேன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.