நம்மைத் தொடருகிற போர் - தீபச்செல்வன்

Photo by Tanjir Ahmed Chowdhury on Unsplash

01!
போரே தீர்வென்று கோடுகளின் கீழாய்!
எழுதிச் செல்கிறேன்!
எல்லாம் மாறி உடைத்த பொழுதும்!
போர்க்களங்களின் முகங்கள் மாறவில்லை!
யுத்தம் உன்னையும் என்னையும்!
தின்பதற்காய் காத்திருக்கிறது!
காலம் நம்மிடம் துப்பாக்கியை!
வழங்கிவிட்டு மௌனமாக கிடக்கிறது.!
கருத்தப்பூனையைப்போல!
கருணாநிதி!
மேடையிலிருந்து இறங்கிச் செல்கிறார்!
நேற்றிலிருந்து கருணாநிதி கவிதைகளிலிருந்து!
பூனைகள் வெளியேறுகின்றன!
வாய் கட்டப்பட்டவர்களின்!
பேரணிகளிலும்!
பூனையின் கறுத்த மௌனம் ஊடுருவுகிறது.!
புல்லரித்து முடிந்த நிமிடங்களில்!
வாய்களை மூடும் தீர்வு போரைப்போல வருகிறது!
முப்பது வருடங்களை இழுபடுகிற!
போரை உணவுப்பைகளில்!
கறுத்தப்ப+னைகள் அடைக்கின்றன.!
02!
போர் தீர்வென்று வருகையில்!
நமக்கு போராட்டம் தீர்வென்று மிக கடினமாக!
ஏற்றுக்கொள்ளப்பட்டோம்!
விமானங்களை நம்பியிருக்கும்வரை!
குண்டுகளை நம்பியிருக்கும்வரை!
துப்பாக்கிகளை நம்பியிருக்கும்வரை!
நாமது கைகளிலும் துப்பாக்கிகள் வந்தன!
நமது பதுங்குகுழி விமானமாய் பறக்கிறது.!
போர்க்களங்களில் தீர்வுகள்!
இலகுவாகிவிட்டன!
நீயும் நானும் பெற்றெடுக்கும் குழந்தை!
உயிர் துறக்கப்போகும் இந்தப்போர்க்களம்!
நம்மோடு முடிந்துபோகட்டும்!
விமானங்கள் மனங்களை தீர்மானித்து விட்டன!
மிகக்கொடுரமான அனுபவத்திலிருந்து!
நமது விமானங்கள் எழும்புகின்றன!
எனது காயத்திலருந்து வெளியேறுகிற!
குருதி காவலரணை கழுவுகிறது!
03!
ஓவ்வொரு செய்தியின் கீழாயும்!
மறைக்கப்பட்ட குறிப்புக்களை நீ கண்டாய்!
அதன் மேலொரு கோடு கீறினேன்!
பயங்கரவாதிகளை அழித்துச் சென்ற!
விமானங்களின் கீழாய்!
பள்ளிச்சிறுவனின் முகம் பதிவுசெய்யப்பட்ட!
புகைப்படத்தை நீ கண்டாய்!
விமானங்களும் அதன் இரைச்சல்களும்!
நம்மை மிரட்டிக்கொண்டிருந்தன!
ஒரு விமானத்தைப்போல ஜனாதிபதி பேசுகிறார்!
ஒரு எறிகனையைப்போல!
இராணுவத்தளபதி வருகிறார்.!
கருணாநிதி ஒரு கிளைமோரை!
பதுங்கியபடி வைத்துச்செல்கிறார்!
04!
அழுகை வருகிறது!
தோல்வியிடம் கல்லறைகள்தானே இருக்கின்றன!
எனினும் இந்த மரணம் ஆறுதலானது!
அதில் விடுதலை நிரம்பியிருந்தது!
இரண்டு வாரங்களில்!
எடுத்துப்பேச முடியாத போரை!
நாம் முப்பது வருடங்களாக சுமந்து வருகிறோம்!
நம்மிடமே நம்மை தீர்மானிக்கும்!
சக்தி இருக்கிறது!
மரணங்கள் பதிலளிக்கும்பொழுது!
குருதியில் மிதக்கிற கதிரைகளை பிடித்துவிடுகிற!
அரசியல்வாதிகளிடம்!
நாம் முப்பது வருடங்களாக ஏமாறுகிறோம்.!
அழகான வாழ்வுக்காய் பிரயாசப்படுகையில்!
உலகம் மாதிரியான!
குண்டுகள் அறிமுகமாகிவிட்டன!
மிகவும் கொடூரமாக மேற்க்கொள்ளப்படுகிற!
போரை எதிர்க்கும் பொழுது!
துப்பாக்கிகள் வாழ்வில் ஏறிவிட்டன!
நீ போரின் நுட்பங்களில் கவனம் செலுத்துகிறாய்.!
05!
பிரித்து ஒதுக்கி ஒடுக்கப்படகிறபொழுதுதான்!
இனம் குறித்து யோசிக்கத்தோன்றுகிறது!
எனக்கு இந்தக் கல்லறைகளை!
எண்ணி முடிக்க இயலாதிருக்கிறது.!
படைகள் புகுந்துநிற்பதாய்!
கனவு காண்கையில்!
தூக்கம் வராத நாட்களாகின்றன!
வீட்டுச்சுவர்கள் தகர்ந்துவிட!
பேய்கள் குடிவாழ்கின்ற கிராமங்களில்!
திண்ணைகள் கொலை செய்யப்பட்டிருக்க!
எப்படி தூக்கம் வருகிறது!
அதுவே தீர்வாகையில்!
கை துப்பாக்கிளை இறுகப்பிடிக்கிறது.!
தீர்க்கமுடியாத பிரச்சினைகள்!
போர்க்களத்தில் சுடப்பட்டுக்கொண்டிருந்தன!
நம்மை துரத்துகிறபோர் மிகவும் கொடூரமானது!
அதன் பின்னால்!
அழிகிற இனத்தின் நகரங்கள்!
புரதானங்கள் குறித்து!
சன்னம் துளைத்துச் செல்கிற சுவர்களைத்தவிர!
எதனால் பேசமுடிகிறது?!
06!
நீ போர் அழகானது என்றாய்!
உன்னால் போரில் நசியமுடியாதிருந்தது!
அம்மா பின்னால் நிற்க!
நான் சுட்டுக்கொண்டிருந்தேன்!
நான் போரை சமாளிக்க வேண்டியிருந்தது.!
நம்மால் சட்டென பேசமுடிகிறது!
துப்பாக்கிகளைத்தான் இறக்க முடியவில்லை!
மிகவும் விரைவாக சுட்டுவிட முடிந்தது!
மரணங்களின் பிறகு போர்க்களம்!
அடங்கிக்கிடக்கிறது!
நேற்று நம்மைப்பற்றி பேசியவர்கள்!
மேடைகளைவிட்டிறங்கி!
கதிரைகளில் மாறிக்கொண்டிருந்தார்கள்.!
படைகளும் நகரத் தொடங்க!
நாம் மீண்டுமொரு சமருக்கு!
எதிராக தயாராகினோம்!
சிறுவர்கள் இழுத்துச் செல்லுகிற!
தண்ணீர்க் குடங்களை போர் தொடருகிறது.!
!
-தீபச்செல்வன்!
8.35, 31.10.2008
தீபச்செல்வன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.