இரணைமடு - தீபச்செல்வன்

Photo by Tengyart on Unsplash

01!
காலாவதியான ஒரு!
கொக்கக்கோலாவை சுற்றி!
எறும்புகள் சூழ்ந்திருந்தன.!
எனது வஸ்திரங்கள் கரைய!
அதிகாரத்தின் முன்!
நிருவாணமாய் நின்றிருந்தேன்!
அது என்னை அடிமையாக்கி!
பயங்கரவாதி என அழைத்தது.!
புரட்சி ஒன்றின் விளிம்பில்!
அடிமை பீடிக்கிறதை!
நான் உணர்ந்தேன்!
கூச்சலிட்டு சொல்லி உதருகிறேன்.!
சனங்கள் நிறைந்த!
எனது கிராமத்தின் மேலாக!
வேக விமானம் ஒன்றை!
உக்கிரேன் விமானி ஓட்டுகிறாள்.!
பயங்கரவாதிகளுக்குள்!
பதுங்குகுழிகள் பதுங்குகின்றன.!
குழந்தைகள்!
தாய்மார்கள்!
முதியவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள்!
என ஜநா அறிவித்தது.!
நான் பயங்கரவாதி என்பதை!
உரத்து சொல்கிறேன்.!
என்னை அமெரிக்காவின் நேர்மை!
தேடிவருகிறது!
ஜநா படைகளும்!
அமெரிக்காப் படைகளும்!
இந்தியப் படைகளும்!
இலங்கைப்படைகளைப்போல!
எனது தெருவுக்கு வர!
ஆசைப்படுகிறார்கள்.!
நான் அப்பிள் பழங்களை!
புசிப்பதற்கு ஆசைப்பட்டிருக்கிறேன்.!
கிரேப்ஸ் பழங்களை!
உற்பத்தி செய்யத்தொடகினேன்.!
நான் ஒலிவம் இலைகளை!
மறந்திருந்தேன்!
பேரீட்சை பழங்களை!
உண்ணாதிருந்தேன்!
எனது பனம்பழங்களை!
இழக்க நேர்ந்தது.!
ஒட்டகங்களின் முதுகில்!
குவிந்திருந்த பொதிகள்!
சிதைந்ததை நான் மறந்தேன்!
எனது மாட்டு வண்டிகள்!
உடைந்து போயின.!
தலைவர்களின் இடைகளில்!
எண்ணைக்குடங்கள் நிரம்பியிருந்தன!
அவர்களின் கூடைகளில்!
எனது பனம்பழங்கள்!
நிறைக்கப்பட்டிருந்தன.!
கனியின் விதை கரைய!
என்மீது கம்பிகள் படர்ந்தன.!
02!
திருவையாற்றில் குருதி!
பெருக்கெடுத்து ஓடுகிறது!
பிணங்களை அள்ளிச் செல்கிறது!
வெங்காயத்தின் குடில்கள்!
கருகிக்கிடந்தன!
தோட்டம் சிதறடிக்கப்பட்ட!
செய்தியை அமெரிக்கா வாசிக்கிறது.!
இரணைமடுவில் பறவைகளின்!
குளிர்ந்த சிறகுகள் உதிர்ந்தன!
தும்பிகளும் நுளம்புகளும்!
எழும்ப அஞ்சின!
இரணைமடுக்குளத்தில்!
குருதி நிரம்ப பிணங்கள் சேர்ந்தன!
நோர்வேயின் படகு மிதக்கிறது.!
இந்தியாவும் பாகிஸ்தானும்!
ஆயுதங்கள் பெருக!
எனது ஊரின் நடுவில்!
போரிட்டுக்கொண்டிருக்கிறது.!
உலைப்பானைகளும்!
அடுப்புகளும் சிதைய!
எனது மனைவி நசிந்து கிடந்தாள்.!
எனது வீதியை ஜப்பான்!
சுருட்டி எடுத்தது!
அமெரிக்காவும் ஜநாவும்!
எனது குழந்தையை!
பள்ளியோடு கொன்று விட்டது!
பிரித்தானியாவின்!
சிறையில் நானிருந்தேன்.!
ஒரு மாம்பழத்தை தின்பதற்கு!
எல்லோரும் அடிபட்டு!
எனது காணியை சிதைத்தார்கள்!
கத்திகளை இன்னும்!
கூர்மையாக்கி வருகிறார்கள்.!
இந்தியாவும் அமெரிக்காவும்!
எனது தலையில்!
காலுன்ற அடிபடுகிறது!
சீனாவும் ரசியாவும்!
எனதூர் ஆலயத்தின்!
கூரைகளை பிரித்துப்போட்டது.!
நான் முதலில் அமெரிக்காவிற்கு!
பதில் சொல்ல வேண்டும்!
கோதுமைகளுடன்!
அமெரிக்காவின் கப்பல்!
திருமலைக்கு வருகிறது!
அமெரிக்கா எனது படத்தை!
குறித்திருந்தது!
ஜநா எனது குழந்தையின் படத்தை!
குறித்திருந்தது.!
எல்லாவற்றக்காகவும்!
வலிந்து விழுங்கிய!
அதிகாரங்களால்!
நான் பயங்கரவாதி எனப்பட்டேன்!
ஒடுக்கப்பட்டவர்களின் கூட்டத்தில்!
நான் தூக்கி எறியப்பட்டேன்.!
நமது ஓலங்களிற்குள்!
பெருகும் குருதி ஆறுகளிற்குள்!
சந்தைகள் பரவி நிகழ்ந்ததன.!
அமெரிக்கா இரணைமடுவுக்கு!
ஆசைப்படுகிறது.!
------------------------------------------------------!
தீபச்செல்வன்!
!
'இரணைமடு' ஈழப்போராளிகளான விடுதலைப் புலிகளின் விமானதளம் இருப்பதாக கூறப்படுகிற!
வடக்கின் முக்கிய தளமாகும். இப்பகுதி மீதும் இதனை அண்டியிருக்கும் பகுதிகள்!
மீதும் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து விமானத்தாக்குதல் நடத்தி வருகிறது
தீபச்செல்வன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.