உன் நினைவுகளின்!
ஆழுகைக்குள்!
என் நினைவுகள்!
தண்டவாளத்தில்!
பயணிப்பதுபோல்!
திருப்பங்களில்லாத!
பயணங்களில்!
இணையவேண்டிய இடம் வரை!
இரட்டையாகவே!
ஓடிக்கொண்டிருக்கின்ற தெருக்களில்!
சொல்லிக்கொள்ளாத மௌனம்!
இறங்குதலும் ஏறுதலுமான!
பயணங்களில்!
மீண்டும் ஒரு முறை!
சந்திக்க நேரலாம்!
அப்பொழுதாவது சொல்லி விடு!
பதில் தெரியாத!
கேழ்விகளுக்குத்தான்!
நீண்ட அர்த்தங்கள்!
ஏதாவது சொல்லி விடு!
மௌனித்து விடாதே!
உன் மௌனத்துக்குப் பின்!
மீண்டும் ஒரு சந்திப்புக்காக!
நான் காத்திருக்க நேரலாம்!
-ஸ்ரெபனி

ஸ்ரெபினி