எதிர்பார்ப்பு - ஸ்ரெபினி

Photo by Sven Finger on Unsplash

02.!
எதிர்பார்ப்பு!
----------------!
வாழ்கின்ற!
வாழ்க்கைக்கும்!
வாழ நினைக்கின்ற!
வாழ்க்கைக்கும்!
இடையில் நீண்ட!
நிரப்பப்படாத!
இடைவெளிகள்!
பாலைவனத்தில்!
தண்ணீர் போல!
ஓடிக்கொண்டிருக்கிற!
மேகங்களில் மழை!
தேடிக்கொண்டிருக்கின்றன!
வாடிப்போன பயிர்கள்!
தூரத்தில்!
இலக்கற்று!
புறக்கின்றன பறவைகள்!
புதிதாக எதையோ தேடி!
கண்டங்கள் தாண்டியும்!
சலிப்பற்ற இறக்கைகள்!
கணனியின்!
மின் திரையில்!
தினமும் எதையோ!
தேடிக்கொண்டிருக்கும்!
விழிகளில்!
வழமைபோலவே சலிப்பு!
விடியலும்!
இருள்தலும்!
ஒரே மாதிரி நடந்து!
பழகிப்போன பாதங்களில்!
பழகிப்போனது வலியும்!
அனைத்துமே!
திரும்பத் திரும்ப!
நிகழ்ந்து கொண்டே!
இருந்தாலும்!
எதிர்பார்ப்பு மட்டும்!
எப்போதும் புதிதாய்!
ஏதோ ஒரு விடியலில்!
எல்லாமே!
மாறிப்போகும்!
என்பது போல!
- ஸ்ரெபனி
ஸ்ரெபினி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.