மனிதநேயம்! - மன்னார் அமுதன்

Photo by Paul Esch-Laurent on Unsplash

தூரப் பயணத்தில்!
திடுக்கிட்டு உணர்கிறேன் !
விபத்தை!
மாடும், மனிதனும்!
மாம்பழங்களுமாய்!
கிடக்கிறது நெடுஞ்சாலை!
“உச்சு”க் கொட்டியவர்கள்!
ஓடிப் போய்!
அள்ளிக் கொண்டனர்!
“மாம்பழங்களை”
மன்னார் அமுதன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.