தேவதைகளின் மொழி! - மன்னார் அமுதன்

Photo by Amir Esrafili on Unsplash

பல்லிகளைக் காட்டி!
“ஊ.. ஊ..”!
பறவைகளைக் காட்டி!
“கீ.. கீ.”!
அடிக்கவோ !
பிடிக்கவோ போனால்!
“அப்பா ஹூ ஹூ”!
வாலாட்டி நாநீட்டி!
விளையாடி மறைகின்றன!
பல்லிகள்!
நாளை வருமாறு!
சொல்லி அனுப்புகிறாள்!
பறவைகளை!
தேவதைகளின் மொழியறிய!
நாயைக் காட்டி !
“தோ... தோ...” என்கிறேன்!
சிரித்து மறுத்து!
“நா....ய்..ய்” என்கிறாள்!
திக்கித்திக்கி
மன்னார் அமுதன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.