நம்பிக்கையூட்டும் மௌனத்தின் ஒலியை!
சுமக்கும் ஒரு மழைக்கால இரவில்!
அச்சமற்று துயிலே தயாராகுறேன்!
பழகிப்போன தவளைகளின் கத்தளை மறந்தபடி.!
இப்படியாய் பின் தொடரும் தூக்கத்தில்!
கனவு காண்பதற்கான அறிகுறி தோன்றி மறைகிறது!
மூடியே என் விழிகளுக்குள்.!
இருளடைந்து தூசிபடிந்து கிடக்கும்!
சிநேகங்களின் முரண் அவ்வப்போது!
மின்னலாய்இ இடியாய் மழை இராக்கனவை வேகப்படுத்தியது.!
ஆனால் நான் கனவை முறிக்கும் முயற்சியில்!
துயில் களைந்தேன்.!
அநாதரவாய் பெய்து கொண்டிருந்தது வெளியே மழை...!
ஜே.பிரோஸ்கான்