ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள்

மவுனம் தந்த பரிசு

மணிகண்டன் மகாலிங்கம்
காதலியை பிரிந்த பிறகு

பிரிவின் நினைவாக

மவுனம் தந்த பரிசு...

கண்ணீர்த்துளிகள்!

ஏழை

ரசிகவ் ஞானியார்
மகள் பூப்பெய்திவிட்டாள்
தாய்க்கும் இனி...
தாவணிதான்

இறுதிக் கண்ணீர்த்துளி

நவின்
இந்தியத் தாயின்
இறுதிக் கண்ணீர்த்துளி....

இலங்கை

நீரோடை

நவின்
அழுதவானம்
எழுதிப்பார்க்கும்
அந்தரங்க வரிகள்….

நீரோடை

வரதட்சனை

கி.சார்லஸ்
நாகரீகமாய் எடுக்கும் பிச்சை.
வரதட்சனை.  

தடுமாறும் தண்டவாளங்கள்

கவிதை காதலன்
நீ தடுமாறுகிறாயோ இல்லையோ,
உன்னால் தண்டவாளங்கள்
தடுமாறி தடம் மாறுகின்றன.
விபத்துகளுக்கு
உன்னை காரணம் காட்டப்போகிறதாம்

ரயில்வேதுறை

எப்படி சாத்தியம்?

அன்புடன் நிலா
கையளவு தான்
இதயமாம் . .
அறிவியல் சொல்கிறது!
பின் எப்பபடி
சாத்தியம் ?
ஆறடி நீ
அதற்குள்

தேர்தல் கூட்டணி

சரவணன்
அடிக்கும் கொள்ளையில்,
ஆளுக்கு எவ்வளவு?
தேர்தல் கூட்டணி!

கொள்ளையில் மக்களுக்கும்
பங்கு...ஓட்டுக்கு காசு

நிலவுக்கு வந்த கடிதங்கள்

குகன்
நிலவுக்கு வந்த
கோடி காதல் கடிதங்கள்
நட்சத்திரம்

முதல் காதல் கடிதம்

கலை. குமார்
முதல் காதல் கடிதம்.....
புதிதாய் படிக்கிறேன்..
நூறாவது முறையாய்....