காருண்யன்- !
!
இதயம் லயத்துடன் துடிக்க மாத்திரை !
சர்க்கரை குருதியில் எகிறாமல் ஊசி !
கொழுப்பின் கொன்றோலுக்கு கப்சூல் !
கை கால் மூட்டு வலிகளுக்குத் தைலம் !
உண்பது ஜீரணமாகவொரு பாயம் !
உபரியாம் மூலத்துக்கும் களிம்பு !
விடிந்தால் ஹொஸ்டல் பிள்ளையின் !
'தாக்குப் பிடிக்கேலாதினி' என்ற கடிதமுமோ !
வாடகைப்பாக்கியின் மூன்றாவது நினைவுறுத்தலோ !
வீட்டைக் காலிபண்ணச் சொல்லும் கட்டளையோ வரும் !
அந்திக்குள் வரும் கடன்காரனுக்கு புதுஆறுதல் !
வார்த்தைகள் தேடிக்கொண்டு இனிமேலும் !
சுகிர்தங்கள் புலர்வதாங் கனவில் !
இன்னமும் !
வாழ்ந்திருக்க ஆசை

காருண்யன்